தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250820062428790.jpeg

அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள் எடப்பாடி ஆவேசம்.

சரிதான், அதனாலதான் தாமரை கட்சி கூட அவங்கள கண்டுக்கவே இல்ல

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல , டிடிவி தினகரன் மறுப்பு.

ஆனா, உங்களை அமலாக்கத் துறையிடமிருந்து காப்பாற்றுவது அவங்க தானே !!

எடப்பாடியின் டெல்லி பயணம் தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல சென்றிருக்கலாம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அட இது நல்ல ஐடியாவா இருக்கு !!

மீண்டும் மகுடம் சூடு வார் ஸ்டாலின் – வைகோ.

கூட்டணி தர்மம் !!! கூட்டணி தர்மம் !! கூட்டணி தர்மம் !

நயினார் நாகேந்திரனுடன் செல்பேசியில் பேசினேன் ஓபிஎஸ்.

பேசுங்கன்னு எடப்பாடி பர்மிஷன் தந்திருப்பார் போல !!

2026-இல் 'மலிவான' அரசியலை வீழ்த்துவோம் முதல்வர் ஸ்டாலின்.

ஓட்டு விலை மலிவாய் இருக்காதுன்னு சொல்றார் தலைவர் !!

தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது ஜி.கே.வாசன்.

தமாக வளர்ச்சியை பற்றியும் எப்பவாச்சும் பேசுங்க தலைவரே !!

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எம்ஜிஆர் செல்வாக்கை களவாட பார்க்கின்றனர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.

நீங்க எம்ஜிஆரே மறந்துட்டீங்களே !!

அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.

தேர்தல் ஆணைய திருவிளையாடல்கள் ஆரம்பம் !!

பீகாரில் 36,000 கோடியில் நல திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம் தானே !!

தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி என்று இப்போது கூற முடியாது கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி.

தொகுதி நிலவரம் தெரிஞ்சு போச்சு போல இருக்கு !!

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பிரேமலதா விஜயகாந்த்.

ஆனா உங்களை யாருமே கூப்பிட மாட்டேன் என்கிறார்களே !!

விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு அதிக கூட்டம் வரும் சீமான் விமர்சனம்.

நயன்தாராவை கட்சி ஆரம்பிக்க சொல்றாரோ !!

புதிய கட்சிகளுக்கு முதல்வர் சவாலாக இருக்கிறார் ரஜினி பரபரப்பு பேச்சு.

அதனால்தான் அண்ணன் கட்சி தொடங்கல !!