தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

2024051420270649.jpeg

சில மாதங்களாக எதற்கு என்று தெரியாமல் நிறுத்தப்பட்டிருந்த விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது. இதற்காக இந்த மாதம் 15-ஆம் தேதி அஜர்பைஜான் போகிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. அதன் பின்னர் அஜித் செல்வார் என்கிறார்கள்.

மிருணாள் தாக்கூர்

20240514203026268.jpg

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா அடுத்தடுத்து பாகங்கள் உருவாகின. இப்போது காஞ்சனா 4 பற்றிய பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது. இதில் மிருணாள் தாகூர் நடிக்க இருக்கிறாராம்.

சுந்தர் சி

20240514203620629.jpg

சுந்தர் சி வடிவேலு நாயகர்கள் தமன்னா நாயகி ஒரு காமெடி காதல் படம் அவசர அவசரமாக தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

10 கோடி

20240514203953995.jpeg

இனிமேல் என் சம்பளம் 10 கோடி என்பதில் நயன்தாரா உறுதியாக இருக்கிறார். கன்னட நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தில் நயன்தாராவுக்கு அக்கா வேடம். அதெல்லாம் பிரச்சனை இல்லை என் சம்பளம் பத்து கோடி என்று சொல்லி இருக்கிறார் நயன்.

சுட சுட

அஞ்சலி

ராம் இயக்கத்தில் அஞ்சலி நடித்த ஏழு கடல் ஏழு மலை படம் விரைவில் ரிலீசாக இருக்கிறதாம். தெலுங்கில் பிஸியாக இருக்கு அஞ்சலி நடித்த கடைசி தமிழ் படம் இது.

ரீ -ரிலீஸ்

ரீ ரிலீஸ் வரிசையில் போக்கிரி துப்பாக்கி மீண்டும் வெளியாக இருக்கிறதாம்.

அடுத்தடுத்து பாகங்களாக ...

அடுத்தடுத்து பாகங்களாக தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. சர்தார் 2, தனி ஒருவன் 2, இந்தியன் 2, மற்றும் ஜெயிலர் 2, கலகலப்பு 3, பிசாசு 2, பிச்சைக்காரன் 3 பீட்சா 4 இப்படி பட்டியல் நீள்கிறது.