ருக்மணி வசந்த்
ஏஸ் மற்றும் மதராசி படங்களை அடுத்து மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார் ருக்மணி வசந்த். "தற்போது தமிழில் மார்க்கெட்டை பிடிப்பது தான் முக்கியம். அதனால் அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டும் தேடி வருகிறேன் "என்கிறார் நடிகை.
சமந்தா
"கடந்த இரண்டு ஆண்டுகளாக என் படம் எதுவும் வெளிவரவில்லை. நான் தற்சமயம் முன்னணி நடிகை பட்டியலில் இல்லை என்னிடம் ஆயிரம் கோடி மதிப்புள்ள படங்கள் இல்லை ஆனாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்கிறார் நடிகை சமந்தா.
தமன்னா
"நான் சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன். நான் கிடைத்தது முற்பிறவியில் நான் செய்த புண்ணியமென என் கணவர் நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கை துணையாக அமைய வேண்டும். யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை "என்கிறார் தமன்னா.
பிரக்யா நக்ரா
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படத்தில் நடித்தவர் பிரக்யா நக்ரா. இவர் நடித்த லாக்டவுன் காதல் எனும் குறும்படம் யூடியூபில் வெளியாகி இருக்கிறது. அதற்கு நல்ல வரவேற்பு. இது தவிர மலையாள படமான சுந்தரி யமுனா படத்திலும் நடித்திருக்கிறார். எல்லா பிரபலமும் போல் இவரும் சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி
ஒரு காலத்தில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்த ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளத்துக்கு குட் பை சொல்லிவிட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணம் "சமூக வலைதளம் எனது நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது. எளிய இன்பத்தை மகிழ்ச்சியற்றதாக மாற்றியது "என்கிறார். உண்மைதானே ?
திவ்யா பாரதி
' பேச்சுலர் ' படம் மூலம் அறிமுகமான திவ்யா பாரதி பேச்சுலர்களின் மனதை கவர்ச்சி போட்டோக்களால் கவர்ந்து கொண்டிருக்கிறார். "முதல் 10 படங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் நான் பார்த்து பார்த்து கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன் நச்சுனு இருக்க வேண்டாமா "என்கிறார் நடிகை.
மஞ்சு வாரியார்
மலையாளத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முதல் கதாநாயகி மஞ்சு வாரியார்தான். அவர் சொத்து மதிப்பு 142 கோடி என்கிறார்கள்.
பொங்கல் ரிலீஸ்
ஜனநாயகன் படம் ஜனவரி 9 ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா நடிக்கும் பராசக்தி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் இந்த முறை விஜய்க்கு போட்டி சிவகார்த்திகேயன் தான்.
திரிஷா
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சைமா வழங்கும் விழாவில் சினிமாவில் 25 ஆண்டுகளாக பயணித்து வரும் திரிஷாவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார்கள். அந்த விழாவில் விஜயின் படத்தை காண்பித்து இவரைப் பற்றி பேசுங்கள் என்றார்கள். சிரித்து விட்டு "அவரின் புதிய பயணத்திற்கு குட்லக் அவரின் கனவு எதுவாக இருந்தாலும் நிறைவேற வேண்டும் "விஜயின் அரசியல் பயணத்திற்கு த்ரிஷாவின் வாழ்த்து வீடியோ இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.
விஜய் சேதுபதி
கவின் நாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் கிஸ் படத்தில் சிறு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
Leave a comment
Upload