
“வக்கீல் சார் இந்தக் கொலை கேசிலுருந்து நான் தப்ப முடியுமா?”
“இத பாருங்க கேசவ். நீங்க ஒங்க மனைவியைக் கொலை செஞ்சதுக்குச் சாட்சி ஏதும் இல்லை.”
“இந்தப் பாயிண்ட் மட்டும் வைச்சு தப்பிக்கலாம்.”
“கவலையை விடுங்க. எவ்வளவு கிரிமினல் கேஸ் வாதாடி இருப்பேன். ஒங்க கேஸ் ஜூஜு பீ.மேட்டர்.
“கவலைப்படாம போய் மத்த.வேலையைப் பாருங்க.”
“இல்லை சார் !எனக்குப் பயமா இருக்குப் பக்கத்தில் ரூமில் இருந்த என் 8 வயசு பொண்ணு நான் செஞ்ச கொலையைப் பாத்துடுச்சே.”
“சார் குழந்தைகள் சாட்சி எல்லாம் எடுத்துக்க மாட்டாங்க . அப்படியான குழந்தைக்கு ட்யூன் பண்ணி சாட்சி சொல்ல சொல்லலாம் என்பதால் அதை நிராகாரிப்பாங்க டோண்ட் வொரி.”
வக்கீல் அப்படிப் போனாலும் என்னுடைய செல்லக்குட்டி லட்சுமி சாட்சி சொல்லாமல் தடுக்கணும் என்று பயந்தான்.
வக்கீல் சொன்னமாதிரி கீழ் கோர்ட் அவன் செஞ்ச கொலைக்கு எந்தச் சாட்சியும் இல்லை என்று அவனை விடுவித்தது
ஆனால் மீனா அப்பாவும் அவன் அப்பாவும் கேசவ் செஞ்ச
துரோகதுக்கு மன்னிப்பே கிடையாது.
இத இப்படியே விடக் கூடாது. ஹைட் கோர்ட் க்கு அப்பீல் போவோம் என்று அதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
அவர் புகழ் பெற்ற கிரிமினல் வக்கீல் அவர் வாத திறமையினால் கீழ் கோர்ட்டில் சொன்ன ஜூட்ஜ்மெண்டை ஊர்ஜிதம் செய்தது.ஹை கோர்ட் கேசவ்க்கு
அப்பா எல்லாப் பிரச்சனைகளும் ஓய்ந்தது. இனி நம் கல்யாணத்துக்கு யாரும் தடையில்லை என்று குதுகலித்தான்.
செஞ்ச கொலையில்ருந்து கீழ் கோர்ட்டிலும் ஹைகோர்ட்டிலும் தப்பித்த இந்தக் கேசவ் யார்?
ஆரம்பத்தில் ஊரில் டிகிரி முடித்து ஏதோ ஒரு கம்பனியில் சொற்ப சம்பளத்தில் தான் இருந்தவன் தான் இந்தக் கேசவ்..
.நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் நாடகத்தில் அமெட்சூர் ஆர்டிஸ்ட் ஆக நடித்து எந்த டைரக்டர் கண்ணில் பட்டு தான் அவர் படத்தில் நடிக்கலாம் என்கிற கனவோடு தான் சென்னை வந்தவன்..
ஆள் நல்ல சிவப்பு. எந்தப் பெண்ணும் மயங்கும் அழகு ஸ்டைல்.
ஆனால் அவன் அப்பாவோ நீ சென்னை போவது பிரச்சனை அல்ல ; அதற்கு முன் ஒரு கால் கட்டுப் போட்டா தான் எங்களுக்குத் திருப்தி என்று சொந்தத்தில் ஒரு பெண்ணைக் கட்டி வைத்தார்.
பாவம் மீனா கிராமத்து பொண்ணு. வெள்ளந்தி
தினமும் ஆபிஸ் போயிட்டு மாலை நேர டிராமா என்று அழகாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் டைரக்டர் விஜயபாஸ்கரும் அவன் மனைவி பானுவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் . அவள் கண்ணில் பட்டான்.
பார்த்த ஒரு பார்வையில் பானுவுக்குக் கேசவ் வை பிடித்துப் போனது.
இவன் தான் நமக்குத் தோதாக வரும். .. கணவனிடம் சொல்லி தன் பணத்தையும் போட்டு அடுத்து தயாரிக்கும் புதுப் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தாள் அந்தப் பெரும் பணக்காரி.
அவனின் நல்ல வேளையோ, இல்லை குழந்தை பொறந்த நேரமோ அந்தப் படம் சுமாரான வெற்றி பெற்றாலும் அவன் நடிப்புப் பேசப்பட்டது.
பத்திரிக்கைகளிலும் சோஷியல் மீடியாவிலும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.
அடுத்தடுத்து சில படங்கள் இதனால் புக் ஆகவும் அவை வெற்றி அடையவும் , குறுகிய காலத்தில் பெரிய ஹீரோ அளவில் உருவானானன்.
தனக்குப் பிறந்த பெண் குழந்தை லட்சுமியின் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, பானுவின் சப்போர்ட் தான் காரணம் என மனைவியிடம் சொல்லி வந்தான்.
இப்போது அவன் கால்ஷீட் வாங்க போட்டா போட்டி
மீனாவுக்குச் சந்தோசம். ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததற்கு. நன்றி சொன்னாள் கடவுளிடம்.
ஒரு வளர்ந்த ஹீரோவுக்கு மற்ற ஹீரோயின்கள் வலை வீசினாலும் முதன் முதலில் சான்ஸ் கொடுத்த விஜய் பாஸ்கர் மனைவி பானு தான் இவனை அடைய ஆசைப்பட்டாள் .
பானு ஒரு பேரழகி அதே சமயத்தில் எக்க சக்க சொத்து உள்ளவள். அவளே விரும்பி வருகிறாள்.நமக்கு இனி ராஜா யோகம் தான் என்று கனவில் மிதந்தான். கேசவ்.
அஞ்சு வருஷம் ஆச்சு ஒரு குழந்தை இல்லை என்று பானு டாக்டரிடம் காண்பித்த போது, அவளுக்குக் குழந்தை பெறும் பாக்கியம் உண்டு ஆனால் டைரக்டர் விஜய் பாஸ்கர் ஒரு ஆண்மையில்லதவன்.என டாக்டர் சர்டிஃபிகேட் கொடுக்கவும் அதை வைத்து விஜய் பாஸ்கர் ஒரு இம்பொடென்ஸி. அவனால் நமக்கு இல்லற சுகம் கிடையாது என்று விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட் மூலம் அதுவும் கிடைத்தது.
பிரபல இயக்குனர் அவர் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டார் என்கிற செய்தி சோஷியல் மீடியாவிலும் பத்திரிக்கையிலும் பரவியது.
அதே சமயம் இயக்குனர் .முன்னாள் கணவர் விஜயபாஸ்கரை விவாக ரத்து செய்த அவர் மனைவி இப்ப கேசவ் வுடன் லிவிங் டூ கெதர் உறவில் வாழ்க்கை. என்று சோஷியல் மீடியாவில் செய்தி வந்தது அது வைரல் ஆச்சு.
கல்யாணம் செய்ய வற்புறுத்திய பானு
“வாட் !ஒங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா?. ‘
கேசவ் தான் ஹீரோ ஆனதும் அவன் குடும்ப ரகசியங்கள் மீடியாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
நீங்கள் கல்யாணம் ஆனவர் என்று யாருக்கும் தெரியாது. அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க. அவங்க ஒங்க வீட்டில் இருக்கட்டும். நீங்க என் வீட்டில் என்னோடு இருங்க”.
“நம்ம இரண்டு பேரும் லிவிங் டூகெதர் மாதிரி இருக்கலாம். தாலி மட்டும் வேணாம். அப்ப தான் நானும் என் பொண்டாட்டி கிட்டேயும் எங்க அப்பா கிட்டேயும் தப்புச்சுக்க முடியும்.”
“எப்படியோ நீ எனக்கு வேணும்”
இந்தச் செய்தியை பார்த்து விட்டு “என்னடா இதெல்லாம் என்று கேட்க சினிமா இண்டஸ்ட்ரில இப்படித்தான் கிசுகிசு வர தான் செய்யும் என்று சமாதானப்படுத்தி அவரை ஊருக்கு அனுப்பியிருந்தான் கேசவ்.
பானுவை வீட்டுக்கு ஒரு நாள் விருந்துக்கு வர சொல்லி யிருந்தான்.
அவன் மனைவியிடம் விருந்து தயார் பண்ண சொல்லி பானுவை அறிமுகம் செய்தான்.
அவள் நடையும் லிப்ஸ்டிக் உதடும். லோ கட் ஜாக்கெட் போட்டு வந்ததும் மீனாவுக்குப் பிடிக்க வில்லை.
அவள் நினைத்த மாதிரி படம் தயாரிக்கப் போகிறேன் கதை டிஸ்கஷன் என்று அடிக்கடி வர ஆரம்பித்தாள்..
கேசவ் நடவடிக்கையிலும் இப்போது மாற்றம் நிறைய. காணப்பட்டது.
இரவு நேரத்தில் பானுவுடன் சேர்ந்து குடித்து விட்டு அவளும் அவனும் ரூமில் ஒன்றாக இருக்க ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் சேர்ந்து இருப்பதைப் பார்த்த மீனா கண்டித்த போது அவ பெரிய இடத்து மனுஷி . நான் ஒன் மேல யம் லட்சுமி குட்டி மேலயும் அன்பா இருக்கேனா இல்லையா?.
‘நானும் அவளும் ஸ்டோரி டிஸ்கஷன் தான் பண்ணிகிட்டு இருந்தோம் “
அவன் சொன்னதை நம்பினாள்.
லிவிங்க்டூ கெதர் ரிலேஷன் வாழ்க்கை பானுவை கர்ப்பம் ஆக்கியது.
அன்று ஞாயிறு. இரவு வெளியில் டின்னர் முடித்து விட்டுக் குடிபோதையில் வந்த பானு மீனாவிடம் அக்கா “நீங்க பெரியம்மா ஆகப் போறீங்க”
அதிர்ச்சி ஆனாள் மீனா.
கேசவ் சமாளித்துப் பானுவை அவள் வீட்டில் ட்ராப் செய்யச் சொல்லி டிரைவரை அனுப்பினான்.
ஆனால் உள்ளுக்குள் சந்தேகத் தீ கொழுந்து விட்டு எரிய அவனைக் கேள்வி மேல் கேட்டாள் மீனா.
“ஒரு கட்டத்தில் கோபமாக.
ஆமாம் அவளை நான் கல்யாணம் செஞ்சுகிட்டேன். இஷ்டம் இருந்தா இந்த வீட்டிலே நீ இரு. அவ அவ வீட்டில இருக்கட்டும் . இல்லாட்டியும் நீ ஒங்க கிராமத்துக்குப் போ.”
நான் ஒருக்காலும் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்.
வாக்கு வாதம் பெரிசாகி போதையில் இருந்த கேசவ்டேபிள் மீது இருந்த கத்தியை எடுத்து மீனாவை கத்தியால் குத்தவும் இரத்த வெள்ளத்தில் இருந்த தன் அம்மாவை பாதித் தூக்கத்தில் எழுந்து வந்த லட்சுமி குட்டி பார்த்து விடவும் குழந்தையை ஒரு தனி ரூமில் பூட்டி விட்டு மற்ற காரியங்களைத் துரிதபடுத்தினான் . கேசவ்..
பண பலத்தினால் கேஸலிருந்து தப்பியிருந்தான். கேசவ்.
பிரச்சனை இதோடு முடிந்து விட்டது என்று நினைத்த நேரத்தில் , கேசவ் அப்பா தன் பையனை சும்மா விடக் கூடாது அவன் என் மருமகளைக் கொலை செய்தவன் அவனை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து தண்டனை வாங்கிக் கொடுக்கணும் , என்ன செலவானாலும் அதைத் தாங்கும் சக்தி தனக்கு உள்ளது என்று எண்ணி சுப்ரீம் கோர்ட்ல மனு கொடுத்து இருந்தார்.
இனி லட்சுமி குட்டி அவனோடு இருக்கக்கூடாது என்று எண்ணி தன்னோடு தன் ஊருக்கு அழைத்து வந்திருந்தார்..
உச்ச நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது… பெஞ்ச் அடங்கிய நீதிபதிகள்
Indian Evidence Act 1872 இந்தியா சான்றுச் சட்டம் 1872 படி
ஒரு குழந்தை சாட்சியின் ஆதாரங்களை மதிப்பிடும்போது நீதிமன்றம் எடுக்கும் ஒரே முன்னெச்சரிக்கை என்னவென்றால், இதுபோன்ற சாட்சி நம்பகமானவராக இருக்க வேண்டும், என்பது தான்
இந்திய சான்றிச் சட்டம் 1872இல் குழந்தையின் வாக்குமூலம் சாட்சி நிராகரிக்க. படவேண்டும் என்று எங்கும் சொல்லபட வில்லை
இந்தக் குற்ற வழக்கில் , குழந்தை லட்சுமி தான் நடந்த விபரங்களை நேர்மையாகவும் பயமின்றியும் சாட்சி கூறினாள்.
முதலில், உயர் நீதிமன்றம் குழந்தையின் மனநிலையை, பயத்தை மற்றும் வயதை கருத்தில் கொண்டு, அவளின் சான்றின் நம்பகத்தன்மையைக் குறைத்து, சான்றை நிராகரித்தது.
குழந்தைகள் கூறும் உண்மையை முழுமையாக மதித்து, குற்றவியல் விசாரணையில் அவற்றின் சான்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
ஆனால், இந்த உச்சநீதிமன்றம், குழந்தைகள் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தும் உரிமையை மதித்து, அவர்களின் மனநிலையை உணர்ந்து, இவ்வாறான சான்றுகளை நிராகரிக்க முடியாது என்றும் கேசவ் குற்றவாளி என்கிற தீர்ப்பை வழங்குகிறது..
தீர்ப்பை கேட்ட கேசவ் அப்பா நிம்மதி அடைந்தார்.
தெய்வம் நின்று கொல்லும். இப்போது கேசவ் புழல் சிறையில்.
நிம்மதி.

Leave a comment
Upload