தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 44 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250817172915915.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ கல்யாணசுந்தர குருக்கள்

இளையத்தான்குடி என்னும் கிராமம் ஸ்ரீ மஹாபெரியவாளின் சரித்திரத்தில் மிகவும் பிரசித்தம் பெற்றது. சுமார் மூன்று வருஷம் ஸ்ரீ பெரியவா இங்கே தங்கி பூஜைகள் செய்துள்ளார்.

ஐந்து தலைமுறையாக இளையத்தான்குடியில் கோயில் கைங்கரியம் செய்து வரும் ஸ்ரீ கல்யாணசுந்தர குருக்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.