தொடர்கள்
கவர் ஸ்டோரி
இந்தியா -ஆஸ்திரேலியா மோதல்

2023101807200897.jpeg

நவம்பர் 19-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாஆஸ்திரேலியா இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது.

2003 -ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்தித்தது. 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையிலான அணி உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ள இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை இந்தியா வெல்லாவிட்டால் அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று உலகக் கோப்பை வரை நாம் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி. 2011-இல் நம் உலகக் கோப்பையை வென்றோம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் ரவி சாஸ்திரி.

இந்த உலகக் கோப்பை பொறுத்தவரை இந்தியா தான் ஆடிய பத்து போட்டிகளிலும் வென்று இருக்கிறது. அதே நேரம் ஆஸ்திரேலியா லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோற்றுப் போனது. அதை பழி தீர்ப்பதற்காகத்தான் அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு வந்திருக்கிறது ஆஸ்திரேலியா. அதன் அடுத்த இலக்கு இந்தியா தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

2003 -ல் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வென்று ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை வென்றது. இப்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பத்து போட்டிகளில் தொடர்ந்து வென்று இருக்கிறது. அன்று ஆஸ்திரேலியா சாதித்தது போல் இன்று இந்தியா சாதிக்க வேண்டும். சாதிப்பார்கள் என்று நம்புவோம்.