தொடர்கள்
அனுபவம்
வடக்கே தலை வைத்து படுக்காதே? - ஆனந்த் ஶ்ரீனிவாசன்..

20240222180200360.jpg

வடக்கே தலை வைத்து படுக்காதே? என்று என் தாயார் சிறுவயதில் எங்களிடம் சொல்லும் போது ஏன் அப்படிப் படுக்கக் கூடாது என்று காரணம் கேட்டால் எனக்குத் தெரியாது பெரியவர்கள் சொன்ன அறிவுரை அதன் படி நடந்தால் நன்மை என்பார்.


வடக்கே தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். நம்முடைய முன்னோர்கள் காரணக் காரியம் இல்லாமல் எதையும் செய்வதில்லை. ஆனால், அந்தக் காரணம் இன்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.


ஓரளவு அறிவு வந்ததும் அந்தத் தேடுதலுக்கு விடை. .விஞ்ஞானப் பூர்வமாகக் கிடைத்து பூமியையே மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் குணாம்சமே ஒத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பார்கள். மனித உடலில் மூளையை வடக்கு என்றும் பாதத்தைத் தெற்கு என்றும் சொல்வார்கள். இதனால்தான் வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவேதான் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்றனர்


Macneto biology என்கிற விஞ்ஞானப் பிரிவில் ஆய்வுகளைக் கொண்ட விஞ்ஞானிகள் வடக்குப் பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது.அப்படி படுப்பவர்களக்கு மன உளைச்ச லக்கு ஆளாவார்கள் என்பதே கண்டு அறிந்த உண்மை.


வடக்கே ஏன் தலை வைத்து ஏன் உறங்கக்கூடாது என்று சொல்வதற்கு என்ன காரணம் என்பது பற்றி வாஸ்து ஜோதிடம் என்ன சொல்கிறது?


''உண்ணுவது எவ்வளவு அவசியமோ அந்த அளவு நல்லபடியாக உறங்குவதும் அவசியம். நல்ல உணவும், நல்ல ஓய்வும் இருந்துவிட்டால் போதும், நாம் செய்ய வேண்டிய வேலைகளை உற்சாகமாகச் செய்யமுடியும். நம்முடைய வேலைகளில் நமக்குத் தெளிவான மனநிலை காணப்படும். நல்ல உறக்கம்தான், விழித்துக்கொண்ட பிறகு நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்; நம்மை உற்சாகமாகச் செயல்படத்தூண்டும்.

அடிக்கடி வடக்கில் தலை வைத்து படுப்பவர்களுக்கு மூளை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் எக்காரணம் கொண்டும் வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.


படுக்கை அறையில் படுக்கும்போது, தெற்கே தலைவைத்து வடக்கே கால் நீட்டி தூங்குவது மிக நல்லது. நன்றாகத் தூக்கம் வரும். மேற்கே தலை வைத்தும் படுக்கலாம்


கிழக்கே தலை வைத்து குழந்தைகளைப் படுக்க வைப்பது நன்மை தரும். அறிவு நன்றாக வளரும். சிந்தனைகள் சிறக்கும் .இப்போது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா.


நீங்கள் விஞ்ஞான அறிவை ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது வாஸ்து ஜோதிட அறிவை ஏற்றுக் கொண்டாலும் சரி

இனி வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்..