தொடர்கள்
பொது
அட இதக் கேட்டீங்களா – பால்கி

20250429212136486.jpg

இன்றைய MRFன் தலைவர் அந்த கம்பெனி ஆரம்பிக்குமுன் பலூன் விற்றுக்கொண்டிருந்தாராம்.

இன்றைய அந்த கம்பெனியின் மதிப்பு ரூ. 59,334 கோடிதான்.

^^^^^^^^^^^^^^^

20250429212216514.jpg

டெலிவிஷன் நடிகையும் மாடலுமான கௌதமி கபூர் தனது பெண் சியா 16 வயது நிறம்பிய போது, அவளுக்கு ஒரு செக்ஸ் பொம்மையை கொடுக்க விரும்பினாராம், அது பற்றி சியாவிடமும் சொன்னாராம். கர் எக் மந்திர், பர்வரிஷ் என்ற ஹிந்தி தொடர்களில் நடித்தவர்.

இதற்காக, தான் கேலிக்கும் கண்டனத்துக்கும் ஆளாவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

#############

20250429212303938.jpg

கார்போரேட் அடிமையாய் இருக்குறத விட இது எவ்வளவோ மேலு!!!

என்கிறார் மயூர் சௌஹான்.பெருமையான இந்தியன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் இவர் ஒரு மீடியா இன்ஃப்ளூயன்சரும் கூட.

எட்டு எருமைகளைக்கொண்டே மாதத்திற்கு 70 லிருந்து 85 ஆயிரம் ரூபாயை செலவுகள் போக அருமையாக அமைதியாக சேமிக்கலாம் என்று ஒரு மாதிரி கணக்கையும் போட்டு அசத்தியும் இருக்கிறார்.

####################

ரூபாய் கோடி கோடியா சம்பாதிச்சாலும் வருமான வரி கிடையாது இங்கே

20250429212350382.jpg

சிக்கிம் தான். 1975 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்த இந்த மாநிலத்தின் இணைவதற்கு முன்னிருந்த ஒரிஜினல் சிக்கிமீஸ் மக்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி இது சாத்தியமாகிறது.

2025042921241572.jpg

மொனோகோவில் நடந்த F2 ரேஸ் போட்டியில் இந்திய தேசீய கீதம் பாடப்பட்டது.

இது ஒரு பெருமைப்படவைக்குகம் தருணம் தான். ஏனெனில், 24 மே, 2025 அன்று நடந்த ஃபார்முலா 2 ஸ்பிரின்ட் ரேஸில் இந்தியாவைச் சேர்ந்த குஷ் மைனி வெற்றி பெற்றார்.

20250429212526353.jpg

^

20250429212622179.jpg

44 வருஷப் பிரிவுக்குப் பின் தாயும் மகளும் கூடினர்.

தென் கொரியாவில் மே 1975ல் ஷாப்பிங்க் பண்ணிக்கொண்டிருக்கையில் ஹான் தே சூன் தனது மகள் க்யுங்க் ஹா வைத் தொலைத்திருக்கிறார். 2019ல் 325 கம்ரா எனும் குழு வெளிநாட்டில் வாழும் தத்து எடுக்கப்பட்ட கொரியன் குழந்தைகளை கொரியாவிலிருக்கும் மக்களை தவறவிட்ட பெற்றோர்களின் DNA மேட்சிங்க் மூலம் சேர்த்து வைக்கிறது. இந்த குழுவின் உதவியுடன் 2019 ல் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது.தொலைந்து போன குழந்தை , தற்போதைய 56 வயது பெண்மணி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

பிரிந்தவர் கூடினால்.....

20250429212645309.jpg

பெல்ஜியத்தின் இளவரசிஎலிசபெத்தின் ஹார்வார்ட் பல்கலைகழகப் படிப்பு என்னவாகுமோ?

எல்லாம் ட்ரம்ப் கையில் உள்ளது. அவர் தான் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கக்கூடாது என்று தடை விதித்துவிட்டாரே?