கடந்த செப்டம்பர் 15 அன்று பிரதமர் மோடிக்கு 75 வயசு. பிரிட்டிஷ் பார்லிமென்ட்ல எப்படி கொண்டாடி இருக்காங்க தெரியுமா?
மோடியின்பால் எவ்வளவு அன்பு மதிப்பு வெறி இருந்தால், பிரிட்டிஷ் எம்பி பாப் ப்ளேக்மேன் பிரிட்டிஷ் பார்லிபென்ட்ல கொண்டாட்டங்களுக்கு விருந்தளித்துள்ளார். அந்த விருந்தில் வந்திருந்தவர் பெரும்பாலோனோர் மோடியின் முகம் பொறித்த முகமூடிகளை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
*********************************************************************************
கொடுத்த வாக்கு நிறைவேற்றாமல் இரண்டாண்டுகள் பூர்த்தியடைததைக் கொண்டாடி மகிழ்ந்த மும்பைக்கர்கள்
90 அடி போட்டுக் கொடுக்கறேன்னு மும்பை முனிசிபல் கார்பொரேஷன் வாக்கு கொடுத்து இரண்டு ஆண்டு பூர்த்தியாகியதை பூர்த்தியாகாத வாக்கினால் அவதியுறும் சாந்திவலி என்னும் ஏரியாவில் இருக்கும் வாசிகள், கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி, பொய் சொல்லு (ஜூட் போலோ) என்ற கேக்கை வெட்டி கொண்டாடியிருக்கின்றனர்.
அப்படியாவது புத்தி வருதான்னு பார்கலாமேன்னுதான். ********************************************************************************
துல்ஜாபுர் தில்ஜாபவானி தேவி நவராத்ரி விழாவை முதன்மையான மாநில விழாவாக இருக்கும் என மஹாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
செப் 22 முதல் அக் 2 வரை கொண்டாடப்படும் இந்த விழாவில் கிராமிய நிகழ்ச்சிகளான கோந்தாளி நாட்டுப்புறப்பாடல்கள், பரூட் மற்றும் ஜக்காடி எனும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும் என மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்.
12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த கோவிலின் இந்த நவராத்ரி கொண்டாட்டங்கள் இந்த நாட்களில் மட்டும் மஹாராஷ்ட்டிரா, கர்னாடகா மற்றும் தெலிங்கானா எனும் தேசங்களிலிருந்து சுமார் 50 லட்ச்சத்துக்கும் மேலான பக்தர்களை ஈர்க்கும்.
************************************************************************************
ஒரே பிரசவத்தில் நாலு குழந்தைகள்
மஹாராஷ்ட்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதே ஆகும் காஜல் கக்கார்டியாவுக்கு மூன்று ஆண் ஒரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இது மட்டுமா? இந்த தாய்க்கு இதற்கு முன் பிரசவத்தில் ஒரு பெண்ணும், அதற்கடுத்த பிரசவத்தில் ஒரு ஆண் ப்ளஸ் ஒரு பெண் என இரட்டையர் பிற்ந்துள்ளனர்.
*********************************************************************************
மஹாராஷ்ட்டிராவில் தேசீய லோக் அதாலத் செய்த காரியம் என்ன தெரியுமா?
சென்ற சனியன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மூலம் நடந்த மூன்றாவது தேசீய லோக் அதாலத்தின் போது வழக்குக்கு போவதற்கு முன்பான (ப்ரீ லிடிகேஷன்) சுமார் ஏழு லட்சம் கேஸ்களையும், வழக்குக்கு பிந்தைய சுமார் 2 லட்ச கேஸ்களை முடித்து வைத்துள்ளது.
3 லட்சம் பழைய சலான்கள் மூலம் ரூ.30 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற ஆணைப்படி ஒரு மோட்டார் விபத்து 2002 ஆண்டு கேஸ் தீர்க்கப்பட்டு, விபத்தில் நட்டமடைந்த குடும்பத்துக்கு ரூ.14 கோடி இழப்பீடு கொடுக்கப்பட்டது.
Leave a comment
Upload