தொடர்கள்
பொது
இது ஒரு தர்ம யுத்தம்  - டாக்டர் கர்னல் கே எம் ஹரிகிருஷ்ணன்

20240229192818303.jpg

கடந்த ஒரு வாரமாக கர்னாடக சங்கீத உலகில் ஒரு புயல் காற்று அடித்துக்கொண்டிருக்கிறது.

காரணம், சென்னயில் உள்ள மியூசிக் அகாடமி டி. எம். கிருஷ்ணாவுக்கு “சங்கீத கலாநிதி” விருது வழங்கப்போவதாக அறிவித்தது.

அதனால் என்ன?

சங்கீத கலாநிதி விருது கர்னாடக சங்கீத உலகில் ஒரு மகத்தான விருது. இசை உலகத்தில் இதை நோபல் பரிஸோடு சமமாக கருதலாம். இதை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமான சமகால கர்நாடக இசை கலைஞருக்கு வழங்கப்படுகிறது. 1929ல் டி.வி.சுப்பா ராவ், டி எஸ். சபேச ஐயர் அவர்களுக்கு இந்த விருது முதன் முதலில் கொடுக்கப்பட்டதிலிருந்து இன்று வரை இது வருடாந்திர முறையாக செயல் பட்டு வந்திருக்கிறது. இடையில் ஒரு சில வருடங்கள் இந்த விருதுகள் அறிவிக்கப்படாமல் போனது.

குறிப்பாக டி . என் . ராஜரத்னம் பிள்ளை , செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயர் , ஜீ என் பாலசுப்பிரமணியம் , எம் . எஸ் . சுப்புலட்சுமி போன்றோர் இந்த விருதினால் கௌரவிக்கப்பட்டவர்கள். விருதுக்கு யார் தகுதி பெறுகிறார்கள் என்பதை தீர்மானிக்க ஒரு தேர்வுக் குழு உள்ளது.

ஆனால்,

இப்போது, இந்த வருட புயல் காற்றுக்கான காரணம் குறித்து ஆராய்ச்சி செய்வோம்.

எனது 60 ஆண்டுகால அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன், டி . எம் . கிருஷ்ணா 2010 - 2012 வரை மிகவும் திறமையான பாடகராக இருந்தார். அப்போதெல்லாம் அவரது எந்த கச்சேரியும் நான் மிஸ் பண்ணியதில்லை.

அதன்பிறகு, அவர் கொஞ்சம் வேடிக்கையான முறையில் நடக்கத் தொடங்கினர். கர்நாடக இசையில் உள்ள தவறுகளை சரிசெய்வேன் என்று அவர் கூறினார் . இது ஒரு உண்மையான சங்கல்பம் என்றால் , அது மிகவும் நல்லது . ஆனால் நடை முறையில் என்ன வந்தது என்னவோ பொய்கள் , பித்தலாட்டம், கோமாளித்தனமும் தான்.

உலகில் இருக்கும் அனைத்து இசையிலிருக்கும் வேறுபட்ட மாற்பட்ட உன்னதமான தகுதி நமது கர்நாடக சங்கீதத்தில் உள்ளது . இது முற்றிலும் தெய்வீகமானது . நமது வாக்கேயக்காரர்கள் (கீதங்கள், கீர்த்தனைகள், பதங்கள் போன்றவற்றை இயற்றுபவர் கர்நாடக இசைத் துறையில் வாக்கேயக்காரர் என அழைக்கப்படுவார்) கடவுளைப் பற்றியும் தெய்வீகத்தைப் பற்றியும் பாடுகிறார்கள் . அதற்கு என்று ஒரு வழி முறையும் இருக்கிறது.

டி . எம் . கிருஷ்ணா அது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டார் . அவர் எம் . எஸ் சுப்புலக்ஷ்மி போன்ற மாபெரும் விதூஷிகளைப் பற்றி ஆபாசமாக பேசத் தொடங்கினார் . தியாகராஜரின் பாடல்களில், இயேசு, அல்லாவின் பெயரால் பாடத் தொடங்கினார் . அவர் கச்சேரியின் நடுவே எழுந்து போய்விடுவார். ஒரு நாள் அவர் லுங்கியை கட்டிக்கொண்டு வருவார் . இவை அனைத்தும் மற்ற மதங்களில் அவருக்கு உள்ள மரியாதையா? இல்லை . அவருக்கு மற்றவர்கள் யார் மீதும் மரியாதை இல்லை . அவர் தனது சொந்த சுயநலத்துக்காகவும், பாபுலாரிடிக்காகவும் தான் இதை எல்லாம் செய்தார் என்பது அநேக ரசிகர்களுடய கருத்து. அப்படி செய்தால் தானே எல்லோரும் அவர் யார் என்று கேட்பார்கள்?

உதாரணமாக , ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் . அழகான கலைப் படங்களை யார் பார்க்கிறார்கள் ? கலையில் உண்மையான ஆசை உள்ளவர்கள் மட்டுமே. ஆனால் ஒரு படத்தில் , எந்தவொரு சர்ச்சையும் வெற்றியைக் கொண்டுவரும். அதில் அசிங்கம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு பாப்புலரிடி, பேசு பொருளாகிறது. டி. எம். கே. இந்த ரீதியை மிக ச்ரத்தையுடன் கைப்பற்றி வருகிறார்.

கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், டி . எம் . கிருஷ்ணர மிகவும் பணக்கார பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா பாட்டன் டி . டி . கிருஷ்ணமாச்சாரி . வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி புத்தகங்களில் மட்டுமே கண்டு அறிந்தவர்.

12 வயதில், முழுக்க ரெடியாகாத நிலையிலேயே அரங்கேற்றம் செய்தவர் என்றால் பாருங்களேன். அதிர்ஷ்டவசமாக, அப்போது மியூசிக் அகாடமியின் தலைவராக இருந்த டி . டி . வாசு (டி டி கேயின் மகன்), கிருஷ்ணாவின் மாமா ஆவார். டி . டி . வாசு 20 ஆண்டுகளாக அதே பதவியில் இருந்தார். கிருஷ்ணனுக்கு அகாடமியில் 20 ஆண்டுகளும் தவறாமல் பாட வாய்ப்பு வழங்கப்பட்டது . அதன் பிறகு டி . டி . வாசு இசை அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், இசை அகாடமியின் தலைவர் என். முரளி பொறுப்பை ஏற்றார். என். முரளி மற்றும் டிடி வாசு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா ? உண்டு உண்டு! அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மை . டி . டி . கே இந்து செய்தித்தாளின் உரிமையாளர். என்.முரளியும் அவரது சகோதரர் என் . ராம் இந்து செய்தித்தாள்களின் தலைவராக இருந்தவர்கள்.

இப்போது, நமது கிருஷ்ணா எங்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதைப் பற்றி சிந்திப்போம். 2015 முதல் 2024 வரை, கிருஷ்ணா அகாடமியில் ஒரு முறை கூட பாடவில்லை .

திடீரென்று, அவர் அகாடமியில் (இதுவரை நடக்காத) தியாகராஜ ஆராதனை விழாவின் தலைமை வகிப்பதற்கு அழைக்கப்படுகிறார் . இது இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. மார்ச் 2024 இல், கிருஷ்ணா ஆண்டின் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அது மட்டுமல்ல! அகாடமியின் மேலும், திரு முரளியின் மீதும் பலப்பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் நமது கிருஷ்ணா.

ஆனால் அதை எல்லாம் மன்னித்து, அகாடமி அவரை 2024 சங்கீத கலாநிதி விருதுக்கு தகுந்த வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா?

இதன் விளைவு முன்னணி கர்னாடக இசை கலஞர்கள் பலரும் வரும் கச்சேரி சீசனிலிருந்து விலகுவதாக தெரிவிக்க ஆரம்பித்து அது உலக அளவில் பரவி வருகிறது. கருத்துகள் எதிர் கருத்துகள் என்று தினமும் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது.

கிருஷ்ணா, அடிக்கடி சொல்வதோ பிராமணர்கள் சங்கீத கலாநிதி விருதை அவர்கள் பிராம்மணர்களாக இருக்கும் ஒரே காரணத்தால் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று. அவரும் அந்த கோஷ்டியை சேர்ந்தவர் என்பதை மறந்து, விருதுக்காக தாங்க் யு சொல்லி விட்டார்! என்ன ஒரு மகான்! என்ன ஒரு நாணயம்!.

தற்போது மியூசிக் அகாடமியா? ஒட்டுமொத்த கர்நாடக இசைத் துறையையும், இந்து மத ரீதிகளும் சனாதன வழி முறைகளையும் வெளியேற்றிவருவது ஆச்சரியமாக இருக்கிறதா?

இப்போது நடக்கும் கலவரம் கிருஷ்ணவின் விருதை பற்றியது மட்டுமல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு தார்மீகப் போராட்டம் .

கிருஷ்ணா ஒரு குற்றவாளியா அல்லது முட்டாள்தனமாக சிக்கிக்கொண்டாரா ? யாருக்குத் தெரியும்...