
மஸ்ஜித்.
முத்தவல்லியின் நிர்வாக அறை. சுழலும் இருக்கையில் அமர்ந்திருந்தார்
முத்தவல்லி சாதிக் பாட்சா. ஒரு பெர்ஷியபூனை மனிதவடிவெடுத்தது போன்ற
தோற்றம் முத்தவல்லிக்கு. நீங்கள் ஸலாம் கூறினால் பதில் ஸலாமாக ‘மியாவ்!
மியாவ்’ என முத்தவல்லி கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவர் எதிரே இருந்த இருக்கையில் இமாம் முகமது ஜெய்லானி காதிரீ
அமர்ந்திருந்தார்.
பக்கவாட்டு சோபாவில் முகமது சுலைமான், சையது குதுப்தீன், அப்துல்
காலித் மற்றும் உஸ்மான் குவாஜா உட்கார்ந்திருந்தனர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“ஏதோ பேசனும்னு மனு குடுத்தீங்களே சுலைமான்.. சொல்லுங்க… என்ன
பிரச்சனை?”
சுலைமான் முப்பது வயது இளைஞன். பழக்கடை வைத்திருக்கிறான்.
“முத்தவல்லி! நம்ம பள்ளிவாசல் கட்டி எழுபது வருஷமாகுது. பள்ளிவாசல்
கட்ட இடமும் கொடுத்து பள்ளிவாசல் கட்ட முழுசெலவும் செய்தது நம்ம
ஹாஜியார். நூருல்லா பாய்தான்!”
“ஆமா… அது மஹல்லா பச்சைக்குழந்தைக்கு கூட தெரியுமே..”
“போன வாரம் ஹாஜியார் நூருல்லா பாய் வபாத்தானார்…”
“ஆமா!”
“வபாத்தான நூருல்லா பாய்க்கு வயசு 92…”
”சுத்திவளைக்காம நேரடியா விஷயத்துக்கு வாங்க!”
“இந்த எழுபது வருஷமா ஐவேளையும் நம்ம நூருல்லாபாய் நம்ம
பள்ளிவாசல்லதான் தொழுவார். எழுபது வருஷத்ல நான் கேள்விபட்ட வரைக்கும்
இருபதுக்கும் மேற்பட்ட இமாம்கள் மாறியிருக்காங்க. எந்த இமாம் தொழவச்சாலும்
அந்த இமாமின் வலப்பக்கம் முதல் ஸப்புல நின்னுதான் நூருல்லா பாய்
தொழுவாங்க!”
“உண்மைதான்!”
2
“பல சமயங்கள்ல நூருல்லா பாய் லேட்டா வர்றார்ன்னா அவர் இடத்தை மத்த
தொழுகையாளிகள் காலியாகத்தான் விட்டு வச்சிருப்பாங்க…”
“அதிகபட்சம் அஞ்சு நிமிஷம் டிலே பண்ணுவார் நூருல்லா பாய்..
அவ்வளவுதான்…”
“நூருல்லா பாய் மௌத்தாகி ஆறுநாளாகுது. அவரின் மாண்பையும்
கௌரவத்தையும் பாதுகாக்கும் வண்ணம் எல்லா நேர தொழுகைகளிலும் இமாமுக்கு
வலதுபுற தொழுமிடத்தை அவருக்காக காலியாக விட்டு வைத்தால் என்ன?”
“இதற்கு இமாம் தகுந்த பதில் கூறுவார்!”
“சுலைமான் பாய்! டிவி சீரியல்கள் நிறைய பாக்றீங்களா? ரொம்ப
சென்டிமென்ட்டா யோசிக்கிறீங்க பேசுறீங்க. மஸ்ஜித் என்பது இறைஇல்லம். இங்கு
தொழுகையாளிகள் எல்லாம் சமம். பள்ளிவாசல் கட்டிக்கொடுத்தார் என்பதற்காக
நூருல்லா பாய் மற்ற தொழுகையாளிகளை விட உயர்ந்தவர் ஆகமாட்டார்.
தொழுகையாளிகள் கடலலைகள் போல. ஒரு கடலலை கரையை தொட்டுவிட்டு
போனது என்றால் வேறொரு கடலலை சிறிதுநேரத்தில் வந்து கரையை தொடும்.
தொடர்ந்து தொழுகையாளிகள் மாறிக் கொண்டே இருப்பர். தொழுகை வரிசை
நிரந்தரமானது. எந்த தொழுகையாளிக்கும் தொழுகை வரிசையில் இடம் விட்டுவிட்டு
தொழுவது சுன்னத்தல்ல... இது போன்ற உணர்வுப்பூர்வமான செயல்களை இஸ்லாம்
அனுமதிக்காது!”
சுலைமான் தலையாட்டினான்.
“நாளைக்கி இமாம் நான் மௌத்தாய்ட்டா என் இடத்தை காலியா விட்டுட்டு
தொழுகையை நடத்துவீங்களா?”
“ஸோ சுலைமான் உங்க கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது!”
சுலைமான் புரிந்து கொண்டவனாய் முறுவலித்தான். “எனது அறியாமையை
மன்னியுங்கள் இமாம்!”
“மார்க்கம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டது நல்லதுதான்
சுலைமான்!”
முத்தவல்லி திரும்பினார். “இமாம்! தொழுகை வரிசைகளை பற்றி சில
சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள மூன்று மஹல்லா இளைஞர்கள்
வந்திருக்கிறார்கள்.” மூன்று இளைஞர்களை சுட்டினார்.
சையது குதுப்தீன் வயது 32. எலக்ட்டிரிஸியன்.
அப்துல் காலித் வயது 28 முதுகலை பொறியியல் பட்டதாரி. தனியார்
நிறுவனத்தில் பணிபுரிகிறான்.
உஸ்மான் குவாஜா. வயது 30 ஒரு டிபார்ட்மென்ட்ல் ஸ்டோரில் பில்லிங்
கிளார்க்.
3
மூவரிடமும் திரும்பினார் இமாம். “கேளுங்கப்பா உங்க கேள்விகளை!”
‘தொழுகை வரிசை என்றால் என்ன?”
“இமாமுக்கு பின் தொழுகையாளிகள் வரிசைகட்டி நின்று தொழுவார்கள்.
தொழுகை வரிசையை அரபி வார்தையில் ‘ஷஃப்பு’ என அழைப்பார்கள். ஒரு
பள்ளியில் ஐநூறு தொழுகையாளிகள் தொழுகின்றார்கள் என்றால் ஒருவரிசைக்கு
ஐம்பது தொழுகையாளிகள் வீதம் பத்து தொழுகை வரிசைகளில் தொழலாம்..”
“தொழுகை வரிசை கட்டாயமா?”
“தம்பீ! நம்ம இஸ்லாமில் இராணுவ ரீதியான சுயகட்டுப்பாடுகள் அதிகம். நாம்
எதை செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும். மக்காவில் தொழுகை
நடப்பதை பல விடியோக்களில் பார்த்திருப்பாய். அங்கே வட்டவடிவ ஸஃப்புகள். ஒரே
நேரத்தில் குனிவதும் நிமிர்வதும் ஸஜ்தா செய்வதும் கண்கொள்ளக்காட்சி.
தொழுகையில் ஒழுங்கு இல்லாவிட்டால் என்னவாகும் தெரியுமா?
தொழுகையாளிகள் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக்கொண்டும் ஒருவர் முதுகில்
ஒருவர் உப்புமூட்டை ஏறிக் கொண்டும் தொழுவர். தொழுகை என்பது என்ன? ஒரு
அடிமை தன் எஜமானிடம் பேசுகிறான். பேசுவதில் சிறு கண்ணியக்குறைவு
இருக்கலாமா?”
“தொழுகை வரிசைகளில் எந்த வரிசை பெருமையானது?”
“எல்லா வரிசைகளும் ஒன்றுதான். முதல்வரிசை விரும்பத்தக்கது. குலுக்கல்
முறையிலாவது முதல் வரிசையில் தொழ தொழுகையாளிகள் போட்டி போடுவர்!”
“தொழுகை வரிசைகள் எப்படி அமையவேண்டும்?”
“முதலில் இமாமுக்கு வலது பக்கம் ஒருவர் இடதுபக்கம் ஒருவர் வலதுபக்கம்
ஒருவர் இடது பக்கம் ஒருவர் என முதல்வரிசை முழுமைப்படுத்தபடவேண்டும்.
தொழுகை வரிசைகள் வரிசையாக நிரப்பப்படவேண்டும். தொழுகை வரிசைகள்
மல்லிகைப்பூ சரம் போல நெருக்கமாக அமையவேண்டும். வீட்டு விசேஷங்களில்
சீரியல் லைட் கட்டுவார்கள் சீரியல் லைட் குட்டிபல்புகள் போல ஒன்றுக்கொன்று
கை கோர்த்திருக்க வேண்டும்.”
“ஓவ்!”
“தொழுகை வரிசைகளில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள்.
ஒருவருக்கொருவர் முன்பின் முரண்பாடாக நிற்கவேண்டாம். தொழுகையாளியின்
வலதுதோள்பட்டை இன்னொரு தொழுகையாளியின் இடது தோள்பட்டையை
இணையாக தொடவேண்டும். ஒரு தொழுகையாளியின் பின்னங்கால் இன்னொரு
தொழுகையாளியின் பின்னங்காலோடு கச்சிதமாக இணைந்திருக்க வேண்டும்.
அம்புகளை சீர்படுத்துவது போல தொழுகைவரிசைகளை சீர்படுத்தவேண்டும்!”
“சிறப்பு!”
4
“ஒரு ஹதீஸ் உள்ளது- அல்லாஹ்வும் மலக்குகளும் முந்தைய ஸஃப்புகளில்
உள்ளவர் மீது ஸலவாத்து கூறுகின்றனர் என்று. அல்லாஹ் சொல்லும் ஸலவாத்து
என்பது அல்லாஹ்வின் அருளை குறிக்கிறது. மலக்குகள் சொல்லும் ஸலவாத்து
என்பது மலக்குகளின் துஆக்களை குறிக்கிறது.”
“அருமையான ஹதீஸ்!”
“தொழுகை வரிசையில் நல்ல முறையில் சேர்த்து கொள்பவரை அல்லாஹ்
சேர்த்துக் கொள்கிறான். யார் தொழுகை வரிசையை துண்டிக்கிறாரோ அவரை
அல்லாஹ் துண்டிக்கிறான், இது ஒரு ஹதீஸ்!”
“தொழுகை வரிசை நெருக்கமாக அமையாவிட்டால் என்னவாகும்?”
“தொழுகைவரிசை நெருக்கமாக இல்லாத இடங்களில் கறுப்புநிற
ஆட்டுக்குட்டியாய் ஷைத்தான் நுழைகிறான் என நபிகள் நாயகம் கூறுகிறார்கள்!”
“தொழுகை வரிசையின் முக்கியத்துவம் தெரியாமல் உஸ்மான் ஏசி பக்கமும்
பேன் பக்கமும் போய் நிற்பான்!”
“இப்போது அவருக்கு புரிந்திருக்குமே.. பெண்களை தொழ அனுமதிக்கும்
பள்ளிகளில் பெண்கள் பின் தொழுகைவரிசையில் நிற்க வேண்டும்!”
“இதற்கு எதாவது ஹதீஸ் உண்டா?”
“கூட்டுத்தொழுகையில் ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல்
வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய
வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்
என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்!”
“ஆண்களின் கடைசி தொழுகை வரிசை ஏன் தீயது?”
“தொழுகைக்கு மிகதாமதமாய் வருபவர்களுக்கே கடைசி வரிசை கிடைக்கிறது.
குறும்பு செய்வோர் பிற தொழுகையாளிகளை கேலி செய்வோர் கடைசி வரிசையில்
தஞ்சமடைகின்றனர்!”
“மோதினாரிடம் ஒரு கம்பை கொடுத்து தொழுகை வரிசைகளை சீர்
செய்யலாமே இமாம்?”
இமாம் சிரித்தார்.
“தொழுகையாளிகளிடம் வன்முறை பிரயோகிக்க எந்த மார்க்கதேவையும்
இல்லை. தொழுகையாளிகளின் ஒழுங்கு நேர்த்தி அர்ப்பணிப்பு பற்றி இறைவன்
ஒருவனே முழுமையாக அறிவான்!”
முத்தவல்லியும் நான்கு மஹல்லாவாசிகளும் ஆமோதித்தனர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றத்துடன் இமாம் கிளம்பினார். தெளிந்த மனதுடன்
மஹல்லாவாசிகள் புறப்பட்டனர்.

Leave a comment
Upload