ஆசிரியர் தகுதி தேர்வில் (Teacher Eligibility Test) பாஸ் மார்க்காக இருக்கும் 90/150 ஐக் குறைத்து 20 ஆக்கி அதை அமலுக்கும் கொண்டு வரச் சொல்லி தமிழக அரசை தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
கல்விக்கான உரிமை சட்டம் 2009 ன் கீழ் எட்டாம் வகுப்பு வரை கட்டாய கல்வி இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு உண்டு. அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு 2011ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி அதில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் தகுதி பெற்றவர்களாகிறார்கள்.
தமிழகத்தில், கேள்வித்தாள் 1, 1-5 வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்களுக்கும், கேள்வித்தாள் 2, 6-8 வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்களுக்கும் என குறிப்பிடப்படுகிறது.
இந்த தகுதி தேர்வை ஆசிரியர்கள் எதிர்த்து வருகிறார்கள். இதற்காக மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் தகுதித் தேர்வுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்திற்கும் சென்று விட்டனர். அங்கும் அவர்களுக்கு அருள் கிடைக்காது போகவே தற்போது பாஸ் மார்க்கைக் குறைக்கும்படி மாநில அரசை வற்புறுத்தி வருகிறார்கள்.
ஆசிரியர்கள் பாஸ் செய்வார்களா?
Leave a comment
Upload