தொடர்கள்
அரசியல்
பீகார் -பாரதிய ஜனதாவுக்கு எச்சரிக்கை மணி-விகடகவியார்

20220712072640711.png

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாகரிகமான அரசியல் தலைவர் அதேசமயம் அழுத்தமான ஆசாமி இஷ்டத்துக்கு கருத்தெல்லாம் சொல்லமாட்டார். 2020 சட்டசபை தேர்தல் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமார் தான் முதல்வர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா தானாக முன்வந்து அறிவித்தது. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் பாரதிய ஜனதா 74 தொகுதிகளில் வெற்றி பெற்றது, ஆனாலும் பாரதிய ஜனதா நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று அறிவித்தது.

கடந்த ஆறு மாதங்களாக தான் கூட்டணியில் முணுமுணுப்பு கேட்கத் தொடங்கியது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பாரதிய ஜனதா இதை எதிர்த்தது. நிதீஷ் குமார் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். பாரதிய ஜனதாவை தவிர அனைத்து கட்சிகளும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டது அப்போது தான் உரசல் ஆரம்பித்தது. எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தந்த இப்தார் விருந்தில் நிதிஷ்குமார் கலந்து கொண்டார்.

அதன் பிறகு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவுபசார விழா இதற்கு நிதிஷ்குமார் அழைக்கப்பட்டிருந்தார் கலந்து கொள்ளவில்லை புதிய ஜனாதிபதி பதவியேற்பு அதிலும் கலந்து கொள்ளவில்லை. கடைசியாக பல எதிர்க்கட்சி முதல்வர்கள் கலந்து கொண்ட நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை.

20220712072709489.jpg

நன்றி : தினமணி

நிதிஷ்குமார் தடம் மாறுகிறார் என்பதை பாரதிய ஜனதா மோப்பம் பிடித்துவிட்டது. ஆனால் அது இப்படி உடனடியாக அதிரடியாக நடக்கும் என்பதை கவனிக்கத் தவறிவிட்டது பாரதிய ஜனதா. ஐக்கிய ஜனதா தளம் சார்பாக மத்திய அமைச்சராக இருந்த ஆர்.பி.சிங் ராஜ சபா பதவி காலம் முடிவடைந்தது, ஆனால் அவருக்கு மீண்டும் ராஜசபையில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை தற்போது அவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு சொல்லி நோட்டீஸ் தர அவர் கட்சியை விட்டு விலகி விட்டார். நிதீஷ்குமார் பிரதமராக ஆசைப்படுகிறார் என்பது ஆர்.பி.சிங் குற்றச்சாட்டு.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார் நிதிஷ்குமார். 2000 ஆண்டு பீகார் முதலமைச்சராக பதவி ஏற்றார் போதிய பலம் இல்லாததால் ஆட்சி கவிழ்ந்தது. பிறகு மீண்டும் 2005இல் முதல்வர் பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து நிதிஷ்குமார் மிகச் சிறந்த நிர்வாகி. பீகாரில் சட்டம்-ஒழுங்கு உட்கட்டமைப்பு இதெல்லாம் நிதிஷ்குமாரின் சாதனைகள் நடுவில் பாரதிய ஜனதாவுடன் உறவு முறிவு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி இப்படி நிறைய அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்களை இன்றுவரை ஆடிக் கொண்டுதான் இருக்கிறார் நிதிஷ்குமார்.

இப்போது இவருடன் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றிருக்கும் தேஜஸ்வி யாதவ் மீது கூட ஊழல் புகார் சொன்னவர்தான் நிதிஷ்குமார். நிதிஷ்குமார் இப்போது பீகாரில் செல்வாக்கு உள்ளவர் என்று சொல்ல முடியாது தேஜஸ்வி யாதவ் செல்வாக்கு பீகாரில் இப்போது உச்சத்தில் அவர் கட்சிப் பொறுப்பு ஏற்றதும் 2020 தேர்தலில் ரஷ்ய ஜனதா தளம் 80 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போதுகூட நிதிஷ்குமார் கட்சியை விட கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்துக்கு நான் ஆசைப்படவில்லை என்பதை சொல்ல தேஜஸ்வி யாதவ் முதல்வர் பதவி கேட்கவில்லை, அதேசமயம் 2024 பாராளுமன்ற தேர்தலில் பீகாரை பொருத்தவரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் பாரதிய ஜனதா என்று இவை இரண்டுக்கும் இடையே தான் பெரும் போட்டி இருக்கும் என்பதும் உண்மை. ஐக்கிய ஜனதா தளம் காங்கிரஸ் இவையெல்லாம் 3-வது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு விடும்

அதேசமயம் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்போடு இருக்கும் பாரதிய ஜனதா இப்போது கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட இருக்கிறது, கூட்டணி என்று அவர்களுடன் எந்த மாநில கட்சியும் இப்போது இல்லை பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மகாராஷ்டிராவில் சிவசேனா, பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் இவை எல்லாம் இப்போது பாரதிய ஜனதா வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி ஆதரவு அதிமுக பாரதிய ஜனதா வேண்டாம் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. பீகார் இப்போதைக்கு பாரதிய ஜனதாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்பது தான் உண்மை!

20220713064802132.jpeg