தொடர்கள்
ஆரோகியம்
" நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமிற்கு ஒரு விசிட் " - ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த வாரம் ஊட்டி செயின்ட் மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள பெத்தலேகம் பள்ளி ஒரு குட்டி மல்டி செபேஷாலிட்டி ஆஸ்ப்பிட்டலாக உருவாகியிருந்தது .

20250805140517966.jpg

இந்த பள்ளி சாலையான பியோலி சாலையை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலை முடுக்குகளில் எல்லாம் துழாவி பளிச் என்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர் .

அங்கு பணியில் இருந்த ஆய்வாளரிடம்

"என்ன சார் திடீர் சுத்தம் அமைச்சர் விசிட்டா " என்று கேட்க , " அங்கு பாருங்க" என்று முதல்வர் சிரித்து கொண்டிருக்கும் பேனரை சுட்டி காட்ட அதில் ' நலம் காக்கும் ஸ்டாலின் ' பளிச் என்று காட்சியளித்தது.

முதல்வரின் மருத்துவ முகாமிற்க்கு ஆம்புலன்சுகள் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் விசிட்டால் ரெடியாகிக்கொண்டிருந்தது அந்த பகுதி .

சனிக்கிழமை காலை பியோலி சாலை முழுவதும் மாவட்டத்தின் அனைத்து மருத்துவ குழுக்களும் படையெடுத்து கொண்டிருந்தனர் .

செயின்ட் மேரிஸ் பாரிஷ் ஹாலில் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மருத்துவ சுகாதார பணியாளர்களுக்கு காலை பிரேக் பாஸ்ட் இட்டிலி , பொங்கல் காபி டீ என்று படு பிசியாக வழங்க பட்டது .

சரியாக 9 மணிக்கு மருத்துவ முகாம் துவங்கியது .

நாமும் ஒரு நேரடி விசிட் அடித்தோம் .

பள்ளியின் நுழைவாயிலியே முதல்வர் சிரித்து கொண்டு வரவேற்றார் .

20250805140555678.jpg

முகாமுக்கு வரக்கூடிய மக்கள் பதிவு முதல் அனைத்து பரிசோதனைகளும் நான் ஸ்டாப்பாக நடைபெற்றதை பார்க்க முடிந்தது .

சிகிச்சைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வரைபடம் வரவேற்றது .

20250805140624851.jpg

அனைத்து வகுப்புகள் , ஆய்வு கூடம் என்று எல்லா இடத்திலும் மருத்துவர்களின் படு பிசி செக்கப் நடைபெற்று வந்தது .

பொது மருத்துவம் துவங்கி சித்த மருத்துவம் வரை 17 சிறப்பு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டது .

இசிஜி எக்கோ மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய் சேய் ஆலோசனை ஸ்கேன் சிகிச்சை அருமையாக நடைபெற்றது .

பள்ளியின் ஆய்வு கூடம் அனைத்து உடல் ஆய்வு கூடமாக மாறியிருந்தது .

20250805140650260.jpg

ஆசிரியர்களின் அறை முழுவதும் மருந்து வழங்கும் பார்மசியாக திகழ்ந்தது .

மொத்தம் ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் இந்த சிறப்பு முகாமை நடத்தினார்கள் படு சுறுசுறுப்பாக .

20250805140720913.jpg

ஊட்டி நகர மன்ற தலைவி வாணீஸ்வரி தன்னை பதிவு செய்து முழு மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டார் .

" நலம் காக்கும் ஸ்டாலின் " மருத்துவ முகாம் சூப்பர் என்கிறார் நகர மன்ற தலைவி .

வழக்கமாக மருத்துவ முகாம் என்பது எனோ தானோ என்று இருப்பது வழக்கம் .

நாம் முகாமை சுற்றி பார்க்க படு பிசியாக முழு கண்ணும் கருத்துமான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றதை பார்த்து ஆச்சிரிய பட்டோம் .

இசிஜி எக்கோ எடுத்தவுடன் நம் முன் வந்தார் பாலமுருகன் ,

20250805140754270.jpg

" தமிழ்நாடு அரசு நடத்தும் நலம் காக்கும் ஸ்டாலின் அருமையான முகாம் எல்லா டெஸ்டுகளும் எடுத்துள்ளேன் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ஏகப்பட்ட செலவு இங்கு எல்லாம் இலவசம் அரசு மருத்துவமனைக்கு அனைவரும் செல்வது சிறப்பானது முதல்வருக்கு நன்றி " என்கிறார் .

முகாம் முழுவதும் இளம் மருத்துவர்களை பார்க்க முடிந்தது .

ஷீலா கூறும் போது ,

20250805141150362.jpg

"இந்த முகாம் நடத்துவது முதல்வரின் நல்ல திட்டம் .இதை எல்லோரும் உபயோகித்து கொள்ளவேண்டும் .பிபி , ஷுகர் ,இசிஜி டெஸ்ட் என்று எல்லா பரிசோதனைகளும் செய்கிறார்கள்

நிறைய பணம் கொடுத்து தனியார் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு செல்வது நல்லது .அரசின் உதவியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் " என்கிறார் .

செக்கப்புக்கு வந்த கிளாரா ,

20250805141412504.jpg

"இப்படியொரு மெடிக்கல் கேம்பை பார்த்ததில்லை இங்கு வந்தவுடனே புது தெம்பு ஏற்பட்டுள்ளது இன்னும் டெஸ்ட் எடுக்கணும்" என்று படு உட்சகமாக நடந்தார் கண் டெஸ்டுக்கு ...

ஊட்டி எம் .எல் .ஏ கணேஷ் முகாமிற்க்கு வந்து ஆச்சிரியப்பட்டார் .

20250805141443828.jpg

முகாமிற்கு தன் கர்ப்பிணி மனைவியுடன் வந்து டெஸ்டுகள் எடுத்து விட்டு தங்களின் கண்களை தானமாக கொடுத்தனர் அர்ஜுனன் ராஜேஸ்வரி தம்பதியினர் .

எம் .எல் .ஏ கணேஷ் கண் தானத்திற்கான சான்றிதழை அவர்களுக்கு வழங்கி ஆச்சிரியத்துடன் பாராட்டினார் .

ஊட்டி மருத்துவ கல்லூரி டீன் ஸ்ரீ சரவணன் மருத்துவ குழுவுடன் முகாமை கண்காணித்து கொண்டிருந்தார் ,

20250805141509588.jpg

எப்படி முகாம் நடைபெறுகிறது என்று கேட்க ," ரொம்பவே சிறப்பாக இருக்கிறது .எனக்கே ஹாஸ்பிடல் பீலிங் .

என்ன அவசரமாக இருந்தாலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வாருங்கள் நல்ல நலம் காக்கும் சிகிச்சை வழங்க படுகிறது .

இந்த முகாமை பார்த்தாலே புரியும் நம் அரசின் மருத்துவ சிகிச்சை எப்படி என்று .

' நலம் காக்கும் ஸ்டாலின் ' மருத்துவ முகாம் ஒரு முழுமையான பரிசோதனை மட்டும் அல்ல உடல் உள்ள ரிதியாக ஆரோக்கியம் கிடைக்கும் முகாம் " என்று கூறி நகர்ந்தார் .

20250805143002870.jpg

தமிழ்நாடு அரசு

கொறடா ராமச்சந்திரன் .

மாவட்ட ஆட்சியர் நேரில் விசிட் செய்து முகாமை பற்றி மக்களிடம் கேட்டு தெரிந்துகொண்டனர் .

இந்த மருத்துவ முகாமில் இரண்டாயிரம் பேர் முழு உடல் பரிசோதனை செய்து உடல் உள்ளம் நலம் பெற்று சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .