தொடர்கள்
விகடகவியார்
டெல்லியில் அமித்ஷா எடப்பாடி சந்திப்பு -விகடகவியார்

20250820063223929.jpg

தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது.

செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக கோரிக்கை என மீண்டும் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து எடப்பாடி மீண்டும் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தார்.

அமித்ஷாவை நான் சந்தித்து மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் அவ்வளவுதான்.

அதிமுக உள் விவகாரங்கள் பற்றி அவர் எதுவும் என்னிடம் பேசவில்லை.

ஏற்கனவே அவர் தெளிவுபட சொல்லிவிட்டார் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் நான் தலையிட மாட்டேன் என்று நிருபர்களை சந்திக்கும் போது தெரிவித்தார் எடப்பாடி.

செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தபோது செங்கோட்டையனிடம் உங்களை நம்பி எத்தனை மாவட்டச் செயலாளர்கள் வருவார்கள் எத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் வருவார்கள் என்று கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

எடப்பாடி கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று எல்லோரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்.

தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தி கட்சியை முடக்குவது சின்னத்தை முடக்குவது போன்றவை எல்லாம் பாஜகவுக்கு கெட்ட பெயரைத் தான் சம்பாதித்து தரும்.

தவிர அப்படியே நாம் செய்தாலும் கூட எடப்பாடிக்கு ஆதரவாக திமுகவை குரல் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

இந்த விஷயத்தில் நான் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.

அமித்ஷாவிடம் திமுக அமைச்சர்கள் மீது சில ஊழல் புகார்களை சொல்லி அதற்கான ஆதாரங்களை அமித்ஷாவிடம் தந்தார்.

எடப்பாடி அமித்ஷாவுக்கும் தனக்கும் நெருக்கமான ஒரு தொழிலதிபரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் அவர்தான் எடப்பாடி சொன்னதை இந்தியில் அமித்ஷாவிடம் மொழி பெயர்த்து சொல்லியிருக்கிறார்.

அமித்ஷாவை சந்தித்தபோது கூடவே வேலுமணி, கே.பி.முனுசாமி போன்ற முக்கிய தலைவர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வேலையில் அண்ணாமலை ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

அண்ணாமலைக்கு எதிராக சில தகவல்களை நிர்மலா சீதாராமன் அமித்ஷாவிடம் சொல்லி இருக்கிறார்.

தமிழக பாஜக எடப்பாடியை அனுசரித்து செல்ல வேண்டும் என்று தான் டெல்லி தலைமை தமிழக பாஜகவுக்கு சொல்லி இருக்கிறது.

திமுக அமைச்சர்கள் பற்றி எடப்பாடி தந்த கோப்பை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் அமித்ஷா யோசிக்க ஆரம்பித்து விட்டார்.