தொடர்கள்
கதை
காணாமல் போன கரப்பான்  - மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240807083822711.jpeg

கந்தசாமி, சின்ன பிரஷ்ஷால எக்ஸ்ரே ஃஃபில்ம் ரூம கிளீன் பண்ணான். அப்போ அதிலிருந்து ஒரு கரப்பான் பூச்சி ஓடி வந்தது. ஓடி வந்த கரப்பான் பூச்சிய உயிரோடு பிடித்து வந்து சீப் டாக்டர்கிட்ட கொடுத்தான். இந்த சின்ன கரப்பான் தான் பலருக்கு நிம்மதிய திருப்பி கொடுத்தது.

டாக்டர் டீம் பரபரப்பாயிடுத்து.திரும்ப ஒருமுறை பேஷண்ட்டுக்கு செஸ்ட் எக்ஸ் எடுத்து பார்த்தாங்க. இப்ப கரப்பான் பூச்சி செஸ்ட்ல இல்ல. எக்ஸ்ரே ஃஃபில்ம்பாக்ஸ்ல இருந்த கரப்பான் பூச்சி தான் பேஷண்டோட நெஞ்சில் இருந்து கரப்பான் பூச்சியாக காணப்பட்டது. பேஷண்ட்டுக்கு இந்த தகவல் தெரிந்தது. ஒரே வழியாக மகிழ்ச்சி அடைந்தார்.

வழக்கம் போல ஒரு பிளாஷ்பேக்.

அந்த ஆஸ்பத்திரியே அல்லாகளப்பட்டு இருந்தது. ஒரு பேஷண்ட்டுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததுல, அவரோட மார்பு எக்ஸ்ரேவில உயிரோடு ஒரு கரப்பான் பூச்சி உலா வந்து கொண்டு வருவது தெரிந்தது. பேஷன்ட்டுக்கு அதைப் பற்றிய உணர்வோ,வலியோ இல்ல.தொடர்ந்து மூணுநாளா இரும்பிக்கிட்டே இருந்தான். ஒரு வேளை மார்ல சளி இருக்கான்னு பார்க்கத்தான் எக்ஸ்ரே எடுத்தாங்கா.இப்ப இந்த விஷயம் பேஷண்டுக்கும் அவனோடு ஒய்ஃஃபுக்கும் தெரிஞ்சுப்போச்சு.கணவனைப் பார்த்து அவன் ஒய்ஃஃப்,’கடங்காரா,எங்கயாவது போய் எங்களுக்குத் தெரியாம கள்ளச்சாராயம் குடிச்சியாடா?வீணாப் போன அந்த பொன்னுசாமியோட சகவாசம் வேண்டாம்,வேண்டாம் ‘னு எத்தன தடவ சொல்லியிருப்பன். ‘இப்ப உன் உசுருக்கே அவன் ஒல வெச்சுட்டானே”ன்னு தன் கொட மொளகா மூக்கை சிந்திக்கொண்டே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.பதட்டம் பேஷண்டுக்கு மட்டுமில்ல,டாக்டர் டீமுக்கும்தான்.

இதற்கான சிகிச்சை கரப்பான் பூச்சியை உயிரோடவோ, இறக்க வைத்தோ வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான். இதற்கான வசதிகள் லண்டனில் ஒரு ஆஸ்பத்திரியலதான் இருக்காம்.கரப்பான் பூச்சி செய்தி தீயாய் பரவிடுச்சு.மீடியாக்காரங்க விடுவாங்களா? நேரடி ஒளிபரப்பு தொடங்கிட்டாங்கா.

ஆஸ்பிடல் டீன் மட்டும் ஒரு நிமிஷம் மீடியாவுக்கு முகத்த காட்டி ’பேஷண்ட் உடல்நிலை நார்மல் அண் ஸ்டேபில் ‘ன்னு ஒரு பிரஸ் ரிபோர்ட்ட கொடுத்துட்டு ‘அப்பாடா’ ன்னு ஏசி ரூம்ல போய் உட்காந்துட்டாரு.

நோயாளியை லண்டன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பற முயற்சியில் மருத்துவமனை ஈடுபட்டிருந்தது.அதற்கு அவங்க குடும்பத்தார்கள் ஒப்புதல் கிடைக்கல.பண வசதியும் இல்ல. அடுத்து 24 மணி நேரத்திற்குள் அதற்கான சிகிச்சை தொடங்க வேண்டும். இல்லைன கரப்பான் பூச்சி நுரையீரலை தாக்கும். பிரச்சனை இன்னும் பெரிதாகி நோயாளிகள் நோயாளிகள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.இதுதான பரவிவந்த தகவல்.

இந்த பரபரப்பான தகவல் ஊடகங்களில் பரவிய வண்ணம் இருந்தது அந்த பேஷண்டோ பரம ஏழை. அதனாலதான் அந்த அரசு மருத்துவமனையில் வந்து மார்பு வலிக்கு சிகிச்சை எடுத்துக்க அட்மிட் ஆயிருக்கான். அட்மிட் ஆகி ரெண்டு நாள் பொறுத்துதான் எக்ஸ்ரே எடுத்து இருக்காங்க. எக்ஸ்ரேவ செஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்த பிறகுதான் கரப்பான் பூச்சி விவகாரமே வெளிச்சத்துக்கு வந்தது

ஆனா கந்தசாமிக்கு சன்மானம் கொடுக்கறதுக்கு பதில் ஏன் மெமோ கொடுத்தங்கன்னு தான் அவனுக்கும் பாவம் புரியலை.