தொடர்கள்
கவர் ஸ்டோரி
மோடி 3.0-ஜாசன்

மோடி 3.0

20240507192510292.jpeg

18-வது மக்களவைக்கான தேர்தலில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருந்தது என்பதுதான் உண்மை. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் முக்கிய பிரச்சாரமாக இருந்தது.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். நாட்டின் ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கான போராட்டம் இந்தத் தேர்தல் என்று தான் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் இருந்தது. இந்த தேர்தலில் மோடி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.

மேற்குவங்கத்தில் மோடியின் பிரச்சாரத்திற்கு எவ்வளவு இடைஞ்சல் தர முடியுமோ அவ்வளவு இடைஞ்சல்களை தந்தது மம்தா பானர்ஜி அரசு மோடியின் பிரச்சார நாட்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதையும் மீறி மேற்குவங்கத்தில் 12 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. சுதந்திரமான தேர்தல் ஒருவேளை மேற்குவங்கத்தில் நடந்திருந்தால் இன்னும் கூடுதலான இடங்களில் பாஜக பெற்றிருக்க கூடும்.

ஆரம்பத்தில் 400 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் உட்பட எல்லா பாஜக தலைவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

20240507193951997.jpeg

நன்றி: தினமணி

பாரதிய ஜனதாவுக்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டணி தயவில் ஆட்சி நடத்த வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டதும் பிரதமர் பதவியேற்க மோடி தயங்கினார். ஆனால், அமித்ஷா அதெல்லாம் இல்லை நீங்கள்தான் பிரதமர் நீங்கள் வாருங்கள் நாம் கட்சி அலுவலகத்திற்கு போகலாம் என்று மோடியை அழைத்துச் சென்றார் அமித்ஷா.

அங்கு அங்கு மோடிக்கு அணிவிக்க பிரமாண்டமான மாலையெல்லாம் இருந்தபோது அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு சிறிய ஒரு மாலையை மட்டும் அணிந்து கொண்டார் மோடி. அதன்பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மோடி தான் பிரதமர் என்பது முடிவு செய்யப்பட்டது.

அமித்ஷாவை பொருத்தவரை நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு என்ற மிகப்பெரிய அரசியல் ஜாம்பவான்களை நாம் சமாளிக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை ஒரு வருடம் காத்திருப்போம் அதற்குள் பாரதிய ஜனதாவை மெஜாரிட்டி அரசாக மாற்றி விடலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு இருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் ஆதரவு தருவார்கள் என்பதில் உறுதியாக இருந்தார்.

பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிர்வாகிகள் இடையே பேசிய மோடி எப்போதும் ஜெய் ஸ்ரீ ராம் என்று ஆரம்பிப்பவர் ஜெய் ஜெகநாத் என்ற முழக்கத்துடன் ஆரம்பித்தார் ஒடிசாவில் பாஜக பெற்ற வெற்றியை குறிக்கும் வகையில் ஜெய் ஜெகநாத் என்றார்.

` ஆர்எஸ்எஸ் மோடிக்கு பதில் வேறு ஒருவரை பிரதமர் ஆக்கும் திட்டம் தற்சமயம் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது போல் அகில இந்திய பாஜக தலைவர் நட்டாவை மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்தித்து பேசியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆட்சியைப் பிடிக்கும் கட்சிதான் மகிழ்ச்சியில் இருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஏதோ மிகப்பெரிய சாதனை செய்து விட்டதாக சந்தோஷப்பட்டுக் கொள்கிறது. அவர்களைப் பொறுத்தவரை மோடியை சங்கடப்படுத்தி விட்டோம் என்ற ஒரு அல்ப சந்தோசம் தான் இதற்கு காரணம் .

தனிப்பெரும்பான்மை இழந்தாலும் தனிப்பெரும்பான்மை கட்சியாக இப்போதும் பாஜக தான் இருக்கிறது என்பதை அவர்கள் வசதிக்காக அவர்கள் மறந்திருக்கிறார்கள்.

` அமித்ஷாவை பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு நிதீஷ்குமார் இல்லாத கூட்டணி பற்றி கூட தயார் நிலையில் ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறார்.

சுயேச்சை உறுப்பினர்கள் ஐந்து பேரும் ஆதரவை அவர் கேட்டுப் பெற்று இருக்கிறார். இதே போல் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் 4 நிதீஷ்குமார் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இல்லாமல் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி உறுப்பினர்கள் 28 பேர் ஏற்கனவே நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 276 பேர்கள் மோடிக்கு ஆதரவு என்று ஒரு கணக்குப் போட்டு தான் வைத்திருக்கிறார் அமித்ஷா.

கூட்டணி கட்சிகள் குறிப்பாக நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு தங்களுக்கு முக்கிய இலாக்காக்கள் வேண்டும் என்று வற்புறுத்துவார்கள் என்பது அமிஷாவுக்கு தெரியும் அதை எப்படி சமாளிப்பது என்பது அமித்ஷா அறிவார். அவரைப் பொறுத்தவரை மீண்டும் பிரதமர் மோடி என்பதுதான் கணக்கு.

20240507204821582.jpeg

மீண்டும் பிரதமர் மோடி என்று பாஜக பெருமைப்பட்டுக் கொண்டாலும் இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு கட்டளையிடும் இடத்தில் இருந்தது.

மோடியை வழி நடத்தும் இடத்திலோ வற்புறுத்தும் இடத்தில் யாரும் இல்லை. இப்போது அந்த இடத்துக்கு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் என்ற இருவர் வந்திருக்கிறார்கள். இதெல்லாமும் அமித்ஷாவுக்கு தெரியும்.

தேர்தல் முடிவுகள் பற்றி எதுவும் பேசாமல் இருந்த பிரதமர் மோடி தேசிய ஜனநாயக பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பழைய உற்சாகத்தில் பேச ஆரம்பித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி என்பதன் பொருள் நல்லாட்சி என்பதாகும் வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் வெளிவந்தவர்கள் என் டி ஏ கட்சியினர். காற்று கூட உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிக்குள் ஒற்றுமை இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி அடைய முடியும்.

பூரி ஜெகநாதர் அருளால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் ஒடிசாவில் பாஜகவின் ஆட்சியே தொடரும். பத்தாண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சியால் நூறு இடங்களில் கூட வெல்ல முடியவில்லை. வென்றாலும் தோற்றாலும் பாஜக ஒரே மாதிரி தான் நடந்தது கொள்ளும். புதுமை வளர்ச்சி லட்சியம் இவை அனைத்தையும் உள்ளடக்கியதே என் டி ஏ கூட்டணியாகும்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை விட பாஜக மூன்றாவது முறையாக அதிக இடங்களை பாஜக வென்றுள்ளது.

கடுமையாக உழைத்ததால் தான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என்று பேசினார் பிரதமர் மோடி.

2024050723345273.jpeg