(CBI - Cool Bureau of India ??)
பொதுவாக எல்லா எதிர்க்கட்சிகளும் இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது வழக்கம். காரணம் உள்ளூர் விசாரணை அமைப்புகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் சிபிஐ விசாரணை கேட்பது வாடிக்கையான விஷயம் தான். ஆனால் அப்படி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகளின் நிலைமை பற்றிய புள்ளி விவரம் சிபிஐயின் நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கின்றன என்ற ஒரு தகவல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. சி பி ஐ யிடம் ஒப்படைக்கப்பட்ட 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலும், 2281 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலும், 7072 வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கு மேலும் நிலுவையில் இருப்பதாக அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வழக்குகள் சீக்கிரம் விசாரிக்கப்பட்டு நியாயம் வழங்க வேண்டும் என்று தான் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் சிபிஐ வழக்குகளே இந்த நிலை என்றால் சாதாரண வழக்குகள் பற்றி கேட்க வேண்டாம். உதாரணமாக 2ஜி வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா மீது மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்னும் பல ஆண்டுகளாக கிடப்பில் தான் கிடக்கிறது.
இதனால் தான் ஜெயலலிதா ஒரு முறை சிபிஐ என்ன வானத்திலிருந்து குதித்ததா என்று கேட்டார். விசாரணை அமைப்புகளை தவறான அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்தினால் இப்படித்தான் ஆகும். விசாரணை அமைப்புகளில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் விசாரணையும் நேர்மையாக நடக்கும் உண்மை குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள்.
அரசியல் நிர்பந்தத்தால் விசாரணை அமைப்புகள் தவறான பாதையில் செல்கின்றன என்பதற்கு இந்த வழக்கு நிலுவைகளும் தாமதமான நீதியுமே உதாரணம்.
Leave a comment
Upload