தொடர்கள்
பொது
தாய்மை... எம் தனியுரிமை... (அமெரிக்க அபார்ஷன் ஒரு அலசல்) - இந்துமதி கனேஷ்.

20220602011512134.jpg

ஒரு குழந்தையின் ஜனனத்தை விட இந்த வாழ்வில் நம்மை மகிழ்விக்க கூடியசெய்தி வேறு ஒன்றுமே இருக்க முடியாது. அன்றாடம் பல இழப்புகளும் வலிகளும்சந்திக்க வேண்டிய நிலையில் நாளை பற்றிய நம்பிக்கையை நமக்குள் விதைப்பதுபிஞ்சு குழந்தைகள் தான். இதனாலேயே தாய்மை என்றுமே புனிதமாகபோற்றப்படுகிறது. ஒரு குழந்தையை கருவிலேயே அழிப்பதென்பது கொலைக்குநிகரானதாக கருதப்படுகிறது. கருக்கலைப்பை எந்த பெண்ணும்விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை. அது கடுமையான விரக்தியால், இயலாமையால்அல்லது சில மருத்துவ காரணங்களுக்காக வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில்எடுக்கப்படும் துன்பியல் முடிவு.

ஒரு பெண் சுதந்திரமாக கருத்தடை பயன்படுத்துவதோ அல்லது கருக்கலைப்புசெய்து கொள்வதோ தான் ஆண்-பெண் சமத்துவத்தை அவள் பேணும் விதம் என்பதுதவறான புரிதல். எனினும் தன் உடல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தைஅவள் எதற்காகவும் விட்டுத்தர வேண்டியதில்லை, அது ஒவ்வொரு மனிதனும் பெறவேண்டிய அடிப்படை உரிமை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எப்போதுமேமருத்துவம் எல்லாருக்கும் பொதுவான ஒன்றாய் இருக்க முடியாது, சில நேரங்களில்கருக்கலைப்பினால் மட்டுமே குறிப்பிட்ட பெண்ணின் உயிரையும்ஆரோக்யத்தையும் மீட்டெடுக்கமுடியும் என்பது போன்ற சிக்கலான நிலைமைகள்ஏற்படுவதுண்டு. அந்தச் சூழலில் கருக்கலைப்பை நாம் தவறான ஒன்றாக பார்க்கவேண்டியதில்லை. சென்ற வாரம் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்று ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1973ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ரோ vs வேட்வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது அதற்குப்பின் அந்நாடு முழுவதும்கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது. அந்த வழக்கே ரோ vs வேட் வழக்கு என்றுஅழைக்கப்படுகிறது. இப்போது, அந்தத் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. இதன் மூலம், 22 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்புஉடனடியாக சட்டவிரோதமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி, அமெரிக்க பெண்கள் நலஅமைப்புகள் உள்பட பலர் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால்அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். மேலும் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக அந்நாட்டு பெண்கள் வீதியில் இறங்கிபோராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. யாரிந்த ரோ... வேட்அவர்களுக்கும் கருக்கலைப்பு சட்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதை நாம்அறிந்து கொண்டால் தான் நம்மால் இந்த சட்டத்தை முழுமையாக புரிந்துகொள்ளஇயலும்.

2022060213235400.jpg

ரோ எதிர் வேட் (Roe v. Wade, 410 U.S. 113 (1973), என்பது அமெரிக்க உச்சநீதிமன்றம் அமெரிக்க அரசியலமைப்பு கருவுற்ற பெண்கள் அரசின் தடையின்றிகருவைக் கலைக்க அனுமதித்துள்ளது என்ற தீர்ப்பை அளித்ததை குறிக்கும். இத்தீர்ப்பு, கருவைக் கலைக்க கூடாது என்ற நடுவண், மாநில அரசுகளின்சட்டங்களை செல்லாததாக்கியது. சேன் ரோ என்ற புனைப்பெயரை கொண்டநார்மன் மெக்கார்வே 1969ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தையை கருவுற்றார். அக்கருவை கலைக்க விரும்பினார், ஆனால் அவர் வசித்த டெக்ஸாஸ் மாகாணத்தில்கருக்கலைப்பு சட்டத்திற்கு புறம்பானது. இச்சட்டத்தை எதிர்த்து மாவட்டநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். டெக்ஸாஸ் சார்பில் அம்மாவட்ட அரசுவழக்கறிஞர் கென்றி வேட் வாதிட்டார். மூன்று நீதிபதிகள் உள்ள அமர்வு ரோவுக்குஆதரவாக தீர்ப்பளித்தது. டெக்ஸாஸ் மாநிலம் இத்தீர்ப்பை எதிர்த்து அமெரிக்கஉச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

ஜனவரி 1973இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த ஒன்பது பேரில் ஏழு பேர் ரோவுக்குஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தம்தனிநபருக்குத் தனியுரிமையை வழங்குவதால் அது எச்சமயத்தில் கருவைக்கலைக்கலாம் என்ற உரிமையை கருவுற்ற பெண்ணுக்கு வழங்குகிறது என்றனர். இந்த உரிமையானது முழுமையானது அல்ல என்றும் அரசு பெண்களின் உடல்நலனிலும் பேறு காலத்திற்கு முந்தைய நலனிலும் அக்கறையுடன் இருப்பதுடன்சமப்படுத்தி செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியது.

'ரோ' வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும்சர்ச்சைக்குரிய ஒன்றாகும். சட்ட சமூகத்தில் உள்ள சிலரால் "ரோ" கடுமையாகவிமர்சிக்கப்பட்டார். கருக்கலைப்புக்கு எதிரான அரசியல்வாதிகளும், ஆர்வலர்களும்பழமைவாதிகளும் பல வருடங்களாக இம்முடிவை முறியடிக்க முயன்றனர். 2022 ஜூன் 24 அன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் "டொப்சு எதிர் ஜாக்சன் மகளிர்சுகாதார அமைப்பு" வழக்கில் ரோ எதிர் வேட் தீர்ப்பை ரத்து செய்தது.

ரோ vs வேட் தீர்ப்பில் கர்ப்பத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அதற்கேற்றவாறுகருக்கலைப்பு உரிமைகளை வழங்கி இருக்கிறார்கள். கர்ப்பத்தின் முதல் மூன்றுமாதங்களில்(first trimester) கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமை தரப்படும். இரண்டாவது மூன்று மாதங்களில், சில அரசுக் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்புசெய்ய அனுமதியளிக்கப்படும். கடைசி மூன்று மாதத்தில் கருப்பைக்கு வெளியேவாழக்கூடிய கட்டத்தை அந்த சிசு நெருங்கி விடுவதால் கருக்கலைப்புகளைகட்டுப்படுத்தவோ தடை செய்யவோ மாகாணங்களுக்கு உரிமைஅளிக்கப்பட்டது. இறுதி மூன்று மாதங்களில், ஒரு பெண்ணின் உயிரையோஉடல்நலத்தையோ காப்பாற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் சான்றளித்தால்மட்டுமே எந்தவொரு சட்டபூர்வ தடையையும் மீறி கருக்கலைப்பு செய்ய முடியும்என்பதை வலியுறுத்தியது இந்த வழக்கு.

20220602011708901.jpg

1973ல் வெளியான ரோ தீர்ப்பு பதின் வயத்தில் உள்ள பல இளம் பெண்களை மிகச்சிறு வயதிலேயே தாய்மை பேரை அடைவதிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. மேலும்கருவுற்றதால் வேறு வழியின்றி திருமணம்(shot gun marriage) செய்து கொள்ளவேண்டிய நிர்பந்தத்தை இந்த தீர்ப்பு அவசியமற்றதாய் மாற்றியது. இந்த தீர்ப்புமனித உரிமைக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக நிலவிவரும் நிலையில்எதனால் இந்த தீர்ப்பு இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம்உளவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால் மாகாணங்கள் தான் விரும்பியவகையில் கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றுஉரிமை வழங்கபட்டுவிட்டது. தீர்ப்பு வந்த உடனேயே பல மாகாணங்கள்கருக்கலைப்பை சட்ட விரோதமாக்கி விட்டன. இதனால் இந்த மாகாணங்களில்வசிக்கும் பெண்கள் பல மயில் தூரம் கடந்து பயணித்து கருக்கலைப்பு செய்துகொள்ள வேண்டிய சிக்கலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படி செய்யஇயலாதவர்கள் விருப்பமில்லாமல் வேறு வழியின்றி கருவை சுமக்க வேண்டிய நிலைஏற்படும், இது மனித உரிமைக்கு எதிரானது என்பதை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். இந்த கருக்கலைப்பு சட்டங்கள் கருவில் இருக்கும் குழந்தையைமட்டுமே கணக்கில் கொண்டு நிறுவபட்டிருக்கின்றன, அதை சுமக்கும் தாயின் உடல்மற்றும் மனநலம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதே கசப்பானஉண்மை. ஒரு வல்லரசு பெண்களை குழந்தை பெற்றுக் கொள்ளும் கருவியாகமட்டுமே பார்ப்பது முற்றிலும் தவறான நிலைப்பாடு, இது நிச்சயம் அந்த நாட்டிற்குபலத்த பின்னடைவை ஏற்படுத்தும்.

இவ்வளவு வருடங்கள் அமலில் இருந்த சட்டம் திடீரென்று தடை செய்யப்பட என்னகாரணம் இருக்க முடியும் என்று ஆராயும் போது பல புதிர்களுக்கு எளிதில் விடைகிடைக்கிறது. உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் ஆறுபேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். 2022ஆம்ஆண்டு மே மாதம், இவர்களில் ஒருவரான நீதிபதி சாமுவேல் அலிட்டோவின்வரைவில் குறிப்பிடப்பட்ட கருத்து ரகசியமாக வெளியானது. அதில் ரோ Vs வேட்தீர்ப்பு 'மிகவும் தவறானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குடியரசு கட்சியின்பழமைவாதிகள் கருக்கலைப்பை தடை செய்வதே சரி என்றுகூறிவந்திருக்கின்றனர், நீதிபதிகளில் ஆறு பேர் குடியரசு கட்சியால்நியமிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பில் இப்படி ஒரு திருப்பம் ஏற்பட குடியரசு கட்சிதூண்டுதலாக இருந்திருக்குமோ என்று நாம் யோசிக்கும் நிர்பந்தத்தில்தள்ளப்படுகிறோம். தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த தீர்ப்பினால்அமெரிக்கா 150 ஆண்டுகள் பின் தங்கி விட்டதாய் கூறுகிறார். மக்கள் தொகையைஅதிகரிக்கவே அரசு கருக்கலைப்பை தடை செய்துவிட்டது என்று நாம்நினைப்பதற்கு கூட சாத்திய கூறுகள் குறைவாகவே இருக்கிறது ஏனெனில்கருக்கலைப்புகள் தடை செய்யப்பட்ட மாகாணங்களில் மக்கள் தொகையும்அதிகமாகவே இருக்கிறது. அதே சமயம் கருக்கலைப்பிற்கு நிறைய கட்டுப்பாடுகள்விதிக்கும் போது பாதுகாப்பில்லாத கருக்கலைப்புகளின் விகிதம் அதிகரிக்கின்றன.

20220602011905524.jpg

அமெரிக்காவின் சட்ட திருத்தங்களை காணும் போது நம் இந்தியாவில் இந்தசட்டம் பெண்களின் பால் அக்கறை கொண்டதாகவே இருப்பதாகதெரிகிறது. இந்தியாவில், கருக்கலைப்பு தொடர்பான சட்டம் கடந்த ஆண்டுதிருத்தப்பட்டது, அதன் பிறகு கருக்கலைப்புக்கான 'செல்லுபடியாகும் காலம்' 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. இந்திய சுகாதாரம்மற்றும் நல்வாழ்வு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டு மார்ச் 16ஆம்தேதி, இந்தியாவில் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு (திருத்தம்) சட்ட மசோதாமாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்தியாவில் 1971ஆம்ஆண்டு மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டம் இருந்தது. அதில் திருத்தங்கள்செய்யப்பட்டுள்ளன. அந்த சட்டத்தின்படி, ஒரு பெண் 12 வாரங்கள் கர்ப்பமாகஇருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருக்கலைப்பு செய்யலாம் என்றுஇருந்தது. அதே நேரத்தில், 12-20 வாரங்களாக இருந்தால் அவர் இரண்டுமருத்துவர்களின் ஆலோசனை பெறவது கட்டாயமானது. 20-24 வாரங்களில்கருக்கலைப்பு செய்ய பெண் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் 24 வாரங்களுக்குபிறகு மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கும் குழந்தைக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படும்என்று அஞ்சி அதை உறுதி படுத்தும் பட்சத்தில் கருக்கலைப்பைபரிந்துரைப்பார்கள்.

இந்த கருக்கலைப்பு சட்டத்தால் அமெரிக்காவில் அதிகம்பாதிக்கப்படுபவர்கள் கறுப்பின பெண்களே. டெக்சாஸில் 70 லட்சம் பெண்கள், குழந்தை பிறக்கும் வயது கொண்டவர்கள். இதில் கறுப்பின பெண்கள் மட்டுமல்ல, சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் குறைந்தவருமானம் கொண்டவர்கள். கருக்கலைப்பு நடைமுறைக்கு செலவாகும் 550 டாலரை விட குறைவான வருமானம் கொண்ட மக்கள் இவர்கள். 2019-ஆம் ஆண்டில்டெக்சாஸில் நடந்த 70 சதவீத கருக்கலைப்புகள் கறுப்பின பெண்களுக்கேநிகழ்ந்துள்ளன.

இதனால். இந்தப் புதிய சட்டம் கறுப்பினப் பெண்கள் மீது அதிக தாக்கத்தைஏற்படுத்தும். டெக்சாஸ் மாகாணம், கருக்கலைப்பின்போது, பிரசவங்கள்போதுஏற்படும் தாய்வழி இறப்பு விகிதங்களில் முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்டநிலையில் மாகாண அரசு கொண்டுவந்துள்ள சட்டம் விமர்சனங்களையும் பெண்கள்மத்தியில் போராட்டங்களையும் எதிர்கொண்டுள்ளது.

கருக்கலைப்பை தடை செய்துள்ள இந்த தீர்ப்பானது நவீனத்துவத்திலிருந்துநம்மை மீண்டும் கற்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஒப்பானது. இந்த தீர்ப்புபெண்களின் வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தி மேலும் கடினமாக்கி விடுகிறது. விருப்பமில்லாமல் அவர்கள் சுமக்கும் கருவானது அவர்களின் வாழ்வை மட்டுமன்றிஅப்படி பிறக்கும் குழந்தையின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிவிடகூடும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``பெண்களின் ஆரோக்கியத்தோடு, உயிரோடு இச்சட்டம் விளையாடுகிறது" என்று கூறி கடும் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார். ஆனால், இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சட்டம் அமலுக்குவந்துள்ளது. சட்டம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தும் பலனில்லை, நீதிமன்றங்கள்மனுவை தள்ளுபடி செய்துள்ளன. மக்களின் தொடர் எதிர்ப்புகளும்போராட்டங்களும் இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவதைதவிர நமக்கு வேறு வழியில்லை... நம்பிக்கை தானே வாழ்க்கை...

இந்துமதி கணேஷ்