தொடர்கள்
பொது
கின்னஸ் சாதனையில் 112 வயது தாத்தா..

20180313180711946.jpg

உலகளவில் அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்து வரும் மனிதர்களை கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து சிறப்பித்து வருகிறது.

கடந்த ஆண்டுவரை மிக வயதான நபராக, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்கோ நுனேஸ் ஒலிவேரா (113) கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார். அவர் கடந்த ஜனவரி 29-ம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாசோ நோனாக்கா (112) என்னும் முதியவர், உலகிலேயே அதிக வயது வாழும் சாதனை மனிதராக கடந்த 12-ம் தேதி கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இவர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிமீ தொலைவில் உள்ள ஹொக்கைடோ தீவில் கடந்த 1905-ம் ஆண்டு பிறந்தார். இளம்வயதில் மரம் வெட்டுதல் மற்றும் விவசாயத் தொழிலை மேற்கொண்டார்.

தற்போது அஷோரா நகரில் தனது 2 மகன்கள், 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் ‘ஸ்பா’ எனும் அழகு நிலையத்தை நடத்தி வருகின்றனர். இந்த வயதிலும் மசாஸோ நோனாக்கா இனிப்பு மற்றும் கேக் வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்.

இதுகுறித்து மசாஸோ கூறுகையில், ‘நான் சிறுவயதிலிருந்தே மது, மாமிசம், புகை போன்றவற்றை அறவே வெறுப்பவன். தாவர உணவு வகைகளை உண்டு, சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கடுமையாக உழைப்பேன். இந்த வயதிலும் என்னால் கை தடுமாறாமல் விறகு வெட்ட முடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்’ என பெருமை பொங்க கூறுகிறார்.

- வெங்கட்