
ரவுண்டு கட்டி அடிக்குறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க . பாத்துருக்கீங்களா . இந்த வீடியோவை பாருங்க . நம்ம மார்க்கு தம்பி, அதாங்க நம்ம அன்றாடம் மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கோமே, அந்த முக புத்தகத்த கண்டுபிடிச்சவரு...அவரை இந்த வாரம் சும்மா வெச்சு செஞ்சிட்டாங்க . யாருன்னு கேக்குறீங்களா ? நம்ம அமெரிக்க ஜட்ஜ் அய்யாக்களும், வக்கீலுகளும், அவுங்க ஊரு அதிகாரிகளும் .
எதுக்குன்னு கேக்குறீங்களா?
போன மாசம் பூரா ஒரு விஷயம் இணையத்துல சுத்திகினு இருந்துச்சே அதாங்க நம்ம விஷயத்தையும் ,விவரத்தையும் சுட்டுடுறானுங்கன்னு அதுக்கு தான்.
நம்மூரு மாதிரி சும்மா நாலு கேள்வி கேட்டு ஊட்டுக்கு அனுப்பல . ரெண்டு நாளு, 10 மணிநேரம் ,600 கேள்விகள் மாத்தி மாத்தி அவரை கேட்டு கடுப்பேத்திட்டாங்க. மீண்டும் மீண்டும் கேட்டது , "ஏண்டா தம்பி...உன்னோட பர்சன்ல் விவரமாயிருந்தா இப்பிடி செஞ்சிருப்பியா?"ன்ற கேள்வியத்தான்.
பதிலுக்கு என்ன பண்ணாரு மார்க்குன்னு கேக்குறீங்களா?
வேற என்ன? முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சாரு. ஒரே சமாளிஃபிகேஷன் தான். நம்மள சதா சர்வகாலமும் தண்ணி கூட குடிக்கவிடாம பண்ண மார்க்க , இப்படி கிளாஸ் கிளாஸா தண்ணி குடிக்க வச்சுட்டாங்களே!
- ஸ்ரீ தமிழ்

Leave a comment
Upload