சமூக வலைதளத்தில் இப்படித்தான் ஒரு பட்டிமன்றமே நடக்கிறது. அண்ணாமலை உத்தமர் காந்தி வழித்தோன்றல், நேர்மையானவர் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து அவர் ஆதரவாக எழுதிக் கொண்டு வருகிறார்கள், பதிவு செய்து கொண்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் அண்ணாமலை ஊழல் பேர்வழி என்ற பிரச்சாரமும் நடக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில் அவர் வாங்கிய ஒரு சொத்து விவகாரம் தான்.
அதாவது தொண்டாமுத்தூர் பகுதியில் ரூபாய் என்பது கோடி மதிப்பிலான 14 ஏக்கர் நிலம் அண்ணாமலை பெயரில்வாங்கப்பட்டதாகவும் அதன் பத்திர மதிப்பு 4.5 கோடி எனவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வெளியானதும் இயற்கை விவசாயம் செய்வதற்காக கடந்த ஜூலை பன்னிரண்டாம் தேதி நிலம் வாங்கப்பட்டது. பத்திரப்பதிவு கட்டணமாக 40,59,220 செலுத்தி இருப்பதாக தெரிவித்தார் அண்ணாமலை. அண்ணாமலை சொத்து விவரத்தை முதலில் வெளியிட்டது மாரிதாஸ். இவர் பாஜக அனுதாபி, ஆனால் அண்ணாமலை எதிர்பாளர். இந்த பத்திரப்பதிவு அண்ணாமலையின் கோயம்புத்தூரில் உள்ள வீட்டில் நடந்திருக்கிறது. இதுக்கு பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி தான் உதவினார். இப்போது அவர் வாங்கியிருக்கும் நிலத்துக்கு போவதற்கு ஏதுவாக பாலம் கூட திமுக அரசு கட்டித் தந்திருக்கிறது என்ற பேச்சும் வருகிறது.
அண்ணாமலை பற்றி ஃபிளாஷ் பேக் நாம் அனைவரும் அறிந்தது தான்.
சமீபத்தில் நிர்மலா சீதாராமன் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தார். அந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசும்போது பாராளுமன்றத் தேர்தலின் போது மாநிலச் தலைமை கேட்டது எல்லாவற்றையும் செய்து கொடுத்தோம். ஆனால் ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை நாம் என்று அண்ணாமலையை மறைமுகமாக தாக்கினார் நிர்மலா சீதாராமன். (நிர்மலா தேர்தலிலேயே நிற்காத அமைச்சர் என்பது நமக்கு தெரியும்)
கூடவே தேர்தலில் நமது தோல்விக்கான காரணம் என்ன என்பதையும் நீங்கள் ஆராய வேண்டும் என்று சொன்னார் நிர்மலா சீதாராமன். அண்ணாமலை சமீபத்தில் நிருபர்கள் சந்திப்பில் எடப்பாடி நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள் விமர்சனம் செய்தீர்கள் இப்போது அவரை ஆதரித்து பேசுகிறீர்கள் என்ற போது எனக்கு தனிப்பட்ட முறையில் கோபம் ஆற்றாமை இருக்கிறது. எடப்பாடி மீது தனக்கு இப்போதும் கோபம் தான் என்று தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தினார் அண்ணாமலை. செப்டம்பர் 3ஆம் தேதி அமித்ஷா வீட்டில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தையும் அண்ணாமலை புறக்கணித்தார். இதற்கு அவர் சொன்ன காரணம். சில முக்கிய திருமணங்களுக்கு செல்வதாக வாக்கு கொடுத்து விட்டேன் என்பது.
ஆனால் அண்ணாமலையை இந்த கூட்டத்துக்கு அமித்ஷா அழைக்கவே இல்லை என்கிறது நயினார் நாகேந்திரன் தரப்பு .அண்ணாமலையை டெல்லி தள்ளி வைத்திருக்கிறது. காரணம் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு கட்சியைப் பின்னுக்கு தள்ளி விடுகிறார் என்பதுதான். இதை டெல்லி தலைமையும் இப்போது நம்ப ஆரம்பித்துவிட்டது. அண்ணாமலைக்கு இப்போது இறங்கு முகம் தான் என்கிறது அண்ணாமலை எதிர்ப்பு கோஷ்டி.
கடந்த வாரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை விருந்தினர் விடுதியில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எ.சந்தோஷ் தமிழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார். எனக்கு உடல்நிலை சரியில்லை நான் வரமாட்டேன் என்று முதலில் மறுத்தார் அண்ணாமலை. அதன் பிறகு சந்தோஷ் அண்ணாமலையை நேரில் சென்று அழைத்து வந்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பற்றி அதன் தொடர்பான ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் அண்ணாமலை முன் வைத்தார். அப்போது அவர் எடப்பாடிக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை சொன்னார். இதேபோல் நிலம் சம்பந்தமாக அவர் ஒரு பேட்டி தந்தார்.
இது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கியது. நான் இப்போது முன்னாள் தலைவர் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்தால் போவேன். மற்ற நேரங்களில் இயற்கை விவசாயம் பார்ப்பேன். நான் கொள்ளையடித்து எல்லாம் சொத்து வாங்கவில்லை என்று விளக்கமும் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை என்பதையும் கவனிக்க வேண்டும்.
அண்ணாமலை நல்லவரா கெட்டவரா ??
நாயகன் ஸ்டைலில் பதில் சொன்னால்... தெரியலையேப்ப்பா........
Leave a comment
Upload