தொடர்கள்
அழகு
கன்னியாகுமரி – சுறா இறகுகள் ப ஒப்பிலி

20250820080409142.jpg

ஒருகாலத்தில் சுறா இறகுகள் ஏற்றுமதியின் மையமாக அறியப்பட்ட சென்னை, இப்போது அந்த களங்கத்தை கன்னியாகுமரிக்கு ஒப்படைத்துவிட்டது. அங்கு சுறா இறகுகள் மற்றும் அபாய நிலையில் உள்ள கடல் உயிரினங்களின் சட்டவிரோத வர்த்தகம் செழித்து வருகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு, மூன்று லாரிகளில் கடல்பறக்கும் சுறாக்கள் (Manta rays), பிக் ஐ த்ரெஷர் சுறாக்கள், உலர்த்தப்பட்ட சுறா இறகுகள் உள்ளிட்ட, அட்டவணை – I-ல் உள்ள பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் தேங்காய்பட்டினத்தில் பிடிபட்டன. ஆனால் அந்த சரக்குகள் பறிமுதல் செய்யப்படவில்லை. பல்வேறு அமைப்புகளின் அழுத்தத்தால், அவை சட்ட நடவடிக்கைக்காக தடுத்து வைக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“கன்னியாகுமரியில் உள்ள தொட்டூரில், ஒரு பிராஸஸிங் யூனிட் இயங்கி வருகிறது. அங்கு பிடிக்கப்பட்ட சுறா இறகுகள் சுத்தம் செய்யப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன, பின்னர் ஏற்றுமதிக்குத் தயார் செய்யப்படுகின்றன.

இங்கிருந்து அவை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கும் சுறா சூப் மிகவும் விலைமதிப்புள்ள உணவாகக் கருதப்படுகிறது. ஒரு கிலோ சுறா இறகு ரூ.30,000 வரை விலை பெறுகிறது. ஹாங்காங் சந்தைகளில் அதைவிட கூடுதல் விலையும் கிடைக்கிறது,” என்றார்.

மேலும் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட சுறா இனங்கள் இறகுகளுக்காக வேட்டையாடப்படுகின்றன. அதில் சில — த்ரெஷர் சுறா, கங்கை சுறா, பிளாக்டிப் ரீஃப் சுறா ஆகியவை — விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I மற்றும் II-ல் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சுறா இறகுகளை உண்ணுவது சட்டப்படி தடை செய்யப்படவில்லை என்றாலும், அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதி சட்டவிரோதமாகும். சட்ட அமலாக்க குறைபாடு மற்றும் கடுமையான தண்டனைகளின் இல்லாமை காரணமாக இந்த வர்த்தகம் தடையின்றி வளர்ந்து வருகிறது.

சமீபத்தில், கன்னியாகுமரியில் ஒரு மீனவர் தனது பெரிய சுறா பிடிப்பின் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், இந்தக் கடத்தல் நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்தது. “அந்த பதிவு இல்லையென்றால், இந்தச் செயற்பாடுகள் வெளியில் தெரியாமல் போயிருக்கும்,” என ஒரு வனவிலங்கு அதிகாரி குறிப்பிட்டார்.

மீனவர் சமூகங்களே இவ்வியாபாரத்தை ஒப்புக்கொள்கின்றனர். சென்னையை அடிப்படையாகக் கொண்ட கடல் ஆழ்தாழ்வு மீன்பிடி நிபுணர் வி.பாலாஜி கூறியதாவது “சென்னை மற்றும் கோவளம் இடையே சுறா பிடிப்பு அன்றாட நிகழ்வாகவே உள்ளது. சுறாக்களின் இறகுகள் சேகரிக்கப்பட்டு, போதுமான அளவு ஆனபின் மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மனிதன் ஒவ்வொரு முறை இயற்கையோடும், பிற உயிரிங்களோடும் விளையாடுகையில் ஒன்றை மறந்து விடுகிறான்......

இந்த பூமி நம் முன்னோர்களிடமிருந்து வந்த சொத்து அல்ல....

நம் வருங்கால சந்ததிகளிடமிருந்து வாங்கிய இரவல்.