தொடர்கள்
தொடர்கள்
சென்னை 59 - திருவாற்றியூரில் சுந்தரர் கேட்ட கோல், வெண்பாக்கத்தில் கிடைத்தது - ஆர்.ரங்கராஜ்

20221019064319629.jpg

திருமுல்லைவாயிலில் இருந்து மேலும் மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்த நம்பி ஆரூரர் வழிப்போக்கர்கள் உதவியுடன் திருவெண்பாக்கம் அடைந்தார். கோயில் வாசலில் கொண்டு போய் நிறுத்தினர், கைகளைத் தலைமேல் கூப்பி வழிபட்டார். "கைகளைக் கீழே இறக்கும்போது, ஏதோ தட்டுப்பட்டது தடவிப்பார்க்க அட்டா, கோல் ......திருவாற்றியூரில் கேட்ட கோல், வெண்பாக்கத்தில் கிடைத்தது. பிறகு, கையில் ஊன்றுகோலை வைத்துக்கொண்டே கேட்டார், பிழை செய்தால் பொறுத்துக் கொள்வாய் என்று எண்ணினேன். பிழை பொறுக்காமல், படலத்தால் எனது கண்களை மறைந்து விட்டாய்; கோயிலுக்குள்தான் இருக்கிறாயா? பக்தன் கேள்வி கேட்டால் பகவான் பதில் சொல்வார்தானே! பதில் சொனனார்; உளோம்: நீங்கள் போங்கள்," என்று அந்த காட்சியை விவரிக்கிறார் சுதா சேஷய்யன்.

"கண் தெரியாததாலும், கையில் கோல் கொடுத்ததாலும், இப்படிச் செய்கிறீரே என்று ஆதங்கத்தாலும் உள்ளீரோ? என்று கேட்டால் விட்டேற்றியாக, உளோம், போகீர் என்று விடை தருகிறீரே. நியாயமா?

பிழையுளதனன் பொறுத்திடுவீர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம் என் கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே

மான் போன்ற சங்கிலியை எனக்குத் தந்து, நற்பயன்களும் தந்து, கூடவே இப்படிப்பட்ட சிக்கல்களையும் தந்து,, வெண்கோயில் இங்கு உள்ளாயோ என்று கேட்க, கோலைக் கையில் கொடுத்து ஆம், உளோம்போகீர் என்று கூறுகிறீரே நியாயமா? என்று சுந்தரர் கேட்கிறார்.

இதென்ன புதிர்?

"சுந்தரரான நம்பி ஆரூரர், கோல் பெற்ற தலமான வெண்பாக்கம் செல்வோமா? சற்றே கடினம்தான். ஏன் தெரியுமா? இப்போது, வெண்பாக்கம் நாம் செல்லும் வகையில் இல்லை. நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது. ஆனால், வெண்பாக்கத்து வெண்கோயில் என்று சுந்தரர் பாடிய கோயில் இருக்கிறது.

இதென்ன புதிர்?

தீரர் சத்தியமூரத்தி சென்னை நகர மேயராக இருந்த காலகட்டம். சென்னையின் குடிநீர் தேவைக்கான திட்டங்கள் பலவும் வருக்கப்பட்டும், பரிசீலிக்கப்பட்டும், திருத்தங்கள் செய்யப்பட்டும் வந்த காலம், பூண்டி நீர்த் தேக்கம் அந்தக் கால கட்டத்தில்தான் செயல் வடிவம் பெற்றது.

பூண்டுகள் அதிகமாக இருந்ததால், இந்த இடம் பூண்டி என்ற பெயர் பெற்றது. சுமார் 12 சதுர மைல் பரப்பளவில் இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தை அமைக்க, 17 கிராமங்களின் இடம் இதற்க்கு தேவைப்பட்டது. கிராம மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த கிராமங்களில் ஒன்று சுந்தரர் பெருமானுடைய வெண்பாக்கம்.

வெண்பாக்கத் திருக்கோயிலை மொத்தமாகப் பெயர்த்தெடுத்து..........

வெண்பாக்கத் திருக்கோயிலை மொத்தமாகப் பெயர்த்தெடுத்து, நீத்தேக்கத்தின் கரையில், பூண்டி கிராமத்தின் நடுநாயகமாக, பூண்டி அரசு பள்ளிக்கூடத்தின் எதிரில், பெரிய நிலப்பரப்பில் அமைத்தார்கள்.

விசாலமான இடத்தில் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 1962 திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட மறுநிர்மாணத்தின் விளைவாக, 5.7.1968 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இங்கே இருக்கும் சிலா திருமேனிகள், சிற்பங்கள் மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பழைய கோயிலில் இருந்து பெயர்த்துக் கொண்டு வரப்பட்டவை. துவாரபாலக துவாரபாலகியர் மட்டுமே புதியவர்கள்.

மின்னொளி அம்மை என்றும் சொல்லலாம்

மூலவர் பிராகாரத்தை வலம் வந்து, அப்படியே நேர அம்மன் சந்நிதிக்கு வரலாம். எதிரில் சிறிய சிங்க வாகனம். "உள்ளே, அருள்மிகு மின்னலொளி அம்மை. மின்னொளி அம்மை என்றும் சொல்லலாம். அம்பாளுக்கு இதென்ன பெயர்?" -- விவரிக்கிறார் சுதா சேஷய்யன்.

(தொடரும்)