தொடர்கள்
அனுபவம்
ஆழ்கடலில் பிரார்த்தனை செய்த பிரதமர் - மாலா ஶ்ரீ

20240202053450885.jpeg

இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக தலங்களில், குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் அமைந்துள்ள துவாரகா நகரம்.

யதுகுல அரசர்கள் ஆண்ட கோவர்த்தன நாட்டின் தலைநகராக துவாரகா இருந்தது.

அங்குதான் பகவான் கிருஷ்ணர் பிறந்ததார். காலப்போக்கில் துவாரகா நகரம் கடலுக்குள் மூழ்கிவிட்டது. இதுதொடர்பாக பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் நடத்தியதில், ஆழ்கடலுக்குள் அதன் அடையாளங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றான துவாரகா, ஆழ்கடலுக்குள் மூழ்கியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் மாநிலத்துக்குச் சென்றிருந்தார். ராஜ்கோட் உள்பட 5 இடங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஆழ்கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகருக்கு சென்று பூஜை செய்ய பிரதமர் மோடி விரும்பினார்.

இதைத் தொடர்ந்து அவர் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் அரபிக்கடலுக்குள் காவி உடையுடன் பிரதமர் மோடி படகில் பயணித்தார்.

கிருஷ்ண பகவானுக்குப் பிடித்த மயிலிறகுடன் ஸீ வாக்கிங் ஹெல்மெட்டை உடலில் பொருத்திக் கொண்டு பிரதமர் மோடி கடலுக்குள் இறங்கினார்.

அவருடன் பிற ஸ்கூபா டைவிங் வீரர்கள் பாதுகாப்புக்கு உடன் சென்றனர். பின்னர் ஆழ்கடலின் தரைப் பகுதியில் பிரதமர் மோடி அமர்ந்து, மயிலிறகை பள்ளம் தோண்டி நட்டுவைத்து, பல்வேறு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ஆழ்கடலின் தரைப் பகுதியைத் தொட்டு வணங்கிவிட்டு வந்தார் பிரதமர்.

‘கடல்நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தது தெய்வீக அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம், காலவரையற்ற பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஸீ வாக்கிங் ஹெல்மெட் வியட்நாம், பாங்காக் நகரங்களில் மிகப் பிரபலம். படு ஹெவியான இந்த ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டு தண்ணீருக்குள் மூழ்கினால், மூச்சு விட சிரமம் இல்லாமல் சாதாரணமாக சுவாசித்துக் கொண்டு கண்ணாடி வழியே ஆழ்கடலில் பார்க்கலாம். ஆனால் அதிக ஆழத்திற்கு இதில் செல்ல முடியாது.

ஆனாலும் பிரதமருக்கு தில் அதிகம் தான்.