விசாரணை கமிஷன் கேள்விகள்
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தெரியாது தெரியாது வாக்குமூலம்
பொதுவாக முக்கிய தலைவர்கள் உடல்நிலை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் முழு விவரங்கள் சேகரித்து பொதுமக்களுக்கு சொல்வது அவரது உடல்நிலை பற்றிய தொடர் நடவடிக்கை கவனித்து வருவது இதெல்லாம் அமைச்சர் செய்ய வேண்டிய பணிகள் தான் ஆனால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் டாக்டர் விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில் அவர் பணி எதுவும் செய்யவில்லை அதற்கான காரணம் என்ன என்ற உண்மையையும் அவர் வாக்குமூலத்தில் சொல்லாமல் போனது எந்த நியாய தர்மத்துக்கும் அடுக்காது .இதோ அவர் வாக்குமூலம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்து தனது சொந்த ஊரிலிருந்து 23.9.2016 அன்று மருத்துவமனைக்கு வந்தார். அமைச்சர் இது பற்றி அவரது வாக்குமூலத்தில் அவர் சொன்ன பதில் இதோ
அமைச்சரவை கூட்ட சுகாதாரத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வமாக ஏதாவது அறிக்கை தந்தாரா என்ற கேள்விக்கு அமைச்சர் சொன்ன பதில் இந்தக் கேள்வி எனக்கு பொருந்தாது என்பது தான். சுகாதார துறை செயலாளர் தலைமைச் செயலாளர் சொல்லி தான் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்று கூறுவது தவறு என்பது டாக்டர் விஜயபாஸ்கர் பதில். சிகிச்சை பற்றி அப்போலோ மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றும் வாக்கு மூலத்தில் சொல்லியிருக்கிறார் டாக்டர் விஜயபாஸ்கர். அப்போலோ மருத்துவர்கள் ஒரு மனதாக முடிவு எடுத்தார்களா என்ற கேள்விக்கு டாக்டர் விஜயபாஸ்கர் பதில் ஆம் என்பது தான்
மருத்துவ குழு அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருப்பது தனக்குத் தெரியும் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர் விஜயபாஸ்கர். இதயத்தில் ஏற்பட்ட துளையால்தான் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதா என்ற கேள்விக்கு பின்னடைவு ஏற்பட்டது தெரியும் ஆனால் எதனால் ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார்.
இன்னொரு கேள்விக்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஸ்டூவர்ட் ரசால் மற்றும் டாக்டர் சமீன் சர்மா ஆகியோருடான தொலைபேசி உரையாடல் பற்றியும் மும்பையில் இருந்து வந்த டாக்டர் ராஜூவ் சோமன் பற்றியும் தெரியும் அவர்கள் கூறிய கருத்துகள் பற்றி நான் அறியவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார் அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர்.
மறைந்த முதல்வருக்காக நடைமுறைகள் போது தலைமைச் செயலாளர் சசிகலா ஆகியவர்கள் கையெழுத்து குறித்து கேட்ட போது இது பற்றி தான் அறியவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார்.
சிகிச்சை பற்றிய பல கேள்விகளுக்கு அவர் பதில் தவிர்க்கும் வகையிலும் மழுப்பல் ஆகவும் இருந்தது. எய்ம்ஸ் மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு மருந்து கூட பரிந்துரைக்க வில்லையா என்ற கேள்விக்கு இது பற்றி தனக்கு தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர். இதேபோல் ஆலோசனை மருத்துவர் டாக்டர் சோமன் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று கூறியது தனக்கு தெரியாது என்றும் பதில் சொல்லி இருக்கிறார். ஆஞ்சியோகிராம் பரிந்துரைக்கப்பட்டது உங்களுக்கு எப்போது தெரியும் என்ற கேள்விக்கு தான் நீண்ட நாட்கள் தஞ்சாவூரில் பிரச்சாரத்திற்காக சென்று விட்டதாக பதில் சொல்லி இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர். ஆனால் சிகிச்சை தொடர்பாக டாக்டர் சமீன் சர்மா வந்தார் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார்.
மூத்த அமைச்சர் ஓ பி எஸ் மற்றும் டாக்டர் தம்பிதுரை ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிறந்த சிகிச்சை அளிக்க ஆர்வமாக இருந்தார்கள் என்று பதில் சொல்லி இருக்கிறார் டாக்டர் விஜயபாஸ்கர். வெளிநாட்டுக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்வதால் இந்திய டாக்டர்கள் திறமை அற்றவர்கள் என்ற சந்தேகம் வருமா என்ற கேள்விக்கு தான் அப்படி நினைக்கவில்லை என்று பதில் சொல்லி இருக்கிறார் முன்னாள் அமைச்சர்.
மறைந்த முதலமைச்சரின் படிவங்களில் தலைமைச் செயலாளர் கையெழுத்திட்டது தனக்குத் தெரியாது என்ன தனது வாக்குமூலத்தில் பதிவு செய்திருக்கிறார் டாக்டர் விஜயபாஸ்கர். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தும் முதல்வருக்கு தேவையான சிகிச்சை அளிக்க முயற்சி செய்யாதது அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று தக்க சிகிச்சை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத சுகாதாரத்துறை அமைச்சர் பற்றி தங்கள் வியந்து இருப்பதாக கமிஷன் தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது. சிகிச்சை பற்றி தான் அறியவில்லை தனக்குத் தெரியாது என்று சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர் அப்போலோ மருத்துவமனை சிறந்த சிகிச்சை அளித்ததாக சொல்லி விசாரணை ஆணையத்தை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் டாக்டர் விஜயபாஸ்கர் . முறையான சிகிச்சை அளிக்க கூடாது திட்டமிட்டவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர் என்பது ஆணையம் கருத்து.
தொடரும்.....
Leave a comment
Upload