பாஞ்சாலி / திரெளபதி
துருபதன் செய்த வேள்வியின் மூலம் அர்ஜுனனை மணம் புரியக்கூடிய மகளாக பாஞ்சாலி பிறந்தாள். கூடவே துரோணரை கொல்ல திருஷ்டத்யும்னனும் பிறந்தான்.
அர்ஜுனனை மணந்து, பாண்டவர்களுக்கு மனைவியாகி, துரியோதனன் கட்டளையால் அவைக்கு அழைக்கப்பட்டு பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டாள். பரம்பொருளின் கருணையால், தன்னையும் காத்து, கணவர்களையும் காப்பாற்றி, அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் பெற்று, 12 ஆண்டு வனவாசமும் பின் ஓராண்டு அஞ்ஞானவாசமும் செய்தாள்.
கௌரவர்களை வென்று தருமன் அரசாட்சிக்கு பின் பாண்டவர்களுடன் சொர்க்கம் சென்றாள்.
குறளும் பொருளும்
தன்னை காத்துக் கொண்டு, கணவனை காப்பாற்றி, சொன்ன வார்த்தையையும் காப்பாற்றி, சோர்வில்லாமல் இருப்பவள் பெண்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் 56
கௌரவர்
கௌரவர் கொண்டிருந்த குணம் குரோதம் என்னும் மன மாறுபாட்டு உணர்ச்சி. அதிகாரத்தில் இருந்த கௌரவர் குரோதத்தாலும் தந்தை திருதராஷ்டிரன் கொண்ட அளவிறந்த பாசம் காரணமாகவும் தங்கள் விருப்பப்படி நடந்தார்கள். துரியோதனனால் துவங்கிய பாண்டவர்களின் மீதான போட்டியும், பொறாமையும் கௌரவர்களின் வாழ்க்கையில் சேர்ந்தே வளர்ந்து பல்கிப் பெருகி குரு வம்ச வீழ்ச்சி பாரத யுத்தத்தில் முடிவுற்றது.
நேர்மையற்ற செயல்களை துரியோதனன் விருப்பம் போல கௌரவர் செய்தனர்.
குறளும் பொருளும்
மற்ற உயிர்களோடு ஒத்துப் போகாத தீய குணத்தை வளர்க்கின்ற நோயை இகல் என்பார்கள்; குரோதம் எனலாம்.; ஒன்றுபடாமல் பிரிப்பது; மன மாறுபாட்டு உணர்ச்சி எனலாம்
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பின்மை பாதிக்கும் நோய் 851
கயவர்கள் இஷ்டப்பட்டதை செய்வதால் தேவர்களைப் போல .
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்து ஒழுகலான் 1073
Leave a comment
Upload