இந்தியா முழுவதும் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தீவிரவாதத் தொடர்பு பற்றிய கண்டுபிடிப்புக்கு பிறகு என் ஐ ஏ சோதனை நடத்தியது, இந்த சோதனை எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார் போல் அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை திருச்சி ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி கோவை நெல்லை தென்காசி மதுரை இப்படி 20க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டு நாள் சோதனை நடந்தது. தமிழக காவல்துறை ஒத்துழைப்புடன் சோதனை கைது நடவடிக்கை என்று என் ஐ ஏ தமிழ்நாட்டில் இதுவரை பத்துக்கும் அதிகமான வரை கைது செய்திருக்கிறது. இன்னும் கைது நடவடிக்கை தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.இந்த சோதனை கைது நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கண்டித்தது.
சோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு கைது நடவடிக்கைக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடு பாரதி ஜனதா நிர்வாகிகள் வீடு அலுவலகம் கடைகள் இவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் உயிர்ச்சேதம் இல்லை அதேசமயம் பொருள் சேதம் உடைமைகள் சேதம் என்ற அளவில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சின் தாக்கம் இருந்தது. இது ஒரு வகையான அச்சுறுத்தல் அல்லது பதட்டமான சூழ்நிலையை உருவாக்குதல் என்று சொல்லலாம் இந்து முன்னணி பாஜக நிர்வாகிகள் வீடு அலுவலகம் அவர்கள் உடமை இவை எல்லாம் நன்கு தெரிந்தவர்கள் தான் இந்தப் பெட்ரோல் குண்டு வீச்சை நடத்தியிருக்கிறார்கள். அதாவது இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு அமைப்பின் கண்காணிப்பு வளையத்தில் இருந்திருக்கிறார்கள். காவல்துறை ஆரம்பத்தில் யாரையும் கைது செய்யவில்லை. அதற்கு பதிலாக அதிக அளவு காவல்துறை அதிகாரிகளை முக்கிய நகரங்களில் கண்காணிக்க செய்தது.
பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டது கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கவே 3500 போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மக்களின் அச்சத்தைப் போக்க கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தொடர்ந்து இந்த நிகழ்வுகளை கண்காணித்தனர் முதல்வரை சந்தித்து இது ஒரு முக்கிய சம்பவம் நாம் நடவடிக்கை எடுக்காமல் விடக்கூடாது தவிர பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எல்லாமே காலை மற்றும் மாலை வேளைகளில் தான் பாதுகாப்பு பணியில் அவ்வளவு போலீஸ் இருந்தும் நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற சூழ்நிலை சந்தேகம் ஏற்படும். உள்துறை அமைச்சகம் இதுபற்றி விவரங்கள் கேட்டு இருக்கிறது போன்றவற்றை முதல்வருக்கு எடுத்துச் சொன்ன அவரே இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுமாறு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் காணொளி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை எஸ் பி என பதட்டம் உள்ள 15 மாவட்டங்களில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகுதான் காவல்துறை கைது நடவடிக்கையில் இறங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்கள் ஆகியோரை கைது செய்து மொத்தம் பதினான்கு பேர் கைது செய்திருக்கிறார்கள். அதே சமயம் டிஜிபி பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று குறிப்பிட்டார். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்த சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை கைதும் செய்யப்படவில்லை. கோவை காவல்துறை ஆணையர் கைது நடவடிக்கை பற்றி நிருபரிடம் எடுத்துச் சொன்னபோது நிருபர்கள் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்திருக்கிறீர்களா என்று கேட்டபோது நாங்கள் இப்போது அது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை என்று பதில் சொல்லி இருக்கிறார்.
அதேசமயம் முரசொலி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் உடமைகளுக்கு அவர்களே சேதம் விளைவித்து பொய் புகார் தந்தார்களே எங்கும் முழு பக்கத்துக்கு படங்களை வெளியிட்டு காவல்துறை இந்த கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் டிஜிபியை சந்தித்து விட்டு வெளியே வரும்போது நிருபர்களிடம் பேசும்போது தற்போது சொல்லப்படுகின்ற பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பின் பிரதிநிதிகள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே காவல்துறை இந்த கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பிறகு காவல்துறை அழைத்துப் பேசியது ஜமாத் தலைவர்களிடம் தான்.அதேசமயம் திருமாவளவன் இஸ்லாமியர்களை என் ஐ ஏ கைது செய்திருப்பதால் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று நான் சொல்லவில்லை அவர்கள் தவறு செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை என்று குறிப்பிட்ட திருமாவளவன் எட்டு ஆண்டுகளாக மோடி அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்தது என்றும் கேட்டார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உட்பட எட்டு அமைப்புகளை தடை செய்து இரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறப்பித்தது அதனை உடனே செயல்படுத்துவதாக தமிழகத்தில் தடை செய்வதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு கோவை உக்கடம் பகுதியில் கொஞ்சம் செல்வாக்குள்ள அமைப்பு திமுக போன்ற மதசார்பற்ற கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கம் தான். தடை அறிவிக்கப்பட்டதும் உக்கடம் பகுதியில் கொஞ்சம் பெண்கள் கூடி தடையை எதிர்த்து மறியல் செய்ய முற்பட்டபோது காவல்துறை அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தது. இது போதாதென்று எஸ்டிபிஐ கட்சி பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு ஒரு தபால் கார்டு வந்தது அந்த கார்டில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் அல்லது கையெறிகுண்டுகள் வீசப்படும் காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டு அந்த தபால் கார்டு அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
எனவே தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று ஆளும் தரப்பு சொன்னால் தயவு செய்து யாரும் சிரிக்காதீர்கள்.
அப்புறம் பாரதிய ஜனதா உள்ளே வந்துவிடும் அதை கொஞ்சம் பார்த்துக்கோங்க.
Leave a comment
Upload