தொடர்கள்
அனுபவம்
லண்டனில் த்ரில்லிங் ஜிக்கு புக்கு - ஸ்வேதா அப்புதாஸ் .

நம் லண்டன் விசிட்டில் சுவாரசியமான சுகமான பயணம் ரயில் பயணம் தான் .

அதிலும் டீயூப் ட்ரெயின் பயணம் மறக்கமுடியாத ஒன்று .

20240128120417648.jpg

லண்டன் நகரில் மட்டும் மூன்று ரயில் பூமிக்கு அடியில் சுரங்க பாதையில் பயணிக்கிறது என்பது ஆச்சிரியமான விஷயம்.

இங்கு ரயில் பயணம் என்பது மிக பாதுபாப்பானது . பயணிகளின் பயணம் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்வதை உணர முடிகிறது .

20240128120632743.jpg

பாதாள டீயூப் ரயிலில் பயணம் செய்ய நாமும் பாதாளத்திற்கு எக்சலேட்டர் மூலம் செல்லவேண்டும் மேலிருந்து கீழே இறங்கி செல்லவேண்டும் .

அதில் பெரும்பாலான ஜோடிகள் கட்டி அணைத்து கொண்டு பாதுகாப்பாக செல்கிறார்கள் .

2024012812092714.jpg

வாட்டர்லூ , பாண்ட் ஸ்ட்ரீட் , கிங்ஸ் க்ரோஸ் ரயில் நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம் அதே சமயம் எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் பயணிகள் செல்வது தான் சிறப்பு .

எல்லா ரயில் நிலையங்களிலும் கூட்டம் இருந்தாலும் இல்லா விட்டாலும் சரியான நேரத்திற்கு ரயில்கள் வந்து போகிறது .

ரயில் கதவுகள் தானாக திறக்கிறது மீண்டும் முடிகொள்கிறது இது நம் மெட்ரோவில் பார்க்கிறோம் .

ரயிலின் உள் செல்ல எல்லோரும் வழி விட்டு ஒழுங்காக செல்கின்றனர் .

20240128121154922.jpg

எங்கு சென்றாலும் ஒழுக்கம் என்பது அவசியம் என்பதை ஆங்காங்கு மக்களின் நடத்தையில் புரிந்து கொள்ள முடிந்தது .

ரயிலில் அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன .

அதில் முக்கிய அறிவிப்பு If something doesn’t look right speak to a member of staff or call 61016 we will sort it “See it, Say it, Sorted!”

என்று கூறப்படுகிறது .

பெண்களிடம் கிண்டல் தேவையற்ற பார்வை பிரச்சனை செய்தால் உடனே மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்தால் போதும் அடுத்த ரயில் நிறுத்தத்தில் ரயில்வே துறை காவல் உடனடி நடவடிக்கையில் இறங்கி விடுகின்றனர் .

எந்த நேரமாக இருந்தாலும் பாதுகாப்பு மிக முக்கியம் என்கின்றனர் .

தெளிவான அறிவிப்புகள் நமக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்துவது இல்லை .

ரயில்களில் மிக முக்கிய அறிவிப்பு

The train approaching is the Jubilee line train to Stradford.

“Mind the gap between the train and the platform edge”

The next station is Bond street

Doors will open on the right hand side.

Change here for the central and Elizabeth line

Next station is Green park

Alight here for The Buckingham Palace

இந்த அறிவிப்பு நம் பயணத்தை சுகமானதாக மாற்றுகிறது என்பது உண்மை .

மிகவும் ஆழத்தில் இருக்கும் பழைய காலத்து டியூப் ட்ரெயின் அப்படியே இருக்கிறது இருட்டாக இருந்தாலும் மின் விளக்குகளின் வெளிச்சத்திற்கு பஞ்சமில்லை .

படு ஸ்பீடாக போகும் ரயில் நம் காதுகளை கிழித்து விட்டு செல்வது போல உணர முடிகிறது .

கிங்ஸ் க்ரோஸ் ஸ்டேஷன் வாட்டர்லூ ஸ்டேஷன் படு பிசி காலை முதல் இரவு வரை பயணிகளின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கின்றன .

பேடிங்டன் ஸ்டேஷன் தான் யு கே யில் மிக நெருக்கடியான ரயில்வே ஸ்டேஷன் என்பது குறிப்பிடத்தக்கது .

யார்க் ரயில் நிலையத்தை கடந்து அதிகமான ரயில்கள் வந்து போவது ஒரு முக்கியமான தகவல் .

யு .கே வாசிகள் அதிகமாக பயணிப்பது ரயில்களில் தான் .

20240128121732297.jpg

லண்டனை சுற்றி 376 ரயில் நிலையங்கள் உள்ளன .

வாட்டர்லூ ரயில் நிலையம் தான் லண்டனில் மிக பெரிய படு பிஸி ரயில் நிலையம் .

லண்டன் டீயூப் ட்ரெயின் மட்டும் 11 லைன் உள்ளன 272 ரயில் நிலையங்கள் 402 கிலோமீட்டர் தூரத்தை கவர் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .இந்த டீயூப் ட்ரெயின் தான் இங்கு மெட்ரோ ரயில் .

லண்டனின் மிக பழமைவாய்ந்த ரயில் நிலையம் லண்டன் பிரிட்ஜ் 1836 ஆம் வருடம் டிசம்பர் 14 ஆம் தேதி திறக்கப்பட்ட ரயில் நிலையம் .

அனைத்து ரயில்களும் படு சுத்தம் ரயில் நிலையங்கள் சொல்லவே வேண்டாம் அவ்வளவு க்ளீன் .

1825 யில் ரயில் போக்குவரத்து துவங்கி இன்று உலகத்தின் மிக பெரிய ரயில் போக்குவரத்து யு கே தான் .

உலகத்தில் முதல் சுரங்க பாதை ரயில் நெட்வொர்க் இங்கு தான் .

மெட்ரோ டியூப் ட்ரெயின் என்று படு பிசி ரயில் போக்குவரத்து யு கே யில் பறந்து கொண்டிருக்கிறது .

டியூப் ட்ரெயின் சப்தம் காது கிழியும் அளவுக்கு .

20240128122233482.jpg

எலிசபெத் மாகாராணி ஒரு ரயில் பயண பிரியர் இவருக்காக தனி ரயிலே பயணித்ததாம் .

ரயில் சுரங்க பாதையில் இசை கலைஞர்களின் இசை சூப்பர் .

லண்டனில் ஹவார்த் என்ற இடத்தில் பழைய பாரம்பரிய ஸ்டீம் ரயில் பயணித்து கொண்டிருக்கிறது .


கிக்லி வொர்த் பள்ளத்தாக்கில் ரயில்வே இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷரியில் உள்ள வொர்த் பள்ளத்தாக்கில் ஐந்து மைல் தூர பயணம் . சுற்றுலாக்களை கவர்ந்து இழுக்கும் சூப்பர் ரயில் பயணம் .

20240128122709420.jpg

இங்கு தனியார் ரயில்கள் அதிகம் அதனால் ஊழியர்களின் ஸ்ட்ரைக் அடிக்கடி ரயில் போக்குவரத்து முடங்கி விடுவது சகஜம் .

லண்டன் ரயில் பயண அனுபவம் ஒரு த்ரில்லிங்கான ஜிக்கு புக்கு தான் .