தொடர்கள்
கலை
" ஐ லவ் பஸ் " - ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த ஞாயிற்று கிழமை காலை ஊட்டி பஸ் நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ,நீலகிரி எம் பி .ராசா சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா இணைந்து "விடியல் பயணம்"

20240127134802298.jpg

என்று நீலகிரி முழுவதும் முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மகளிர் இலவச பயணத்தை துவக்கி வைத்து பதினாறு புதிய மஞ்சள் பஸ்களை மலைகளின் அரசிக்கு அர்ப்பணித்து பயணத்தை துவக்கி வைத்தனர் .

2024012713483549.jpg

விழா முடிந்தவுடன் புதிய பஸ் அருகில் ஒரு பஸ்சை தன் கரத்தில் ஏந்தி கொண்டு நின்று கொண்டிருக்க . நாம் அருகில் சென்று பேசினோம் .

20240127134911455.jpg

அந்த இளைஞர் கொலக்கொம்பை என்ற கிராமத்தில் உள்ள லூசியானா டீ எஸ்டேட்டில் வசிக்கும் ஐ டி பொறியாளர் ரித்தீஷ் என்று அறிமுகம் செய்து கொண்டார் .

தன் கையில் இருந்த மஞ்சள் பஸ் தானே வடிவமைத்தது . "எனக்கு சிறு வயதில் இருந்தே பஸ் என்றால் கொள்ளை ஆசை எங்க எஸ்டேட்டுக்கு பஸ் வாராது கொலக்கொம்பை போய் தான் குன்னூருக்கு பஸ் பிடிக்க வேண்டும் அப்பா அம்மா கூட்டி செல்லும்போது தான் பஸ்சை பார்ப்பேன் அப்படி பஸ்சை பார்த்து ரசித்த நேரங்கள் இன்னும் என் மனதில்

பஸ்ஸில் செல்வது என்றால் அவ்வளவு ஆசை . அது என் மனதில் பதிந்து விட்ட ஒன்று .

கொரோன லாக் டவன் நாட்களில் ஏன் நாமே ஒரு பஸ் உருவாக்க கூடாது என்று துவங்கியது தான் இந்த பஸ் தயாரிப்பு என்று ஆச்சிரியமாக கூறுகிறார் .

20240127135215900.jpg

நான் உருவாக்கின முதல் பஸ் கோவை டு கோபி பஸ் தான் அது எனோ அந்த பஸ் மேல் ஒரு அட்ராக்ஷ்ன் . அந்த பஸ்சை முதலில் கோவையில் பார்த்தேன் ரொம்ப பிடித்து விட்டது .

போரெக்ஸ் போம் ஷீட் மெட்ரியல் கொண்டு இந்த பஸ் களை உருவாக்கினேன் .

20240127135332984.jpg

ஒரு பஸ் எப்படி சூப்பராக இருக்குமோ அது போல அருமையாக உருவாக்கினேன் இந்த மாடல் டாய் பஸ்களை என்கிறார் .

ஒரு பஸ்சில் எப்படி லைட் முதல் எல்லாம் இருக்குமோ அப்படியே வடிவமைத்தேன் .

20240127135430144.jpg

லாக் டவன் நேரத்தில் நிறைய டைம் இருந்ததால் பஸ் தயாரிப்பில் இறங்கினேன் .

பஸ் தயாரித்த பின் எனக்கே ஆச்சிரியம் நான் தானா இதை ரெடி செய்தேனா? என்று .

இதுவரை பத்து பஸ் தயாரித்து இருக்கும் ரித்தீஷ் கூறுகிறார் ,

20240127135533124.jpg

" ஒரு பஸ் ரெடி செய்ய ஒரு மாத காலம் ஆகுமாம் .தன் ஐ டி வேலை நேரம் முடிந்த பின் நேரம் ஒதுக்கி பிட் பிட்டாக செய்து முடிப்பேன் ".

ஒரு பஸ்சின் விலை எவ்வளவு என்று கேட்க ,

ஒரு பஸ்சின் அளவை பொருத்து விலை நிர்ணயிக்கிறேன் .விலை என்று சொன்னால் ஒரு பஸ் ஐந்தாயிரம் என்கிறார் கூலாக .

அப்பா ராமசாமி லூசியானா டீ எஸ்டேட்டில் சூப்பர வைசர் அம்மா அன்புச்செல்வி எஸ்டேட்டில் வேலை இவருக்கு ஒரு தம்பி ரேவின் குமார் பிளஸ் டு படிக்கிறார் .

20240127135619548.jpg

ரித்தீஷ் அரசு போக்குவரத்து பஸ்களை மட்டும் தயாரிக்கிறார் .

அரசு பஸ் தான் எனக்கு பிடிக்கும் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்கிறார் .

இந்த புதிய மஞ்சள் பஸ் அறிமுகம் செய்தவுடன் தயாரித்தேன் அதை இன்று அமைச்சர் ஊட்டியில் அறிமுகம் செய்கிறார் என்று வந்தேன் என்று கூற .

ஏன் உங்க பஸ்சை அமைச்சரிடம் காட்டியிருக்கலாமே என்று கேட்க

போக்குவரத்து அதிகாரிகள் அறிமுகம் செய்கிறோம் என்று கூறி நேரம் இல்லை என்று கூறிவிட்டனராம் .

நம்மிடம் கூறியிருந்தால் அமைச்சரிடம் அறிமுகம் செய்திருக்கலாமே என்று கூறினோம் .

சரி மாலை குன்னூர் சென்று அமைச்சரை பாருங்கள் என்று கூறி அனுப்பிவைத்தோம் .

தன் பஸ்ஸுடன் குன்னூர் சென்ற ரித்திஷை அதிகாரிகள் அமைச்சர் சிவசங்கர் , ராமச்சந்திரன் மற்றும் எம். பி. ராசாவை பார்க்க அனுமதிக்கவில்லையாம் .

20240127135705158.jpg

தன் தயாரிப்பு பஸ்களை தனக்கு நன்றாக அறிமுகமான ஓட்டுநர்களுக்கு கொடுத்துள்ளாராம் .

ரித்தீஷ் தன் பள்ளி படிப்பை சேலாஸ் லிட்டில் பிளவர் பள்ளியில் பயின்று பின் கோவை எஸ் .ஆர் .எஸ் .கல்லூரியில் ஐ டி முடித்து தற்போது ஐ .டி .வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .

இந்த அழகிய பஸ் தயாரிப்பு ஒரு ஹாபியாக இருந்தாலும் நிஜ பஸ் போல இருப்பதால் அது ஒரு சாதனை தான் .

அதே நேரத்தில் இவரின் பஸ்கள் சில டி கேப்களில் காட்சியாக வைக்கும் பொழுது பலர் பார்த்து ரசிக்க செய்வார்கள் வாங்கவும் செய்யலாம் . பஸ் பிரியர்களுக்கு என் டாய் பஸ் மேல் ஏகப்பட்ட மோகம் ஏற்பட்டுள்ளது .

நான் நீலகிரி பஸ் பயண தட நேரங்களையும் வடிவமைத்து பஸ் நிலையங்களுக்கு கொடுத்துள்ளேன் என்கிறார் .

20240127135811209.jpg

ரித்தீஷ் போன்ற பல இளைஞர்கள் சாதனை செய்து அதை அரசிடம் அறிமுகம் செய்ய தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் நம் மரியாதைக்குரிய அரசு அதிகாரிகள் தான் .