தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

தமன்னா

20231029193800244.jpeg

நடிகை தமன்னா இப்போது இரண்டு இந்தி படம் மூன்று வெப் சீரிஸ் ஒரு தெலுங்கு படம் என்று பிஸியாக இருக்கிறார். ஜெயிலர் படத்தில் காவலா என்று குத்தாட்டம் போட்டதுதான் காரணம் என்று அவரே சொல்கிறார்.

மஹிமா

20231029200122118.jpeg

தமிழில் சாட்டை படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மஹிமா. சந்திரமுகி 2 உள்பட இரண்டு மூன்று தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு படத்தில் அவரை வைத்து நான்கு நாட்கள் சூட்டிங் நடத்தி விட்டு அதற்குப் பிறகு அவரை வேண்டாம் என்று சொல்லி விட்டார்களாம். இது போன்ற அவமானங்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். எதிர்த்து குரல் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்கிறார் நடிகை மஹிமா.

விஜய்

20231029194656292.jpeg

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக பிரமாண்டமான செட் அமைத்திருக்கிறார்கள். 20 நாள் இங்கு தான் படப்பிடிப்பு நடக்குமாம்.

கீர்த்தி சுரேஷ்

20231029194259410.jpeg

கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷை கேரளா கிரிக்கெட் சங்கம் நியமித்திருக்கிறது.

ஜூனியர் ரஜினி

தனது மூத்த மகன் யாத்திராவை சினிமாவில் ஜூனியர் ரஜினியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் ரஜினியின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினி.

ராஷ்மிகா மந்தனா

20231029194432176.jpeg

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி குறிப்பிட்ட ராஷ்மிகா இது எல்லோருக்கும் நடக்கிறது. அமிதாப் பச்சன் உள்பட பல தென்னிந்திய நடிகர்கள் எனக்கு ஆதரவாக குரல் தந்தார்கள். இந்த வீடியோ சாதாரணமானது அல்ல. நான் எல்லா பெண்களுக்கும் சொல்லிக் கொள்வது ஒரு விஷயம் உங்களை பாதிக்கும் போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது இல்லை. ஒரு நிலைப்பாட்டை நீங்கள் எடுத்தால் மக்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்கிறார் ராஷ்மிகா.

ரித்திகா சிங்

20231029194934176.jpeg

குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங் ஒரு புதிய படத்திற்காக சிக்ஸ் பேக் உடல் கட்டுக்கு மாறி வருகிறார்.

சுட சுட

புஷ்பா -2

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு அல்லு அர்ஜுனாவின் சம்பளம் மொத்த வருமானத்தில் 33 சதவீதம் என்று பேசி இருக்கிறார்கள். இந்தப் படம் எப்படியும் ஆயிரம் கோடிக்கு வியாபாரம் ஆகுமாம் அப்படி என்றால் அல்லு அர்ஜுனா சம்பளம் 330 கோடியாக இருக்குமாம். அப்படி நடந்தால் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுனா இருப்பாராம்.

நானி

தெலுங்கு நடிகர் நானி ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தமிழ் கற்று வருகிறார். அவர் முத்த காட்சிகள் பற்றி குறிப்பிடும் போது இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. 2023-ல் மரத்தை சுற்றி வருவது பூவை காட்டுவது என்று மக்களை ஏமாற்ற முடியாது. முத்தக் காட்சி எல்லாம் ஒரு பெரிய விஷயமே இப்போது இல்லை என்கிறார் நானி.

நாலு பெண் இயக்குனர்கள்

கள்ளிப்பால்ல ஒரு டீ இது இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தின் பெயர். இந்தப் படத்தை அபிஷா சினேகா பெல்சின் கனிஷ்கா சிவரஞ்சனி என்று நான்கு பெண் இயக்குனர்கள் இயக்க இருக்கிறார்கள்.

38 மொழிகளில்

கங்குவா சூர்யா திஷா பதானி நடிக்கும் படம் இந்தப் படம் உலக அளவில் 38 மொழிகளில் வெளியிட இருக்கிறோம் என்கிறார் படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.