தொடர்கள்
பொது
அடையார் பார்க் ஓட்டல் ஆப்பிள் பஜ்ஜி –ஆர்.ராஜேஷ் கன்னா

20231029201649237.jpg

சென்னையின் அழுகான 5 ஸ்டார் ஓட்டல் அடையார் பார்க் என்கிற பார்க் ஷெராட்டன் தான். விவிஐபிக்கள் வந்து தங்கி செல்லும் சொகுசு மாளிகை என்றே சொல்ல வேண்டும்.

ஓட்டல் அடையார் பார்க் சொர்க்கத்தின் ஒரு பகுதி என அதன் வாடிக்கையாளர்கள் பெருமிதம் அடைவது தான் இதன் சிறப்பு.

20231029201842610.jpg

பார்க் ஓட்டலில் விவிஐபிக்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவது என்ன தெரியுமா? ஆப்பிள் பஜ்ஜி…இதன் தரம் வேறு எங்கும் உலகில் கிடைக்காது அவ்வளவு சுவையாக இருக்கும் …இனி எங்கே சாப்பிட போகிறோம் என்று பலர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

சென்னை அடையாறில் கிட்டதட்ட ஏக்கர் 4.75 செண்டில் அமைந்த விசாலமான ஹோட்டல் ….இதில் இந்தியாவில் கால் பதிக்காத விஜபிக்கள் இல்லை என்றே சொல்லவேண்டும்.

1980 காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேவரிட ஓட்டல் இது தான் என்ற பேச்சும் உண்டு.

20231029201921823.jpeg

சென்னை தற்போது தன்னுடைய பழமையான கட்டிடங்களை இழந்து வருகிறது. சமீபத்தில் அண்ணாசாலையில் இருந்த டி.வி.எஸ் கட்டிடம் ஜீ-ஸ்கொயர் கட்டிட நிறுவனம் வாங்கியது . இதில் மல்டி ஸ்டிரோஜ் வீடுகள் கட்டப்போவதாக பேச்சு இருந்து வருகிறது.

அண்ணா சாலையில் இருந்த சபையர் திரையரங்கம் , உட்லண்ட்ஸ் டிரைவ்- இன் ஓட்டல் எல்லாம் முடப்பட்டு ரியல் எஸ்டேட் முதலாளிகள் வசம் சென்றுவிட்டது. இங்கு மீண்டும் அபார்ட்மெண்ட் வீடுகள் என்ற கான்கிரீட் அரக்கன் வானுயுற நிற்க போகிறான்.

அடுத்து அடையார் பார்க் ஓட்டல்….பாஷ்யம் என்ற கட்டிட நிறுவனம் இதனை இரண்டு வருடங்களுக்கு முன்பே விலை பேசி வாங்கி விட்டதாக தகவல்.

20231029201953443.jpeg

அடையார் பார்க் ஓட்டலில் பணி புரிந்த பலர் ஓட்டல் கைமாறிய விஷயம் அறிந்து இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே வேறு பணிகளை தேடி சென்று விட்டனர்.

சென்னையில் கோடைகாலம் வந்துவிட்டால் பலர் பார்க் ஓட்டலில் ஒரு மாதம் ரும் போட்டு அந்த குளு குளு ஏசியை அனுபவித்து செல்வது வழக்கம் என்கின்றனர் ஓட்டலில் தங்கிய விஐபி ஒருவர்.

சென்னை அடையார் பார்க் ஓட்டலில் விஜபிக்கள் தங்கள் வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைத்து இங்கு முதலிரவு நடத்துவது வாடிக்கை .

அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் வரும் "ஒரு பூங்காவனம் புது வனம் " என்ற பாடல் அடையார் கேட் ஓட்டல் ஸ்விம்மிங் பூலில் தான் மணிரத்தினம் ஷுட் செய்து படமாக்கினார்.

சென்னை இந்த ஓட்டலில் தான் இந்திய கிரிக்கெட் வாரியம் சீனிவாசன் தலைமையில் வீரர்களை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெறும்.

பல கம்பெனிகள் தங்கள் மீட்டிங்கை இங்கே வைத்து தொழிலினை வளர்த்து வந்தது அடையார் கேட் ஓட்டலின் தூண்கள் கூட வரலாறு சொல்லும்.

சச்சின் டெண்டுல்கர் கூட தன் பிறந்த நாள் கேக்கை இந்த ஓட்டலில் வெட்டி சக அணியினருடன் கொண்டாடிய தருணங்கள் உண்டு.

அடையார் பார்க் ஓட்டலில் நடந்த கிரிக்கெட் கவுன்சிலிங் கூட்டத்தில் இந்திய கேப்டன் பதவியில் இருந்த தோனி நீக்கப்பட்டார் என்ற வரலாறு உண்டு.

தமிழக அரசியல்வாதிகள் பலர் டெல்லியில் இருந்து வரும் விவிஐபிக்களை இங்கே தங்க வைத்து சிறப்பாக சேவைகளை செய்வது வாடிக்கை.

2023102920211327.jpeg

1970 ஆண்டில் ஹாலிடே இன் என்ற பெயரில் இந்த ஓட்டல் துவங்கப்பட்டது. இதனை டிடிகே வாசுவால் அடையார் கேட் ஓட்டலாக விளம்பரப்படுத்தப்பட்டது, பின்னர் 1985 ஆண்டு ஆடை ஏற்றுமதி தொழிலதிபர் கோயல் இந்த ஓட்டல் கைமாறியது. இதனை ஐடிசி நிறுவனம் பராமரிப்பில் 287 தங்கும் அறைகள் இருக்கிறது. பார்க் ஷெராட்டன் மற்றும் டவர்ஸ் என்ற பெயரிலும் அதன்பின் கிரவுன் பிளாசா சென்னை அடையார் பூங்கா என அடையார் கேட் பல பெயர்களில் உருமாறியது.

தற்போது ஐ டி சி நிறுவனம் கிராண்ட சோழா என்ற 600 தங்கும் அறைகள் அடங்கிய ஓட்டலை கட்டிய பின் தற்போது அடையார் பார்க் ஓட்டலை பாஷ்யம் கட்டிட நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

அடையார் பார்க் ஓட்டல் இருந்த இடத்தில் தற்போது டிவின் –டவர்ஸ் என்ற அடுக்கு மாடி குடியிருப்புக்கள் கட்ட பாஷ்யம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

20231029202427119.jpeg

பார்க் ஓட்டல் 2400 சதுர அடி இடத்தினை 10 -12 கோடி விலை பேசி முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஓட்டலை இடித்து விட்டு இதில் 130 அப்பார்மெண்ட் வீடுகள் கட்டப்போவதாகவும் இதன் ஒவ்வொரு வீட்டு அபார்ட்மெண்ட் 5000 முதல் 7000 சதுரடிகள் கொண்ட பரப்பளவு கொண்டது. இதன் விலை அதிகமில்லை ஜெண்டில்மேன் …ஒரு பிளாட் விலை தோராயமாக 15 -20 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என்ற செய்தி வருகிறது.

டிசம்பர் 20 தேதி வரை அடையார் பார்க் எனும் கிரவுன் பிளாசா ஓட்டலில் ஒரு இரவில் தங்க ருபாய் 10 ஆயிரம் முதல் 12000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஓட்டலில் கூப்பன் வைத்து இருப்பவர்கள் இந்த டிசம்பர் 20 தேதிக்கு முன்பு பயன்படுத்தி கொள்ள அடையார் கேட் எனும் கிரவுன் பிளாசா ஓட்டல் நிர்வாகம் வாட்ச் அப் செய்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி உள்ளது.

20231029202452792.jpeg

அடையார் கேட் ஓட்டலில் தற்போது இருக்கும் தக்சின் ரெஸ்ட்ராண்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா , கர்நாடாகா உணவுகள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டு வந்தது. இதுவும் முடப்போகிறார்கள் என்று தகவல் .

மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில் தற்போது அதிக வாடிக்கையாளர் ஓட்டலில் தங்க வருவதில்லை என்பது நிர்வாக தரப்பில் பேச்சாக உள்ளது.

2023102920251923.jpeg

சென்னையின் அடையாளம் அடையார் பார்க் என்னும் கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டல் இனி சமுக வலைதளப்பக்கங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பது ஏரியா வாசிகள் நம்மிடம் தெரிவித்தார்கள் .

ஒரு விஷயம் காணாமல் போகும் போது தான் அதன் மதிப்பு மரியாதையும் தெரியும் என்பது அடையார் பார்க் - கிரவுண் பிளாசா ஓட்டல் தற்போது பேசுபொருள் ஆகிவிட்டது

அடையார் பார்க ஓட்டல் என்றும் கிரவுன் பிளாசா ஓட்டல் என்ற மாபெரும் ஜாம்பவன் 5 ஸ்டார் ஓட்டல் இனி சென்னையில் இருக்காது.