தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

2025052016380879.jpeg

பலவீனமான நூறு தொகுதிகளை கைப்பற்ற திமுக புது வியூகம்.

அது சரி ஒரு ஓட்டுக்கு எவ்வளவு ரூபா என்று கேட்கிறார் ஒரு வாக்காளர் !!

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் கோளாறு ...

பாதயாத்திரையே பாதுகாப்பானது இப்போதைக்கு இதுதான் நிலவரம் !!

எல்லோரும் பேசுவதை விட இருவரும் பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது ஜி.கே.மணி கருத்து.

இப்போதைக்கு அவங்க பேசறது தானே பிரச்சனையே !!

கூட்டணி பற்றி பொது வெளியில் பேசக்கூடாது அண்ணாமலைக்கு தடா போடும் தமிழிசை .

அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார் !!

பாமகவில் நடக்கும் பிரச்சனைக்கு திமுக தான் காரணம் அன்புமணி ராமதாஸ்.

அவ்வளவுதான் விடுங்க !!

தேமுதிக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் பிரேமலதாவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல் .

அதுக்கு நீங்க வலுவா இருக்கணுமே !!

திமுக தொகுதிகளை குறைத்துக் கொடுக்காது செல்வப் பெருந்தகை நம்பிக்கை.

நம்பிக்கைதான் வாழ்க்கை !!

எங்கே வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ அங்கு மூடிக்கொண்டு இருப்பேன் அண்ணாமலை.

அப்படியா .

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவே பெரியார் மண் ஆகும் கி.வீரமணி.

முருகா முருகா முருகா ...!!

இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளோம் முதல்வர்..

அத விடுங்க, 20000 ஆசிரியர் பணி காலி இடங்கள்னு சொல்றாங்க !!

முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு எடப்பாடி காட்டமான பதில் .

இப்ப இவர் பதிலுக்கு அவர் பதில் சொல்வார் இப்படியே பேசிக்கிட்டே இருங்க !!

தலைவர் பதவிக்கு அறவே தகுதியற்றவர் அன்புமணி டாக்டர்.ராமதாஸ்.

ரொம்ப லேட்!!

முருகன் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது அமைச்சர் ரகுபதி விமர்சனம்.

பாவம் திமுகவுக்கு இப்போதைக்கு முருகர் ஜுரம் !!