தொடர்கள்
அனுபவம்
நேபாளத்தில் ஒரு காட்டுமிராண்டி சட்டம் - ராம்

20250806101802948.jpeg

இந்திய நாட்டு மக்கள் நேபாளத்திற்கு கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமல் ஓட்டு பதிவு அடையாள அட்டை வைத்துக் கொண்டு பறக்கலாம்.

நல்ல சட்டம் தான்.

ஆனால் பிரச்சினை இந்தியாவிலிருந்து சென்று வருபவர்களுக்கு இல்லை. வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் நேபாளத்திற்கு வந்து விட்டு, மீண்டும் அவர்கள் நாட்டுக்கு செல்லும் போது.

அவர்கள் இந்திய தூதரகத்திற்கு சென்று தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டுமாம்.

அதாவது இந்திய கடவுச் சீட்டு வைத்திருந்து, அவர்கள் வெளிநாட்டு வாழ் அடையாள அட்டையோ அல்லது வெளி நாட்டு வாழ்வுரிமையோ இருந்தாலும் இந்திய தூதரகத்திற்கு சென்று நேபாள ரூபாய் சில ஆயிரங்கள் அழுது விட்டு சான்றிதழ் பெற்று வந்தால் தான் வெளிநாடு அவர்கள் வாழும் நாட்டுக்கு திரும்ப முடியுமாம்.

இது என்ன லாஜிக் எழவோ புரியவில்லை.

நேபாள அதிகாரிகளிடம் கேட்டால் இது உங்கள் நாட்டு சட்டம் அவர்களைப் போய் கேளுங்கள் என்று அலட்சியாமாக சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல நம்மூர் ஜெய்ஷங்கர் அமித் ஷாவிடம் மாதாமாதம் சம்பளம் வாங்குவது போல இந்திய அதிகாரிகளிடம் பயந்து சாகிறார்கள்.

20250806102415211.jpeg

குறைந்தபட்சம் இந்த பிரிட்டிஷ் காலத்து காட்டுமிராண்டி சட்டத்தை கைலாய பயணம் சமயத்திலாவது நிறுத்தி வைக்க வேண்டும்.

இல்லையெனில் நேர விரயம். பண விரயம். வீண் அலைச்சல்.

அந்த நேபாள இந்திய தூதரக பூனைக்கு யார் மணி கட்டுவது.

உண்மையில் இந்த இந்திய சட்டம் எரிச்சலின் உச்சம்.

யாராவது இதற்கு ஒரு முடிவு கட்டினால் தான் வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கு நிம்மதி.

கைலாய பயணக் கட்டுரை அடுத்த வாரம் தொடரும்........