"எனக்கு இது கிடைத்தால் காணிக்கை போடுவேன், நான் நினைப்பது நடந்தால் விரதம் இருப்பேன் என்றெல்லாம் கடவுளிடம் வேண்டுதல் செய்து கொள்வது சரியா? எந்த முறையில் பக்தி செய்வது மிக உயர்ந்தது?"
வேண்டுதல் செய்து கொள்வது ஒரு பிழையான கருத்து. சுவாமி கிட்ட போய் வியாபாரம் பண்ணுகிற மாதிரி எனக்கு 50000 வந்தா 50 ரூபாய்க்கு வேல் பண்ணி போடுகிறேன் என்ற சுவாமிக்கு ஏதோ வேலில்லாத மாதிரி பேசுவது தவறு. நோய் நொடி வந்தால் அது தீர்ந்து போக வழி செய்தால் முடி எடுக்கிறேன் என்று பேசுவதும் தப்பு. நான் நினைக்கிற காரியம் நடந்தால் கோவிலில் வந்து பார்க்கிறேன் என்று நிபந்தனை போடுவதும் சரியல்ல இதெல்லாம் சுவாமி இடம் வியாபாரம் செய்கிற மாதிரி.
பெரிய புராணத்தில்,
"கூடும் அன்பில் கும்பிடுதல் இன்றி
வீடும் வேண்டா எதையும் விளங்குவார்;
வேண்டத்தக்க தறி தெளி நீ ;
வேண்டும் பொழுது தருவாய் நீ."
என்று சொல்லப்பட்டிருக்கிறது
நமக்கு என்ன தேவையோ, அது ஆண்டவனுக்குத் தெரியும். சர்வ ஞானவான், கருணாநிதி, கிருபாநிதி ,நமக்கு ஏதாவது கொடுத்தால் ஏன் கொடுத்தான் என்று கேட்கிறவன் கிடையாது,
"என் செய்தாய் என வினவிய நிறுவார் எனவே" என்பது கந்தபுராணம். அதனாலே சுவாமியே பலாபேட்க்ஷை இல்லாமல் சாமிகிட்டே பொன்னைக் கொடு, பொருளைக் கொடு என்று கேட்பது பிழை என்று சொல்ல வில்லை.
இது உயர்நிலைப்பள்ளி படிப்பு மாதிரி" எனக்கு ஒண்ணும் வேண்டாம் பக்தி தான் வேணும் முக்தி தான் வேணும்" என்று பக்தி செய்வது கல்லூரி படிப்பு மாதிரி. இது 'வேண்டாம்' என்கிற 'நிஷ்காமயமாக' பக்தி செய்கிற வழி-இதுவே உயர்ந்தது இது பட்டப்படிப்பு. எனக்கு அதைக் கொடு இதைக் கொடு என்று கேட்பது ஏழாவது எட்டாவது வகுப்பு படிக்கிற மாதிரி.
சுவாமி திருமுருக கிருபானந்த வாரியார்.
" வாழ்க்கையில் முன்னேற வாரியார் பதில்கள் " என்ற புத்தகத்தில் இருந்து.
Leave a comment
Upload