தொடர்கள்
விகடகவியார்
ஹாப்பி அண்ணாச்சி! -விகடகவியார்

20240507193235185.jpeg

40க்கு 40லும் வெற்றி இதுதான் திமுக தலைவர் ஸ்டாலின் வியூகமாக இருந்தது. தேர்தல் பணிகளை கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டார் ஸ்டாலின். இந்த முறை குறைந்தது 25 இடங்களில் போட்டியிட விரும்பினார். ஆனால் 21 தொகுதிகளில் தான் போட்டி போட முடிந்தது. கூட்டணி கட்சிகளுக்காக நிறைய விட்டுக் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். அதுமட்டுமல்ல மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் அமைச்சர்களுடன் தேர்தல் சம்பந்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது எந்தத் தொகுதியில் தோல்வி அடைந்தாலும் அந்த மாவட்ட அமைச்சர் மாற்றப்படுவார் மாவட்ட செயலாளர் மாற்றப்படுவார். இது கூட்டணி கட்சி தொகுதிகளுக்கும் பொருந்தும் என்பதை திரும்பத் திரும்பச் சொன்னார் ஸ்டாலின். அதேபோல் திமுக இந்த முறை பெரிய அளவில் பணப்பட்டுவாடா ஏதும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் குறைக்க விரும்பினார் ஆனால் ராகுல் காந்தி தலையிட்டால் அது நடக்கவில்லை கமலஹாசனுக்கு இந்த முறை ராஜ்ய சபா உத்தரவாதம் தந்து அவரை போட்டி போடுவதை தவிர்க்க வைத்தார் மதிமுக இரண்டு தொகுதிகள் கேட்டது அதில் பிடிவாதமாக இருந்தது ஆனால் வைகோவை நேரில் சந்தித்து ஒரு தொகுதியில் உங்கள் மகனை போட்டியிட வையுங்கள் அவர் வெற்றிக்கு நான் பொறுப்பு என்று அவரை சம்மதிக்க வைத்தார் அதேபோல் விடுதலை சிறுத்தைகள் மேலும் இரண்டு தொகுதிகள் கேட்டார்கள் அதாவது விடுதலை சிறுத்தை கட்சியினரே நீங்கள் இருவர்தான் போட்டி போட கட்சியா என்று விமர்சனம் வந்தது தொடர்ந்து மேலும் இருவருக்கு வாய்ப்பு தர முயற்சி செய்தார் தொல் திருமாவளவன் ஆனால் அவரையும் சமாதானப்படுத்தினார் ஸ்டாலின் இப்படி இப்படி தொகுதி பங்கிட்டில் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்களை சம்மதிக்க வைத்து தேர்தலை சந்தித்தார் ஸ்டாலின்.

ஸ்டாலின் உடல்நிலை மற்றும் வெயில் காரணமாக அவர் தேர்தல் பிரச்சார நாட்களை குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தந்தார்கள். ஆனால் அதை அவர் ஏற்க மறுத்தார். இதன் விளைவாக தேர்தல் பிரச்சாரத்தில் அவர் மனைவி தொடர்ந்து அவருடன் அவரை கவனித்துக் கொள்வதற்காக பயணம் செய்தார்.கூடவே ஒரு மருத்துவ குழுவும் ஸ்டாலினுடன் பயணித்தது. குறிப்பாக அவருக்கு கண்ணில் நீர் வடிவது தொடர்பாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் ஒரு கண் மருத்துவர் அவரை அடிக்கடி பரிசோதிக்க அந்த குழுவில் இருந்தார்.

ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் பாரதிய ஜனதா அதிமுக என்று இரண்டு கட்சிகளை எதிர்க்க வேண்டியிருந்தது. தேர்தல் காளத்தில் அவர் யாரையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்தார் குறிப்பாக பிரதமர் மோடியை. அதேபோல் அதிமுக எடப்பாடி இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்ய அவர் தவறவில்லை. 40 தொகுதியிலும் அவர் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது. கருத்துக்கணிப்புகள் அவருக்கு 40க்கு 40 என்று சொல்லவில்லை சிலர் கருத்துக்கணிப்பாளர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஐந்து இடங்கள் கிடைக்கும் என்று சொல்லி இருந்தார்கள் அதிமுகவுக்கு ஒன்று முதல் மூன்று இடம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த கருத்துக்கணிப்பு எல்லாம் இந்த தேர்தல் முடிவு பொய் ஆக்கியது. இதற்கு காரணம் திமுகவின் வலிமையான கூட்டணி தான். அதனால் தான் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் எல்லா கட்சி வேட்பாளர்களும் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் நேரில் வந்து நன்றி சொன்னார்கள். அதேபோல் வெற்றி பெற்ற பிறகும் அதேபோல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஸ்டாலினுக்கு நன்றி சொன்னார்கள். அமித் ஷாவே ஸ்டாலினின் தேர்தல் வியூகம் பற்றி வியந்து போய் இருக்கிறார் உண்மையில் தேசிய அரசியலில் ஸ்டாலின் தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்பது அமித்ஷாவின் கணிப்பு. காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்டாலின் ஆளுமை பற்றிய ஒரு புரிதலும் இந்த தேர்தல் உணர்த்தி இருக்கிறது