நவராத்திரியின் குதூகலங்கள் தமிழகத்தில் எப்படியோ, ஆனால் புலம் பெயர்ந்த இந்தியர்கள், குறிப்பாக தென்னாட்டவர்கள் இந்த கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்கிறார்கள்.
நல்ல பட்டுப் புடவைகளை கட்டிக் கொள்ள ஒன்பது நாட்களும் நல்ல சந்தர்ப்பம் என்பது ஒரு புறம் இருக்க, ஆன்மீக மணம் தவழும் மனங்களுடன் நட்புக்களோடு உறவாடும் ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு இது.
அமெரிக்காவில் சமீபத்தில் 30 வீணைக் கலைஞர்களுடன் ஐகிரி நந்தினி என்ற ஆதி சங்கராச்சாரியாரின் பாடலை இசைத்து கொண்டாடி மகிந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக மூன்று வருடங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த 30 இசைக் கலைஞர்களில் சுமார் 25 பேர் இல்லத்தரசிகள். இவர்கள் தொழில் ரீதியான இசைக் கலைஞர்கள் அல்ல. அவர்களுக்கு தம்முடைய பாரம்பரிய இசைக் கருவியை கடல் கடந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம்.
அது தரும் அமைதி. மூன்று வருடங்களாக கற்றுக் கொண்டு இந்த நவராத்திரியை முன்னிட்டு
20 சின்னஞ்சிறு பாடகிகளுடன் 30 வீணைக் கலைஞர்கள் டெக்ஸாசிலிருந்து இந்த இசைக் கோர்வையை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு ஆண் தான் இந்த இசைக் கலைஞர்களுடன் வாசித்திருக்கிறார். இவருக்கு சில விரல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி சாத்தியமாயிற்று இவருக்கு என்றால் இசை ஆர்வம் தான்.
நவராத்திரிக்கு ரிலீஸ் ஆன அந்தப் பாடல் இங்கே....
Leave a comment
Upload