முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் முப்பது வளர்ப்பு யானைகள் கம்பிரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது .
இந்த யானைகள் சில கும்கிகளாக வலம் வந்து முதுமலையின் ஹீரோ ஹீரோயின்களாக உலாவி வருகின்றன .
ஐம்பது பாகன்கள் இவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர் .
அரசு இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது .
இந்த யானைகளின் முக்கிய ஹீரோவாக வலம் வந்த யானை 54 வயது மதிக்க தக்க சந்தோஷ் .
1971 ஆம் ஆண்டு இதே முகாமில் பிறந்த சந்தோஷ் வளர வளர அனைவராலும் ஈர்க்கப்பட்டு ஆச்சிரியமாக பார்க்கப்பட்டதற்கு காரணம் அதன் அழகான தந்தம் தான் .
ஆரம்பத்தில் கவர்ச்சியாக இருந்த தந்தம் யானை வளர சற்று சிரமத்தை கொடுத்துள்ளது .
சந்தோஷின் வளர்ச்சியை விட தந்தத்தின் வளர்ச்சி நீளமாகி 7 முதல் 8 அடியாக வளர்ந்து நிற்க ஒரு பக்கம் அழகு கவர்ச்சியாக இருந்தாலும் சந்தோஷிற்கு ஒரு சங்கடம் பிரச்சனை ஏற்பட்டது .
காட்டிற்குள் சென்று உணவு சேகரிக்க கடின பட்டுள்ளது .
நடக்கும் போதும் சிரமங்கள் ஏற்பட கால்நடை மருத்துவர்கள் சந்தோஷின் தந்தங்களை நெகம் ட்ரிம் செய்வது போல தந்ததை ட்ரிம்செய்துள்ளனர் .
சில சமயம் ட்ரிம் செய்ய சந்தோஷ் ஒத்துழைக்கும் சில நேரம் ஒத்துழைக்காமல் சென்றுவிடுமாம் !.
பொதுவாக ஆண் யானைகளின் தந்தங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று சிறியதாகவும் பருமனாக இருப்பது வழக்கம் .
மற்றது நீளமாகவும் மெலிந்து காணப்படும் .
சந்தோஷின் தந்தம் இரண்டாவது டைப் என்கின்றனர் வன துறையினர் .
சந்தோஷின் தந்தங்களை ட்ரிம் செய்ய அது வளர்ந்தது ஒரு வழியாக 4 அடி முதல் 5 அடியாக குறைக்க முடிந்தது என்கின்றனர் .
இந்த அபார தந்தத்தின் வளர்ச்சி யானையின் மரபியல் சம்பந்தப்பட்டது என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள் .
இரவு நேரங்களில் வாகனங்களின் போக்குவரத்து இல்லாமல் இருக்கும் அப்பொழுது சந்தோஷ் ஹாயாக நெடுஞ்சாலையில் வாக்கிங் செல்வதை பார்க்கலாம் .
பெங்களூர் பஸ் ஓட்டுனர்களுக்கு சந்தோஷ் ஒரு இரவு நண்பர் .
வளர்ந்த சந்தோஷை தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு அனுப்பிவைக்க அங்கு சில பிரச்சனை ஏற்பட மீண்டும் முதுமலை முகாமுக்கு அழைத்து வரும் வழியில் பயங்கரமான விபத்தில் சிக்கி உயிர்பிழைத்து வந்துள்ளது .
அந்த விபத்தில் தந்தம் உடையவில்லை என்பது ஆறுதலான விஷயம் .அதே சமயம் சந்தோஷ் மனதளவிலும் உடலளவில் பாதிக்க பட்டு சிகிச்சைக்கு பின் சிறிது காலம் கும்கி டியூட்டியை பார்த்தது .
அதற்கு பின் உடல் உபாதை மற்றும் தந்தத்தின் வளர்ச்சி சந்தோஷ் ரெஸ்ட் எடுக்க துவங்கியது .
இதனிடையே சந்தோஷின் பற்கள் பாதிப்பு ஏற்பட்டு உணவு உட்கொள்ளாமல் தவித்தது .
தந்தத்தின் வளர்ச்சி , பல் பிரச்சனை என்று காட்டினுள் மேய்ச்சலுக்கும் செல்ல முடியவில்லை .
உணவும் உட்கொள்ளமுடியாமல் தவித்த சந்தோஷ் உடலுறுப்புகள் பாதிக்க பட்டு கடந்த வாரம் 10 ஆம் தேதி அதிகாலை அமைதியாக தன் தந்தங்களை மண்ணுக்குள் பொதித்து உயிர்விட்டது தன் 54 ஆம் வயதில் பரிதாபமாக .
பாரத பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின் , ராகுல் காந்தி என்று பல வி வி ஐ பிகள் சந்தோஷிற்கு கரும்பு கொடுத்து அதன் தந்தத்தை ரசித்து சென்றுள்ளனர் .
2007 ஆம் ஆண்டு லண்டன் பிரின்ஸ் பிலிப் திடீர் என்று முதுமலை யானைகள் முகாமிற்கு விசிட் செய்துள்ளார் .
சந்தோஷுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்துள்ளார் பிலிப் .
அந்த நிகழ்வை படம் பிடித்த மூத்த பத்திரிகையாளர் ஆர் .ஏ .தாஸ் கூறும் போது ,
" பதினேழு வருடத்திற்கு முன் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமுக்கு லண்டன் அரசியின் கணவர் பிரின்ஸ் பிலிப் முதுமலைக்கு விசிட் செய்து யானைகளுக்கு கரும்பு கொடுத்து ரசிக்க அவரை நான் படமெடுக்க why you are covering me take lovely elephants pictures என்று கூற நான் அவரிடம் கூறினேன் ,
" Now you are important " என்று கூற சிரித்து விட்டு நகர்ந்தது இன்னும் என் நினைவில் " என்கிறார் தாஸ் .
சந்தோஷின் தந்தங்கள் பாதுகாக்க படலாம் என்கின்றனர் முதுமலை வன துறையினர் .
சந்தோஷை மிஸ் செய்த சோகத்தில் முழ்கியுள்ளது முதுமலை சரணாலயம் .
Leave a comment
Upload