தொடர்கள்
கவர் ஸ்டோரி
" நிலா நிலா ஓடி வரோம் " நிலவில் இந்தியா !! - இந்துமதி கணேஷ்

20230726003838637.jpeg

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கடைசி ஓவர் போல, அந்த கடைசி பதினைந்து நிமிடங்கள் அனைவரும் பரபரப்புடன் இஷ்ட தெய்வத்தை வேண்டிவிட்டு நகம் கடித்தபடி டிவியின் முன்பு ஆவலாய் அமர்ந்திருந்தோம். நம் எதிர்பார்ப்பை வீணாக்காமல் சந்திரயான் தன் பொற்பாதத்தை மிக மென்மையாய் நிலவில் பதித்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்தசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தனது நாற்பது நாள் பயணத்தைதொடங்கிய இஸ்ரோவின் சந்திராயன் 3 சரியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6. 03 மணிக்கு நிலவில் தனது லேண்டர் விக்ரமை தரை இறக்கியது. விக்ரம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது. இதன் மூலம் நிலவின்தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா, வரலாற்றின் பொன்னேட்டில் தன்னை அழுத்தமாக பதிவு செய்து கொண்டது. இதற்கு முன் நிலவில் தரை இறங்கிய மூன்று நாடுகளான அமேரிக்கா, சீனா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக இந்தியா நான்காவது நாடாக கூட்டணியில் சேர்ந்திருக்கிறது, இது இந்தியாவின் மிக பெரிய விண்வெளி பாய்ச்சல் என்பதில் மாற்று கருத்தில்லை.

நிலவின் தென் துருவத்தில் தான் நீர் மற்றும் பனிக்கட்டிகளின்இருப்பு தென்பட்டிருக்கிறது(அதை படம் பிடித்ததும் சந்திரயான் 1 என்பது கூடுதல் மகிழ்ச்சி). அந்த பகுதியில்தரை இறங்கியதன் மூலம் எதிர்காலத்தில் நிலா மனிதனின் வாழிடமாக மாறக் கூடியவாய்ப்புகள் உண்டா என்பது குறித்த ஆராய்ச்சிக்கு சந்திரயான் ஆவணங்களை சேகரிக்க தொடங்கி இருக்கிறது. சந்திரயானின் இந்த சரித்திர புகழ் வாய்ந்த பயணம் சாதனை இஸ்ரோவின் வரலாற்றில் மிக பெரிய மைல்கல் என்றே கூறலாம். நிலவில் இறங்கிய சந்திரயானின் ரோவர் பிரக்யான் தனதுபயணத்தை தொடங்கி விட்டது, அடுத்த பதினாலு நாட்கள் அது நிலவில் இருந்துதகவல்களை சேகரித்து அனுப்பும் என்று நம்பப்படுகிறது.

பெங்களுருவில் அமைந்திருக்கும் இஸ்ரோவின் இஸ்ட்ரேக்(ISTRAC -Indian Space Research Organisation’s Telemetry, Tracking and Command) மையம் தான் ஒரு தூண்போல இருந்து பணி சார்ந்த கட்டுப்பாட்டு வசதிகளை செய்து வருகிறது. சந்திராயனில் இருந்து வரும் தகவல்களை பெறுவது, அதன் பயணம் நெடுகிலும்அதை கண்காணித்து, கட்டளை சேவைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும்பார்த்து கொள்வது இஸ்ட்ரேக்கின் வேலை ஆகும். MOX என்கிற மையத்தில்அமர்ந்து தான் விஞ்ஞானிகள் சந்திராயனை கண்காணிக்கிறார்கள். இஸ்ட்ரேக்சந்திராயனை தொடர்ந்து கண்காணித்து வரும் அதே வேளை MOXல்உள்ள விஞ்ஞானிகள் நொடிக்கு நொடி அதன் அசைவுகளை கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

ஒரு ராக்கெட் செயற்கைகோளுடன் விண்வெளியில் செலுத்தபட்டதில் இருந்துஅது வெற்றிகரமாய் விண்வெளி வட்ட பாதையில் செயற்கைக்கோளை செலுத்தும்வரையிலும் இஸ்ட்ரேக் தான் அதை கண்காணிக்கும். இஸ்ட்ரேக்கின் நிலையங்கள்பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டா, திருவனந்தபுரம், போர்ட் பிளேயர், மெளரிடிஸ்மேலும் சில இடங்களிலும் அமைந்துள்ளது. தொலைதூர விண்வெளி பயணங்களின் பணி செயல்பாட்டு மையமாக இஸ்ட்ரேக் செயல்படுகிறது, மேலும் அமெரிக்காமற்றும் ஐரோப்பாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்துடன் தொடர்பிலும் இருக்கிறது. MOX முதலில் சந்திராயன் 1 செயல்பாட்டை கண்காணிக்கவே 2008ல் உருவாக்கபட்டது, ஒரே நேரத்தில் அதில் நூறு விஞ்ஞானிகள் அமர்ந்து செயற்கைகோளை கண்காணிக்க இயலும்.

சந்திராயனை செலுத்தி நாற்பது நாட்கள் கழித்து தான் அது நிலவில் தரை இறங்கி இருக்கிறது என்பதை நாம் அறிவோம், எதற்காக இந்த கால அவகாசம் என்பதைநாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் சந்திராயன் மிக குறைந்தஅளவு எரிபொருளையே பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒருவாலிபன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் கொண்டு திருமணம் செய்ய விரும்புகிறான் என்று வைத்து கொள்ளுங்கள், இங்கே நிலவை பெண்ணாக்கி கொண்டு, சந்திராயனை ஆண் என கொள்ளலாம். முதலில் விண்கலம் ராக்கெட் லாஞ்சர் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது, கண்டதும் காதல் கதை தான். பிறகு ஒரு உந்து சக்தி கொடுக்க பட்டு நீள்வட்ட சுற்று பாதையில் அதை பூமியை சுற்றி வர செய்ய வேண்டும், சுற்றிஇருக்கும் நட்புகள் எல்லாம் சேர்ந்து இந்த பெண் தான் உனக்கானவள் என்றுசொல்லி அந்த வாலிபனை கொம்பேற்றி விடுவார்கள் இல்லையா அப்படி. அடுத்ததாக விண்கலம் பூமியை நெருங்கும் போது அதன் சுற்று வட்ட பாதையின்உயரத்தை அதிகரிப்பது. எதற்காக இதை செய்ய வேண்டும் என்றால் அப்போது தான் விண்கலனால் நிலவின் ஈர்ப்பு விசையை எட்ட முடியும். இப்போது அந்த பெண்ணின்தகுதிக்கு தன்னை சமமாகி கொள்ள ஆண் தான் அரியர் வைத்த பேப்பர்களை எல்லாம் கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆகிறான் என்று வைத்துகொள்வோமே. பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சந்திக்கும்புள்ளிக்கு விண்கலத்தை கொண்டு சேர்ப்பது அடுத்தபணி(அந்த பெண்ணின் நெருங்கிய தோழியை தனக்கு தோழியாக்கி கொண்டு காதலியிடம் நெருங்க பார்ப்பது...)

ஈர்ப்புவிசை சமநிலை பாதையில் விண்கலத்தை சுற்றி வர செய்தல் வேண்டும்(தூரத்திலேயே நின்று அவள் போகும் இடத்திற்கெல்லாம் தான் பின்செல்கிறான்), முதலில் சமநிலை பாதையில் சுற்றிய விண்கலத்தை அடுத்து நிலவின் ஈர்ப்பு விசை பாதைக்கு நகர்த்த வேண்டும், எப்படி ஒரு காதலியை அடைய ஒருகாதலன் அவள் பின்னால் சுற்றி அவள் மனதில் இடம் பிடிப்பானோ அப்படி, இப்போது விண்கலம் நிலவை சுற்றி வரவேண்டும். விண்கலத்தில் இரண்டு பகுதிகள்உண்டு. அடிப்பகுதியில் விண்கலத்தை உந்தித் தள்ளும் கலனும் (propeller) மேல்பகுதியில் தரையிறங்கும் கலனும் (lander) பொருத்தப்பட்டுள்ளன. இந்த கட்டத்தில், இவற்றைத் தனித்தனியே பிரித்து, தரை இறங்கும் கலன் மட்டும் நிலவுக்கு நெருக்கமான அதிகபட்சம் 100 கிலோமீட்டர், குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றிவரச் செய்யப்படும், இதை தான் பிகரைபார்த்த உடன் பிரண்டை கழட்டி விடுவது என்று கூறுவோம். இப்போது கொஞ்சம்கொஞ்சமாய் அவளிடம் பேசி அவள் மனதை கவர்வது போல ...நீள்வட்டப் பாதையில்நிலவைச் சுற்றிவரும் லேண்டரைப் படிப்படியாக நிலவில் தரையிறக்க வேண்டும், நிலவுடன் விண்கலத்திற்கு ஒரு கெமிஸ்ட்ரி உருவாக வேண்டும் அல்லவா அப்போதுதானே நிலா தன்னை போட்டோ எடுக்க சம்மதிக்கும். நிலவில் வளிமண்டலம்இல்லை என்பதால் இது மிகவும் சவாலான பணியாகும்..

லேண்டரின் கால்களில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டுகளை இயக்கி, அதன்வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து, நிலவில் மெதுவாகத் தரை இறங்கச்செய்யவேண்டும். திமிராய் திரிந்த வாலிபன் கடைசியில் பெட்டி பாம்பாய்அடங்குவது போல தான் இதுவும். ஒருவேளை மேடுபள்ளமான இடங்களில்லேண்டரைத் தரையிறக்கினால் அது கவிழ்ந்துவிடக் கூடும். எனவே விண்கலத்தில்பொருத்தப்பட்டுள்ள அதிநவீனக் கேமிராக்கள் அனுப்பும் படங்கள் மற்றும்வீடியோக்கள் மூலம் அந்த இடத்தின் தன்மையைக் கணித்து, விண்கலத்தைத்துல்லியமாகத் தரை இறக்க வேண்டும்.

லேண்டரின் சுவர்களில் ஒன்றைத் திறந்து, அதனைச் சரிவுப் பலகை போலஅமைத்து, லேண்டரின் உள்ளே இருக்கும் ஊர்திக் கலனை (rover) மெதுவாகநிலவில் தரையிறக்க வேண்டும். பெண்ணின் பெற்றோரிடம் பதவிசாய் பேசிகல்யாணத்திற்கு சம்மதம் வாங்குவது, மிக கவனமாக இதை செய்ய வேண்டும். லேண்டரானது நிலவின் தரை மட்டத்திலிருந்து சுமார் 10 மீட்டர் உயரத்திலிருந்துநொடிக்கு 2 முதல் 3 மீட்டர் என்ற வேகத்தில் நிலவின் மீது விழச் செய்யப்படும். இதனால் நிலவின் தரைப் பகுதியிலிருந்து தூசி மற்றும் புழுதி கிளம்பக்கூடும். அதைலேண்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் கண்காணித்து, புழுதிஅடங்கிய பின்னர் லேண்டரின் சுவர் திறக்கப்பட்டு, ரோவர் தரை இறக்கப்படும். இந்த ரோவர், நிலவின் தரைப்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்து நிலவைக்குறித்த செய்திகளையும் படங்களையும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்குஅனுப்பிவைக்கும். ஒருவழியாய் திருமணம்முடிந்தது, எல்லோரும் திருமணம் முடிந்ததும் ஹனிமூன் போவார்கள், இங்கே நிலவுக்கே திருமணம் ஆனால் அது எங்கு போகுமாம்..!

சந்திராயன் தரை இறங்கும் கடைசி பதினைந்து நொடிகள் மிகவும் பயங்கரமானது, அதனை "கடைசி 15 நிமிட பயங்கரம்" என்று இஸ்ரோவின் தலைவர் கே. சிவன்அவர்கள் சந்திராயன் இரண்டின் போது தெரிவித்தார், அதே போல கடைசி நிமிடம்சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்க நான்கு கட்டங்களை தாண்ட வேண்டிஇருந்தது.

ரஃப் பிரேக்கிங் பேஃஸ்: இதில் லேண்டரின் கிடைமட்ட வேகத்தை மணிக்கு சுமார்6000 கிலோமீட்டரில் இருந்து பூஜ்யத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமேமென்மையான தரையிறக்கம் சாத்தியப்படும்.

அட்டிடுயூட் ஹோல்டிங் ஃபேஸ்: நிலவுக்கு மேல் கிட்டதட்ட 7.43 கி. மீ அளவில்லேண்டர் கிடை மட்ட நிலையில் இருந்து செங்குத்து நிலைக்கு நிமிர்த்த படும்இதற்குள் லேண்டரானது 3.48 கி. மீ கடந்திருக்கும்.

ஃபைன் பிரேக்கிங் ஃபேஸ்: இது கிட்டத்தட்ட 175 வினாடிகள் நீடிக்கும், லேண்டர்இப்பொழுது 28.52 கி. மீ கிடை மட்டத்திலேயே பயணித்து எங்கு தரை இறங்கவேண்டுமோ அங்கு வந்து சேரும், இப்போது நிலவின் மேற்பரப்பிற்கும்லேண்டருக்கும் வெறும் ஒரு கிலோ மீட்டர் மட்டுமே மிச்சம் இருக்கும், சந்திராயன்இரண்டு இந்த அட்டிடுயூட் ஹோல்டிங் ஃபேஸ் மற்றும் ஃபைன் பிரேக்கிங் ஃபேஸ்இரண்டு நிலைக்கும் நடுவில் தான் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குஉள்ளானது என்பது குறிப்பிட தக்க ஒன்று.

டெர்மினல் டெஸ்ஸண்ட் : இந்த இறுதி கட்டத்தில் தான் முழுவதும் செங்குத்தாய்இருக்கும் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விடப் படும். இந்த நாலு கட்டங்களையும்சந்திராயன் 3 வெற்றிகரமாக கடந்ததற்கு மிக முக்கியமான காரணம் என்னதெரியுமா, சந்திராயன் மூன்று முழுக்க முழுக்க சந்திராயன் இரண்டு தழுவியதோல்வியின் அடிப்படையில் கட்டமைக்க பட்டிருக்கிறது. சந்திராயன் இரண்டைவிட மூன்றிற்கு வலுவான கால்கள், பெரிய எரிபொருள் டேங்க், நிறைய சோலார்பேனல்கள், மேம்படுத்த பட்ட மென்பொருள் என்று அனைத்து வகையிலும் அதுதோல்வி அடையாத விதத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு வேளை அனைத்துஉணரிகளும் வேலை செய்யாமல் போனாலோ, என்ஜின் பழுதாகி போனாலோ கூடசந்திராயன் தரை இறங்கிவிடும்அளவுக்கு பார்த்து பார்த்து வடிவமைக்க பட்டிருக்கிறது.

விக்ரம் லேண்டர் தன்னுள் பொருத்தப்பட்டிருக்கும் கணினிகள் மற்றும் உள்அமைப்புகள் மூலம் நிலவில் மென்மையான தரையிறக்கத்திற்கு முயற்சிசெய்திருக்கிறது. அதற்கான முடிவுகளை அதுவே நிலவில் உள்ள தட்ப வெட்பநிலைக்கு ஏற்றவாறு எடுக்கும்படி செய்திருக்கிறார்கள். ஏனெனில் நிலவுக்குரேடியோ சிக்னல்களை அனுப்பவும் பெறவும் இரண்டு வினாடிகள் தேவைப்படும். அவசர காலத்தில் இது நான்கு வினாடியாக மாறக்கூடும், நான்கு வினாடிகள் என்பது மிக நீண்ட கால அளவு என்பதால் லேண்டரில் பொறுத்த பட்டிருக்கும் கருவிகளே எப்போது எங்கு தரை இறங்கலாம் என்கிறமுடிவை எடுக்கும் படி வடிவமைக்க பட்டிருக்கிறது.

சந்திராயன் மூன்றின் வெற்றிக்கு பின் இருக்கும் முக்கியமான விஞ்ஞானிகளுக்குநாம் மிக பெரிய நன்றியை செலுத்த வேண்டும். இந்த சந்திராயன் மூன்றின் முக்கியஇயக்குனரான திரு. P. வீரமுத்துவேல், இஸ்டேரக்கின் இயக்குனர் திரு. B. N. ராமகிருஷ்ணன், திரு. U. R. ராவ், திரு. M. சங்கரன், திரு. S. மோகனகுமார், திரு. V. நாராயணன், திரு. S. உன்னி கிருஷ்ணன் மேலும் இவர்களின் கீழ்ப்பணிபுரிந்தஅத்துனை விஞ்ஞானிகளுக்கும் மிக பெரிய பாராட்டுக்கள். தேசம் முழுவதும்இவர்களை வாழ்த்து மழையில் நனைத்து கொண்டிருக்கிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடியும் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும்இஸ்ரோவையும் அதன் இயக்குனர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்திராயனுக்கு பிறகு ரஷ்யாவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட லூனா 25 ஆகஸ்ட் பத்தாம் தேதி அன்று கிளம்பியது, இது ஆகஸ்ட் 21 அன்றே நிலவில் தரை இறங்கிஇருக்க வேண்டும் ஆனால் சில தொழில் நுட்ப காரணங்களால் ஆகஸ்ட் 19 அன்றேஅது விபத்துக்கு உள்ளானது. இதனால் நிலவில் தரை இறங்கும் போட்டியில்இந்தியாவே வென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் இஸ்ரோ தாங்கள் ரஷ்யாவை போட்டியாக கருதவே இல்லைஎன்று மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் சந்திராயன்3வின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் யார்முதலிடத்தில் இருக்கிறார்கள் என்ற போட்டியில் வெற்றி பெறத்தான் இந்தவிண்வெளி பயணங்கள் எல்லாம் மேற்கொள்ள பட்டன. நிலவில் அமெரிக்கர்கள்கால் பதித்த போது தான் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி செய்ய கட்டிடமேகட்ட தொடங்கினார்கள், ஆனால் இன்று எந்த நாடும் தரை இறங்காத தென்துருவத்தில் இந்தியா தன் காலடியை பதித்துள்ளது என்பது மிகுந்த பெருமையையும்கர்வத்தையும்ஏற்படுத்துகிறது.

யாரறிவார் நாளை நம் குழந்தைகள் நிலவுக்கு போய் வர ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் காலமும் வெகு தொலைவில் இல்லை.