தொடர்கள்
சினிமா
தமிழ் சினிமாவில் போதைப் பொருள் பணம் !!!

20240201191330152.jpg

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட ஜாபர் சாதிக்,நடிகர் மைதீன் விடுதலை சிறுத்தை பிரமுகர் சலீம் ஆகியோர் தமிழ் சினிமாவில் செய்துள்ள முதலீடுகள் பற்றி போதைப்பொருள்தடுப்பு போலீஸ் விசாரித்து வருகிறது.

இதில் முக்கியமானது தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முதலீடு செய்து வரும் மதுரை சினிமா பைனான்சியர் இவர்களின் திடீர் வளர்ச்சியை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் தகவல் சொல்லவும் போதை பொருள் தடுப்பு போலீஸ் விசாரிக்க சொன்னது.

அப்போதுதான் 2000 கோடிக்கு அதிகமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை அவர்கள் தமிழ் சினிமாவில் முதலீடு செய்திருப்பது தெரிந்திருக்கிறது.

நடிகை கயல் நடித்த மங்கை என்ற படம் இவர்கள் தயாரிப்புதான்.

இது தவிர இயக்குனர் அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இந்த கடத்தல் புள்ளிகள் இவர்கள் தயாரித்து வருகிறார்கள்.

20240201201703907.jpeg

22 ஆம் தேதி இறைவன் மிகப் பெரியவன் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு அமீருக்கு கிடைத்த தகவல் எல்லாம் பயத்தை ஏற்படுத்த உடனே தயாரிப்பாளர் பின்னணி பற்றி எல்லாம் எனக்கு உண்மையில் எதுவும் தெரியாது தவறான எந்த செயலுக்கும் நான் உடந்தையாக மாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டார் இயக்குனர் அமீர்.


நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி போன்ற பிரபலங்களுடன் சேர்ந்து ஜாஃபர் சில தொழில் முதலீடுகள் செய்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசுகிறார்கள்.

இது தவிர சமூக வலைதளத்தில் இவர்களுடன் வெற்றிமாறனை தொடர்பு படுத்தியும் ஒரு செய்தி உலா வருகிறது. வெற்றிமாறனின் வலதுசாரி எதிர்ப்பு பிரச்சாரத்தை தன் சினிமாவில் பயன்படுத்துவது மேடையில் பேசுவதற்கு பின்புலமாக இருப்பவர்கள் இவர்கள்தான் என்கிறது அந்த தகவல். ஆனால் இதுவரை அந்த தகவலை வெற்றிமாறன் மறுக்கவில்லை.


இது தவிர கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் காதலிக்க நேரமில்லை படத்துக்கும் ஜாபர் தான் பைனான்ஸ் என்று அரசல் புரசலாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது உண்மையா... இல்லையா... என்பதையும் அவர்கள் தான் விளக்க வேண்டும்.