தொடர்கள்
அரசியல்
ஊட்டி மனு தாக்கலும் போலீஸ் தாக்கலும் . நேரடி ரிப்போர்ட் . - ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த திங்கட்கிழமை 25 ஆம் தேதி நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

20240228145609222.jpg

இரண்டு பெரும் கட்சிகளின் மனு தாக்கல் என்றவுடன் நீலகிரி போலீஸ் சற்று டென்ஷானகி நின்றார்கள் .

20240228145637290.jpg

காலை பத்து மணிக்கு ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் பிஜேபி கொடிகள் ஏந்தி தொண்டர்கள் ஸ்லொவ்மோஷனில் வந்த வண்ணமிருக்க .

20240228150801764.jpg

பிஜேபி வேட்பாளர் எல் .முருகனும் அண்ணாமலையும் இதோ வந்து விடுவார்கள் என்று மைக்கில் கூறிக்கொண்டே இருக்க வந்த பாடில்லை .

20240228145716798.jpg

மதுரை மூலனுரில் இருந்து வந்திருந்த நடன குரூப் நடனம் ஆட மேளா தாள சப்தம் காதை பிளந்தது அருகில் சாந்திவிஜய் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவிகள் பொது தேர்வு எழுதி கொண்டிருந்தனர் இந்த சப்தத்தை கேட்டுக்கொண்டே பாவம் .

20240228145749837.jpg

ஒரு நடன நங்கைக்கு தலைசுற்ற அருகில் உள்ள பார்மஸியினுள் நுழைந்து தண்ணீர் வாங்கி ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு மீண்டும் நடனத்தில் கலந்து கொண்டார் .

20240228145815154.jpg

அதிமுக ஓ பி எஸ் அணியினரும் வந்த சேர படுக ஹாட்டி பெண்கள் ஆண்கள் கூட்டம் வந்து சேர கூட்டம் அதிகமாகியது .

அப்பொழுதும் வேட்பாளர் வந்த பாடில்லை .

20240228145857164.jpg

அதற்குள் அ இ அ தி மு கா வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் கூட்டணி கட்சியினருடன் சரியாக 11.45 மணிக்கு ஆஜராக

2024022815070081.jpg

இரு கட்சிகளும் ஒன்றாக மோதும் நிலைமை உருவானது .

அதற்குள் காவல் துறை உயர் அதிகாரிகள் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் என்று அ இ அ தி மு கா வினரை கேட்டுக்கொள்ள .

20240228145923326.jpg

ஆட்டோ சங்க தலைவர் ஷண்முகம் , கோபாலகிருஷ்ணன் எஸ் பி இன்ஸ்பெக்டரிடம் நாங்க வெய்ட் செய்கிறோம் என்று கூறி

அவர்கள் ஒதுங்கி நின்றார்கள் .

சிறிது சலசலப்பு ஏற்பட பி ஜே பி யினர் ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் போட அ இ அ தி முகவினர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷம் போட்டுக்கொண்டே ப ஜா கவினரை நெருங்கி வர டென்ஷன் ஆன போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தினர் .

20240228150031184.jpg

அதற்குள் எல் .முருகனும் அண்ணாமலையும் மாரியம்மன் கோயில் சென்று வழிபட்டு பிரச்சார வாகனத்தில் வந்து எற ஏகப்பட்ட கோஷம் அதிர்ந்தது .

20240228150232234.jpg

ப ஜா காவினரின் ஊர்வலம் நகர சற்று டென்ஷன் குறைந்தது .அதற்குள் அ இ அ தி மு கா மாவட்ட செயலர் வினோத் வந்து வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை பிரச்சார வாகனத்தில் ஏற்றி கோஷம் எழுப்பி மனு தாக்கல் செய்ய நகர்ந்தனர் .உடன் கூடலூர் எம் .எல் .ஏ பொன் ஜெயசீலன் உடன் வந்தார் .

20240228150107927.jpg

ப ஜ கா வினர் பின்னே செல்ல அதற்குள் நீலகிரி எஸ் பி சுந்தரவடிவேல் ஸ்பாட்டில் ஆஜர் .

ப ஜ கா வேட்பாளர் எல் .முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை அ இ அ தி மு கா வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை காத்திருக்க வைத்திருக்கலாம் .

அதை செய்யாமல்

20240228150154276.jpg

சற்று அவசரமாக நகர செய்ததால் மீண்டும் பிரிக்ஸ் பள்ளி அருகில் சென்றவுடன் மீண்டும் கோஷங்கள் தேவையற்ற தள்ளுமுள்ளு ஏற்பட சற்று ஏகப்பட்ட டென்ஷன் , குழப்பத்தில் எஸ் பி தடியடி என்று கூற இரு கட்சி பிரமுகர்களும் தங்களை காப்பாற்றி கொள்ள கூட்டத்தில் ஓட பலருக்கு அடி பட சிலரை போலீஸ் லத்தி பதம் பார்த்தது ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு தர்ம அடி .மூன்று பேரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மருத்துவ மனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது .

அதே இடத்தில் வேட்பாளர் முருகனும் , அண்ணா மலை சாலையில் அமர்ந்து போராடி " இந்த சம்பவத்துக்கு நீலகிரி எஸ் .பி .தான் காரணம் என்று கூறினார்கள்

ஒரு வழியாக எஸ் .பி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க பிரச்சனை விஸ்வரூபம் எடுக்காமல் இரு கட்சி வேட்பாளர்களும் மனு அளித்துவிட்டு சென்றனர் .

நல்லவேளை வேறு கட்சி மனு தாக்கவில்லை அன்று .

என்று நம்மிடம் ஒருவர் கூறினார் ,

20240228150329917.jpg

"எந்த பிரச்சனையும் இல்லை முருகன் அண்ணாமலை மற்றும் லோகேஷ் தமிழ் செல்வன் வேறு ஊராக இருக்கலாம் ஆனால் நாங்கள் அண்ணன் தம்பிகள் எங்களுக்குள் பிரச்சனையே இல்லை காவல் துறை தான் இதற்கு காரணம்" என்று கூறினார்கள் .

20240228150512257.jpg

தி மு கா இந்திய கூட்டணி வேட்பாளர் ஆ .ராசா தன் மனுவை மிகவும் கண்ணியமாகவும் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமலும் காவல் துறைக்கு தலைவலியை உண்டாகாமல் மனு தாக்கல் செய்ததை ஊட்டி வாசிகள் ரசித்தனர் .

20240228151510206.jpg

புதன் கிழமை காலை பத்து மணிக்கு வேட்பாளர் ராசா மாவட்ட செயலாளர் முபாரக் அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் ஊட்டி எம் .எல் .ஏ கணேஷ் திருப்பூர் எம் .எல் ஏ மற்றும் அவிநாசி எம் எல் ஏ மாவட்ட தலைமை கழக அலுவலகத்திற்கு வந்து கலைஞரின் படத்திற்கு பூ தூவி அஞ்சலி செலுத்தி விட்டு பிரச்சார வாகனத்தில் ஏறி லிபெர்ட்டி சந்திப்பில் நின்று வாழ்த்தி பேசினார்கள் .

முபாரக் கூறும் போது ,

20240228151548605.jpg

" இன்று மனு தாக்கல் மட்டும் தான் ஏற்கனவே அவிநாசி ,மேட்டுப்பாளையம் , கோத்தகிரி , உதகை மற்றும் கூடலூர் நகரங்களில் எழுச்சி மிகு தொண்டர் கூட்டத்தை வரவேற்பை சந்தித்து பெருமிதம் அடைந்தோம் . அதனால் வேட்பு மனு செய்யும்போது எதற்கு ஊர்வலம் காவல் துறைக்கு எதற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் .அதனால் தான் உங்களை இங்கு சந்திக்க வந்தோம் இப்பொழுது காரில் சென்று மனு தாக்கல் செய்வோம் வெற்றி நமதே நீலகிரி தொகுதியில் எந்த மாவட்ட செயலாளர் அதிக வாக்கு பெற்று தருகிறாரோ அவருக்கு தங்க சங்கிலி போடப்படும் " என்று கூற ராசா அந்த தங்க சங்கிலியை முபாரக்கே போட்டு கொள்வார் என்று கிண்டலடிக்க சிரிப்பு அதிர்ந்தது .

வேட்பாளர் ராசா " நான் 2009 ஆம் வருடம் இந்த மாவட்டத்திற்கு வந்த போது சில பத்திரிகையாளர்கள் என்னிடம் ஏன் உங்கள் ஊரை விட்டு விட்டு முன்னுற்றி ஐம்பது கிலோ மீட்டர் கடந்து தேர்தலில் போட்டியிடுகிறீர்களே என்று கேட்டனர் அன்று அவர்களிடம் சொன்ன பதில் நான் பிறந்த பெரம்பலூர் வீட்டை விட்டு புகுந்த வீடு தான் நீலகிரி அன்றிலிருந்து இன்று வரை இந்த மாவட்டத்திற்கு என் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன் உங்களில் ஒரு சகோதரனாக தான் இருக்கிறேன் .இங்கு ராசா என்பவன் யார் என்று தெரிய தேவையில்லை நான் உங்களில் ஒருவன் எனக்கு அறிமுகம் தேவையில்லை " என்று கூறி தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தை துவங்கினார் .

20240228151708787.jpg

நம் அருகில் ஒரு கழக கண்மணியின் குரல் ஒலித்தது ராசா கைய வச்சா அது ரங்கா போனதில்ல!.என்று .