தொடர்கள்
அழகு
ராணுவ மருத்துவ படை 260 - டாக்டர் கர்னல் கே எம் ஹரிகிருஷ்ணன்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மூன்றாம் தேதி இராணுவ மருத்துவ படையின் சரித்திரத்தில் ஒரு சிறந்த நாளாக அமைகிறது.

1764 ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று "வங்காள மருத்துவ சேவை" என்ற பெயரில் ஒரு தனிப்பிரிவு தொடக்கப்பட்டது.

அதுவே 1943 ஆம் ஆண்டில் அதே ஏப்ரல் மூன்றாம் தேதி "இந்திய இராணுவ மருத்துவ படை பிரிவு (IAMC ) " என்று பெயர் வைக்கப்பட்டது. ராணுவ மருத்துவப் படையில் வேலை செய்யும் எல்லோரும் மிகக் கடுமையாக உழைத்து முதல் மற்றும் இரண்டாவது மகா யுத்தப் போரில் ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் உயிரை காத்தனர். இவ்வாறு IAMC பெரும் புகழ் அடைந்தது.

1966 ஏப்ரல் 3ம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் Dr சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் "ப்ரெசிடெண்ட்'ஸ் கலர்ஸ்" எனப்படும் மாபெரும் விருதை AMC க்கு வழங்கினார்.

(சமீபத்தில் AFMC என்கிற ராணுவ மருத்துவக்கல்லூரிக்கு அதே "ப்ரெசிடெண்ட்'ஸ் கலர்ஸ்" நமது தற்பொழுதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வால் கவுரவிக்க பட்டது).

இந்த வருடமும் ஏப்ரல் 3-ஆம் தேதி வழக்கம்போல் ஏ. எம். சி. தினத்தை பெங்களூரில்ஏ. எம். சி. கொண்டாட்டத்தில் நான் பங்கேற்று மகிழ்ந்தேன்.இதில் பெங்களூர் AMC குழுவின் தலைவராக இருக்கும் ஏ.வி.எம். ரேணுகா கொண்டேயின் தலைமயில் இந்த ஆண்டு, அதாவது 260 ஆம் ஆண்டுவிழா நடந்தது. க்ரூப் கேப்டன் கங்காவாடிகர் எல்லா ஏற்பாடுகளும் நடு மைய்யத்தில் இருந்து கவனித்துக்கொண்டார்.

20240311224137994.jpg

வாட்ஸாப்பில் ஒரு குழு துவக்கி, ராணுவ மருத்துவப் படையில் தற்போது சேவை செய்யும் மருத்துவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டன. சுமார் 320 ஓய்வு பெற்ற அதிகாரிகள், அவர்கள் மனைவிகள் உட்பட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்! 20240311224210802.jpg

மகாத்மா காந்தி சாலையில் உள்ள ராஜேந்தர் சிங்ஜி நிறுவனத்தில் தான் இந்த விருந்து நடைபெற்றது. சுற்றுணவு, குளிர்பானங்கள், போன்ற அனைத்தையும் ரெடி செய்து வைத்திருந்தார்கள். விருந்தினர்கள் நுழையும் சமயத்திலேயே ஒரு பெயர் தகடு, ராபிள் டிக்கெட் .எல்லாம் கொடுத்து, எல்லோரையும் பணிவன்புடன் உள்ளே அழைத்துச் சென்று செல்வதற்காக சர்வீஸ்-இல் இருக்கும் மருத்துவர்கள் பலர் ரெடியாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அடிக்கடி வந்து எங்களை விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். இறுதியாக நாங்கள் பார்ட்டி முடித்து திரும்பி செல்லும் சமயத்தில் போகும் வழி க்கான ஏற்பாடுகள் செய்து வைத்தனர்.

20240311224248209.jpg

நான் ராணுவ மருத்துவநாக 26 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் ஏ. எம். சி. நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.

சில சமயம் ஏற்பாடுகளில் பங்கும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவில் இவ்வளவு அழகாக ஒரு ஏற்பாட்டை நான் செய்ததும் இல்லை பார்த்ததும் இல்லை. இப்பொழுது வேலை செய்யும் மருத்துவர்கள் அனைவருமாக சேர்ந்து முழு மனதுடன் செய்த இந்த ஏற்பாட்டை பற்றி நான் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

க்ரூப் கேப்டன் கங்காவாடிகர் ஒரு சமயத்தில் என்னுடைய மாணவராக இருந்தார் என்பது நினைக்கும் போது என் மனத்தில் கர்வம் ஓங்கி வளருதய்யா!

ஆர்மி மெடிக்கல் கோர் என்றென்றும் வளமுடன் வாழ்க!