
தேஜோவதி பற்றி ஸ்காந்த புராணம் கூறுவது
கையிலாயமலையில் உள்ள ஸ்ரீமஹாசாஸ்தாவின் இருப்பிடத்தைப் பற்றி சூதமா முனிவர் சனகாதி முனிவர்களிடம் கூறுவதாக ஸ்காந்தபுராணம், சங்கரஸம்ஹிதை, சிவரஹஸ்ய கண்டம், உபதேசகாண்டம், ஒன்றாம் அத்யாயத்தில் மஹாகைலாச வர்ணனையாக கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
மேருவுக்கு வடக்கில் கைலாச பர்வதம் உள்ளது. அது கணங்களுடன் கூடிய சிவபெருமானின் இருப்பிடமாகும். அதன் நடுவில் உள்ள ஒளிமயமான சிகரத்தில் ரத்ன கசிதமான சிம்மாசனத்தில் சதாசிவன் எழுந்தருளி இருக்கிறார்.
அதைச் சுற்றி சூரியகாந்த கற்களாலான பதினோரு சிகரங்களில் ஏகாதச ருத்திரர்களான
- மஹாதேவன்
 - ஹரன்
 - ருத்திரன்
 - சங்கரன்
 - நீல லோஹிதன்
 - ஈசானன்
 - விஜயன்
 - பீமதேவன்
 - பவோத்பவன்
 - காபாலி
 - சௌம்யன் ஆகியோர் வசிக்கின்றனர்.
 
அதைச் சுற்றியுள்ள சந்திர காந்த கற்களாலான நூற்றியொரு சிகரங்களில் எட்டு வித்யேஸ்வர மூர்த்திகள், மற்றும் எட்டு மஹேஸ்வர மூர்த்திகளான
- சர்வ
 - பாவ
 - ருத்ர
 - உக்ர
 - பீமன்
 - பசுபதி
 - மஹாதேவர்
 - ஈசானா,
 
ஒன்பது சக்திகளான
- காத்யாயினி
 - சைலபுத்ரி
 - பிரஹ்மசாரிணி
 - சந்த்ரகண்டா
 - கூஷ்மாண்டா
 - ஸ்கந்தமாதா
 - காலராத்ரி
 - மஹாகௌரி
 - ஸித்தாத்ரி,
 
இருபத்தைந்து சம்பு மூர்த்திகளான
- லிங்கோத்பவ
 - சுகாசன
 - உமா மஹேஸ்வர
 - கல்யாண
 - அர்த்தநாரீஸ்வர
 - சோமாஸ்கந்த
 - சக்ர ப்ராதான
 - திரி
 - சங்கரநாராயண
 - தட்சிணா
 - பிஷாடன
 - கங்காள
 - காம சம்ஹார
 - கால சம்ஹார
 - ஜலந்தர சம்ஹார
 - திரிபுர சம்ஹார
 - சரப
 - நீலகண்ட
 - திரிபாத
 - கனஜகபாத
 - பைரவ
 - விருஷபாரூட
 - சந்திரசேகர
 - ஆனந்ததாண்டவ
 - கங்காதர,
 
ஐம்பத்தியொரு மாத்ருகா கணங்களான
- அம்ருதா
 - ஆகர்ஷிணி
 - இந்த்ராணி
 - ஈசானி
 - உமா
 - ஊர்த்வகேசி
 - ர்ருத்திதா
 - ர்ரூகாரா
 - ல்ருகாரா
 - ல்ரூகாரா
 - ஏகபாதா
 - ஐஸ்வர்யாத்மிகா
 - ஓம்காரா
 - ஔஷதீ
 - அம்பிகா
 - அ:ரா
 - காலராத்ரி
 - கண்டிகா
 - காயத்ரி
 - கண்டாகர்ஷிணி
 - ஙார்ணா
 - சண்டா
 - சாயா
 - ஜயா
 - ஜங்காரிணி
 - ஞானரூபா
 - டங்கஹஸ்தா
 - டங்காரிணி
 - டாமரி
 - டங்காரிணீ
 - ணார்ணா
 - தாமசி
 - ஸ்தாண்வீ
 - தாக்ஷாயணி
 - தாத்ரி
 - நாரி
 - பார்வதி
 - பட்காரிணி
 - பந்தினி
 - பத்ரகாளி
 - மஹாமாயா
 - யசஸ்வினி
 - ரக்தா
 - லம்போஷ்டி
 - வரதா
 - ஸ்ரீ
 - ஷட்குணா
 - ஸரஸ்வதி
 - ஹம்ஸவதி
 - க்ஷாமாவதி
 - ளாளுகா
 
ஆகியோர் உள்ளனர்.
அதைச் சுற்றியுள்ள அக்னிகாதக்கல் மயமான ஆயிரத்தெட்டு சிகரங்களில் ஏழு கோடி மஹா மந்திரங்கள் வசிக்கின்றன.
அதைச்சுற்றி ஆயிரத்தோரு ஸ்படிக மயமான சிகரங்கள் உள்ளன.அவற்றில் சிவாக்ஞையின்படி விக்னேஷியர், ஸ்கந்தர், ஸ்ரீமஹாசாஸ்தா, பைரவர் முதலிய சிவ புத்திரர்கள் வசிக்கின்றனர்.
அதைச்சுற்றியுள்ள ஒரு லட்சத்து ஒரு இரத்தின சிகரங்களில் மஹாவிஷ்ணு வசிக்கிறார்.
அதற்கு அடுத்த் சுற்றியுள்ள பத்து லட்சத்து ஒரு தங்கச் சிகரங்களில் ஸுரர், சித்தர், நக்ஷத்திரர், தைத்ரியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருஷர், கந்தர்வர், யக்ஷர், வித்யாதரர், பூதர், பைசாசர்,, முனிவர், நாக, ஆகாய வாசியர், போகபூமியர், சாரணர் ஆகிய பதினெட்டு கணங்களும்கச்சப நிதி, வர நிதி, சங்க நிதி, பதும நிதி, குந்த நிதி, நீல நிதி, மகர நிதி, மஹா பதும நிதி, முகுந்த நிதி, ஆகிய நவ நிதிகளும், ருத்ர தாசிகளும் உள்ளனர்.
அதற்கு அடுத்த ஒரு கோடியே வெள்ளிச் சிகரங்களில் பூத கணங்கள் வசிக்கின்றனர்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சூரியகாந்தம், சந்திர காந்தம், அக்னி காந்தம், ஸ்படிகம், ரத்தினம், தங்கம், வெள்ளி என்ற ஏழு சுற்றுகளும் பொன்மயமான பிரகாரங்களாக ஹரிஹரபுத்ர ஸஹஸ்ர நாமாவளியில் உள்ள ஒரு நாமா கூறுகின்றது. பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா சிவஸ்வரூபியாக இந்த பிரகாரங்களால் சூழப்பட்டு அழகுற அன்னையுடன் அமர்ந்துள்ளார்.
சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் தேவதச்சனால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் பொன்மயமான பிரகாரங்களால் சூழப்பட்டுள்ளது, என தர்மசாஸ்தா வைவஸ்வம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
பொன்னம்பலம் பற்றி பூதனாத உபாக்யானம் கூறுவது
பத்மதளம் என்னும் பந்தள நாட்டு அரசியின் தலைவலியைப் போக்கவேண்டி புலிப்பால் கொண்டு வரும் பொருட்டு மனீகண்டன் தலையில் இருமுடியுடனும், கையில் வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு பந்தளம் விட்டு காட்டை அடைந்தவுடன் சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூதகணங்கள் மணிகண்டனிடம் வந்து சேர்ந்தனர். பூதப்படைகள் புடை சூழ பூதனாதனான மணிகண்ட பரம்பொருள் புண்ணியமான பம்பா நதிக்கரையை அடைந்தார். அங்கே பலகாலமாக தவ செய்து கொண்டிருந்த பல மஹரிஷிகள் மணிகண்ட பிரபுவாக அவதரித்துள்ள ஸ்ரீதர்மசாஸ்தாவை வணங்கி பக்தியுடன் ஆராதனை செய்தார்கள். பின்னர் அங்கிருந்து பத்து யோஜனை தூரத்தில் ஒரு அழகிய மலைக்குன்றின்மேல் முனிஸ்ரேஷ்டர்கள் தங்களது தபோவலிமையால் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கு பொன்னால் ஆன ஒரு ஆலயத்தை நிர்மாணம் செய்தனர்.
பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் பொன்னம்பலக் கோவிலின் நவரத்தினங்களால் ஆன உயர்ந்த கோட்டை சுவர்கள் சுற்றிலும் பாதுகாப்புக்காக உயர்ந்து நிற்க, கோடி சூரிப்பிரகாசத்துடன் சாஸ்தாவின் பொன்னம்பலம் ஒளிவீசி நிற்கின்றது. தாபங்களையெல்லாம் தீர்க்கும் அந்த மங்களகரமான சன்னிதானத்தில் மும்மத்து முக்கோடி தேவர்களும் பகவானைதரிசிக்க காத்திருப்பர். நாங்கு வேதங்களுமாறு சாஸ்த்திரங்களும் மூர்த்தியாக உருவம் எடுத்துக்கொண்டு அங்கு வசித்து வருகிறது.எல்லா உலகிலுள்ள தேவர்கள் அங்கே பகவானுக்கு சேவை செய்து கொண்டு இருப்பர். ஏழு கோடி மஹாமந்திரங்களும் உருவம் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டிருப்பர். ஸத்தியம் தர்மம் இரண்டும் பசுவின் உருவில் பகவானின் ஆலய கோபுர வாசலில் த்வாரகபாலகர்களாக பகவானை வணங்கி நிற்கிறர்கள்.
ஒன்பது வித ரத்தினங்களால் ஆன ஒன்பது பலமான கோட்டைகளின் மத்தியில் பகவானது வாசஸ்தலம் உள்ளது.நான்கு புறங்களிலும் ஒன்பது ரத்தினங்களால் ஆன ஒன்பது கோட்டைகளைக் கடந்து நவரத்தினத்தால் இழைக்கப்பட்ட கிழக்கு கோபுரத்தின் கீழேயுள்ள வழியாகச் சென்று பரமாத்மாவான பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவைத் தரிசிப்பர்.
மனோசுத்தி, பக்தி, சமம், மன உறுதி, கருணை, கடவுள் நம்பிக்கை, ஈடுபாடு, இந்திரியம், அடக்குதல், என்ற எட்டு தர்மங்களுடன் சத்யமும் சேர்ந்து ஒன்பது மூர்த்திகளாக ஒன்பது கோபுரங்களைக் காவல் புரிகின்றனர்.
பரமாத்மா ஸ்ரீமஹாசாஸ்தா ஆனந்த மயமான மாணிக்கத்தினாலும் ரத்தினங்களினாலும், இழக்கப்பட்ட திவ்ய சிமாசனத்தில் அகில உலக சக்ரவர்த்தியாக வீற்றிருக்கிறார். பதினெட்டு தத்துவங்களும் ரத்தின சிம்மாசனத்தின் பதினெட்டு படிகளாக பதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த பதினெட்டு தத்துவங்களும் ரூபம் தரித்துக் கொண்டு ஒவ்வொரு படியையும் காத்து வருகிறது.
தங்கப்பிடி கொண சாமரம், விசித்திர ஆலவட்டம் ஆகியவற்றைக் கையில் ஏந்தி தேவர்கள் பகவானுக்குப் பணிவிடை செய்கின்றனர். வெண் கொற்றக் குடை பிடித்து, தேவர்கள் பணிபுரிய பகவான் ஸ்ரீம்ஹாசாஸ்தா அகிலலோக சக்ரவர்த்தியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். வேதங்களே மனித உருக்கொண்டு ஸ்துதி கானங்கள் பாடி தாரக் மூர்த்தியை வாழ்த்துகின்றன. நாரத முனி பகவான்ஸ்ரீமஹாசாஸ்தாவின் பரம பக்தனாக அவர் முன் னின்று வீணை வாசிக்கிறார். தரகப் பிரம்மத்தின் கமல முகத்தில் மந்தஹாச புன்சிரிப்புதவழும் முகத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
அன்று அந்த முனிச்ரேஷ்டர்களும், தவஞானிகளும் ஸ்ரீபூதநாதனான ஸ்ரீமஹாசாஸ்தாவை பிரதிஷ்டை செய்ததும் தேஜோமயமாக ஜொலித்த பகவானை தேவர்களும் தவமுனிவர்களும் விரும்பி ஆராதிக்கப்பட்ட அந்த மலைக்குன்று பொன்னம்பலமேடு என்ற் இன்றளவும் வணங்கப்படுகிறது.
கைலாய பர்வதத்திலிருந்து சிந்து, கங்கை, பிரம்மபுத்திர போன்ற நதிகள் பாய்வது போல இந்த மலையிலிருந்து கல்லாறு, கக்கையாறு, பெருந்தேனருவு என மூண்டு நதிகள் ஒண்டு சேர்ந்து திரிவேணியாக பம்பானதி உண்டாவதாலும், சிவபெருமானின் அம்சமாக ஸ்ரீபூதநாதன் வாழும் கைலாய மலைக்கு ஒப்பாக இந்த பொன்னம்பலமேடு விளங்குவதாலும் இம்மலையை தக்ஷிண கைலாயம் என்றும், பம்பா நதியை தக்ஷிண கங்கை என்றும் ஆன்றோர்கள் போற்றி வணங்குவதில் வியப்பொன்றுமில்லை.
அடுத்த வாரம் மணிதாசரின் காந்தமலை விருத்தம் தொடரும்…..
              
              
              
 
Leave a comment
Upload