தொடர்கள்
கவர் ஸ்டோரி
உலகக் கோப்பை 2011 மீண்டும் அந்த ஞாபகங்கள் ! -ராம்

20231018091255360.jpeg

இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2003ல் உலகக் கோப்பை நடக்கும் போது பீஸ் சால் பாத் என்று விளம்பரப்படுத்தியதாக நினைவு.

பின்னர் 2011ல் தான் 1983க்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தார் தோனி.

இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை இலக்குடன் இந்தியா.

2011ல் நடந்து முதல் கிரிக்கெட் போட்டியை வங்காளதேசத்தில் பார்க்க கொடுத்து வைத்தது. பின்னர் இறுதிப் போட்டி வாண்கடே ஸ்டேடியத்தில் இந்திய இலங்கை உலகக் கோப்பை இறுதிப் போட்டி.

பின்னர் வந்த ஐ.பி.எல். வணிகத்தால் கிரிக்கெட் பார்க்க பார்க்க அலுப்புத் தட்டி ஒரு கட்டத்தில் கசந்தே போய் விட்டது.

இருந்தாலும் ஸ்டேடியத்தில் அத்தனை ஆயிரம் பேருடன் மாட்ச் பார்க்கும் சுகமே அலாதி தான்.

உள்ளே போய் சேர கசகச வெயிலில் கூட்டத்தில் போக்குவரத்தில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும், ஸ்டேடியத்தில் மக்களோடு மக்களாக அதிலும் வெற்றி பெறும் அணியை உற்சாகபடுத்தும் இடத்தில் இருந்தால் அது தெய்வீகத்திற்கு சற்று அருகாமை தான்.

சுமார் ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டியில். ஆஸ்திரேலியா ஒரு ராட்சசன். கடைசி போட்டியில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடும் அசுரன்.

வெல்வது சுலபமல்ல. ஆனாலும் ஐம்பதாயிரம் பேர் நம்மை உற்சாகப்படுத்தும் போது வெற்றி கொஞ்சம் சுலபமாகிறது என்று தான் தோன்றும்.

2011 உலகக் கோப்பையை இப்படி ஒரு காணொளியில் பகிர்ந்து கொள்வதில்... அந்த வெற்றி அனுபவம் மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கம் தான்........

கிரிக்கெட் வணிகம், நேர விரயம், எவனோ பணம் பண்றான் நாம உருப்படற வழியப் பார்ப்போம் எக்ஸ்ட்ரா... எல்லாம் சொன்னாலும்

இது உலகக் கோப்பை. இது வரை எந்த போட்டியிலும் தோற்காமல் இறுதி போட்டிக்கு பீடு நடை போட்டு வந்துள்ள டீம் இந்தியா...

ஒரு பால் விடாம பாக்கணும்........