தொடர்கள்
ஆன்மீகம்
எல்லாம் பஞ்சாங்கம் படி தான் - நமது நிருபர்

20220602105109669.jpg

நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் ராக்கெட்ரி நம்பி எபெக்ட் சமீபத்தில் இந்த படம் பற்றி நிருபர்கள் கூட்டம் நடத்தினார். மாதவன் அந்த கூட்டத்தில் ஒரு நிருபர் நம் முன்னோர்கள் விஞ்ஞான சாஸ்திரம் வானியல் கோள்கள் போன்றவற்றை முன்கூட்டியே கணித்து இருக்கிறார்கள் அதற்கும் இப்போது உள்ள நவீன விஞ்ஞானத்துக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் அதற்கு பதிலளித்த நடிகர் மாதவன் நிச்சயம் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி அதை கொஞ்சம் விளக்கமாக விவரித்தார்.

மார்ஸ் மிஷன் என்பது பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் வரை அந்த செயற்கைக்கோள் சென்று சேருவதை குறிப்பிடுவார்கள். அமெரிக்காவின் நாசா ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் 800 கோடி மில்லியன் 900 கோடி மில்லியன் என கோடிக்கணக்கில் செலவு செய்து கிட்டத்தட்ட 32 முறை முயற்சி செய்து இறுதியில் வெற்றி பெற்றார்கள் அவர்களின் அதிநவீன தொழில்நுட்பம் இதற்கு காரணம்.

இந்தியாவும் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்ப முடிவு செய்தது.ஆனால் இந்தியாவில் இருக்கும் என்ஜின் மிக சிறியது மற்ற நாடுகளை விட இந்தியாவின் வின்கலம் குறைவான தூரத்திற்க்கு தான் செல்லும். ஆனாலும் 2014ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா வெற்றிகரமாக செயற்கைக் கோளை அனுப்பியது இதற்கு காரணம் நீங்கள் சொன்ன அந்த முன்னோர்களால் அது சாத்தியமானது. ஆயிரம் வருடங்களுக்கு செலஸ்டியல்னு சொல்ற பஞ்சாங்கம் துல்லியமாக மற்ற கிரகங்களை தவிர்த்து நேரடியாக அனுப்பினார்கள் உங்களுக்கு இந்த தகவல் எப்படி தெரியும் என்று நீங்கள் கேட்கலாம்.

2022060210522389.png

நம்பி நாராயணன் மருமகன் அருணன் அவர் தான் மங்கல்யான் திட்டத்தின் இயக்குனர் அவர் இதை என்னிடம் விவரித்து சொன்னபோது எனக்கே ஆச்சர்யம். பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்டில் செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ செயற்கைக் கோளை அனுப்பியது அது வெற்றிகரமாகவும் வேலை செய்தது. மின்சாரம் இல்லாமல் சிறிய பட்ஜெட்டில் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது காரணம் பஞ்சாங்கம் தான் என்றார் நடிகர் மாதவன்.

இதற்கு மாதவனை ஏகத்துக்கு சதாயத்து நெட்டிசன்கள் கருத்து கதிர்வேலன் ஆக மாறினார்கள்.

20220602105432364.jpeg

ஆனால் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி இது பற்றி குறிப்பிடும் போது இது உண்மைதான் உலகம் முழுவதும் கோள்களின் நகர்வுகள் இதன் மாற்றங்களை கணிப்பது பஞ்சாங்கம் தான் இதனை ஆங்கிலத்தில் அதாவது ஆல்மனாக் என்பார்கள் இவற்றின் உதவியால் தான் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முடியும் ஒரு குறிப்பிட்ட கோளுக்கு செயற்கைக்கோள் அனுப்ப வேண்டுமென்றால் அந்தக் கோள் எங்கு நிற்கிறது என்பதை பஞ்சாங்கம் மூலம் கணிக்க முடியும் நடிகர் மாதவன் கூறியதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ஒரு வார்த்தை தான் தவறு மற்றபடி பஞ்சாங்கத்தின் உதவியுடன்தான் செயற்கைக்கோள்கள் துல்லியமாக ஏவப்படுகின்றன என்று சொல்லியிருக்கிறார் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி.