தொடர்கள்
ஜோதிடம்
கேளுங்கள்..சொல்லப்படும்! - விகடகவி வாசகர்களுக்கு பர்சனல் ஆலோசனை!

# இது புதுசு

20180314001408921.png

பெருங்குளம் ராமகிருஷ்ணன்

விகடகவியில் தொடர்ந்து ஜோதிட ஆலோசனை தந்து கொண்டிருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ணனிடம் பர்சனல் கேள்விகளோடு தங்கள் பிரச்னைகளை அனுப்பி சில வாசகர்கள் அட்வைஸ் கேட்க...அவரும் இந்த வாரத்திலிருந்து அவற்றுக்கு மனமுவந்து பதில் அளிக்கத் துவங்கியுள்ளார். தேவைப்படும் வாசகர்கள் தாராளமாக இச்சேவையினை பயன்படுத்தி பலனடையலாம்.

உங்கள் தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைக்கு நீங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: www.vikatakavi.in/jothidam


பெயர் : ப்ரவிந்த் 7.6.1996 12.05 பிற்பகல் கம்பம். தேனி மாவட்டம்

கேள்வி: என்னுடைய மேற்படிப்பை தொடரலாமா? அல்லது வேலைக்கு போகலாமா?

20180313155435891.jpg

பதில்:

நீங்கள் ஸதய நக்ஷத்ரம் - கும்ப ராசி - சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்களுக்கு தற்போது குரு திசை சுக்கிர புத்தி நடக்கிறது. கண்டிப்பாக படிப்பைத் தொடர முடியும். உங்களுடைய வித்யா ஸ்தானத்தை நான்கு கிரகங்கள் பார்க்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி உங்கள் ஜாதகப்படி உண்டு. எனவே எந்த சூழ்நிலையிலும் கல்வியை தடை செய்ய வேண்டாம்.


பெயர் : ஸ்ரீ ரெங்க தேவி 27.07.1979 7.10 இரவு; அல்லிநகரம். தேனி

கேள்வி: என்னுடைய உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் உள்ளது? மருத்துவர் ஒன்றும் இல்லை என்கிறார்? காரணம் கூறவும்.

20180313155512306.jpg

பதில்:

மகர லக்னம் - பூர நக்ஷத்ரம் - சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது செவ்வாய் திசையில் ராகு புத்தி நடக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகும். மேலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எதற்கும் வேறு ஒரு மருத்துவரை கலந்தலோசிக்கவும். ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். முக்கியமாக கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.


பெயர்: ராணி 5.12.1987 7.05 இரவு திருப்பூர்.

கேள்வி: எனது கணவருக்கும், எனக்கும் உள்ள பிரச்சனைகள் எப்போழுது தீரும்?

2018031315553901.jpg

பதில்:

நீங்கள் ஜெனித்தது ரோகினி நக்ஷத்ரம் - ரிஷப ராசி - மிதுன லக்னம். தற்போது உங்களுக்கு குரு திசையில் சனி புத்தி நடக்கிறது. உங்கள் இருவர் ஜாதகபப்டியும் பிரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. எந்த விஷயத்திலும் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. லக்ன ரீதியாக கண்டகச் சனியும் - ராசி ரீதியாக அஷ்டமத்து சனியும் நடப்பதால் குடும்பம் சார்ந்த விஷயங்களில் சில பிரச்சனைகள் அவ்வப்போது வந்து செல்லும். தினமும் குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். உங்கள் வாழ்வு மலரும்.


பெயர்: தாமோதரன் 29.9.1973 12.00 இரவு சென்னை

கேள்வி: எனது உத்தியோகத்தில் திருப்தி இல்லை? பிறர் செய்யும் தவறுக்கு நான் பொறுப்பாகிறேன்? ஏன்?

20180313155601283.jpg

பதில்:

மிதுன லக்னம் - ஸ்வாதி நக்ஷத்ரம் - துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 44 வயதாகிறது. தற்போது உங்களுக்கு சனி திசையில் புதன் புத்தி நடக்கிறது. நீங்கள் பிறந்தது உபய லக்னம். லக்னத்திலேயே சனியும் கேதுவும் இருப்பதால் எந்த வேலையில் சேர்ந்தாலும் அதில் அதிகமாக வேலை செய்தாலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தினமும் முன்னோர்களை வணங்கி வாருங்கள். பிரச்சனைகள் அகலும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.


பெயர்: நித்யா 20.12.1986 11.00 பகல் சென்னை

கேள்வி: குழந்தை பாக்கியம் எப்போது?

20180313155624788.jpg

பதில்:

நீங்கள் பிறந்தது ஆயில்ய நக்ஷத்ரம் - கடக லக்னம் - கும்ப லக்னம். தற்போது உங்களுக்கு சுக்கிர திசையில் குரு புத்தி நடக்கிறது. உங்களுக்கு பிரஸ்ணம் பார்த்ததில் வந்திருக்கும் லக்னம் - ரிஷபம். கட்டாயமாக உங்களுக்கு சந்தாண பாக்கியம் உண்டு. வரும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நிச்சயம் சந்தாண பாக்கியம் கிட்டும். இருப்பினும் நீங்களும் உங்கள் கணவரும் ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வது நன்மை தரும்.