தொடர்கள்
விளையாட்டு
மறைந்துபோன மனங்கவர் விளையாட்டுகள் - வேங்கடகிருஷ்ணன்

20230321210312861.jpg

இந்த விளையாட்டுக்கள் இன்றைய நடுத்தரவயதினரை, அன்று அவர்களின் குழந்தைப்பருவத்தில்,தெருவிலேயே கட்டிப் போட்டு வைத்திருந்தவை. சுகர், பிபி, என எதுவும் எட்டிப் பார்க்காத நாட்கள் அவை. இன்றைய சிறுவர்கள் "செல்லுக்குள் " அடைந்து கிடக்கிறார்கள். அவர்களை மீட்டு கதவைத்திறந்து வெளியே செல்ல வைக்கும் சிறு முயற்சியே இது. இதனை உங்கள் குழந்தைகளிடம் காண்பியுங்கள், உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்.

20230321210834480.jpg 2023032121094738.jpg

"கில்லி- தாண்டு"
தென்தமிழகத்தில் "கிட்டி புள்"
நெம்புகோல் தத்துவத்தை சிறுவயதிலேயே கற்று தந்த விளையாட்டு!
இப்போது புழக்கத்தில் உள்ள " தட்றோம் தூக்றோம்" என்பதை களத்தில் செய்யும் விளையாட்டு..
சென்னை பரங்கிமலை பகுதியில் இதற்காக டீம் பிரித்து மேட்சுகள் நடக்கும்.

இந்த விளையாட்டில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. சின்ன வயதில் கில்லியில் அடித்து கண் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் உண்டு. எந்த விளையாட்டிலும் ஆபத்து இருக்கும். நாம் தான் சூதானமாக விளையாட வேண்டும்.

20230321211406673.jpg 20230321211445885.jpg

"நொண்டி"
வாழ நினைத்தால் வாழலாம் என்று கற்று தந்த விளையாட்டு.
ஒரு காலை மடக்கி அப்படியே ஓடி அடுத்தவரை பிடிக்க வேண்டும்.
சிறுவயதில் விளையாடுவதால் கால்கள் வலுவாக மிகச் சிறந்த பயிற்சி இது.
இதன் மற்றொரு வகை சென்னை சார்ந்த பகுதிகளில்...கட்டம் போட்டு 1-9 வரை எழுதி அதன்மேல் நடப்பது....

20230321212113782.jpg 20230321212152502.jpg 20230321212229539.jpg

"பல்லாங்குழி"

பாட்டி சொல்லித் தந்தாள்

பக்குவமாய்
பல்லாங்குழி மூலம்
பலநாள் கஷ்டப்பட்ட
பள்ளிக் கணக்கை...
கோடைக்குஏற்ற ஆட்டம்
வீட்டுக்குள்ளே திருவிழாபோல்
விளையாடும் ஆட்டம்!!

20230321212328647.jpg

"நுங்கு வண்டி"
ஏரிக்கரை மேலே
எப்போதும் என் வண்டி
நடந்து, ஓடி நான் ஓட்டும்
நயமான நுங்கு வண்டி!
வயதாகி வாங்கிய
வோக்ஸ்வேகன்
தராத மகிழ்ச்சியை
தந்திட்ட என் நுங்கு வண்டி!!

விளையாடுவோம்...வளம் பெறுவோம் !!