தொடர்கள்
கதை
இன்னொரு கிரிக்கெட் கதை - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

20250820081313599.jpeg

அந்தக் கிராமத்தின் சிவன் கோயில் திடலில் உள்ள கிரிக்கெட் மைதானத்தின் ஒரு மூலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி

மற்ற கிராமத்துப் பசங்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பான்; பந்து வரும்போது கைதட்டுவான். அவன் பார்வையில் ஒரு கனவு ஒளிரும் – அவனுக்குக் கிரிக்கெட் மீது தீராத காதல்.

பிறப்பிலேயே கால்கள் வலுவற்றிருந்ததால், அவனால் மற்றவர்களைப் போல் ஓடி ஆடி விளையாட முடியாது.அந்தக் கனவுகளுக்கு ஒரு பெரும் தடையாய் இருந்தது

ஒரு நாள், "ஆதித்யா, பக்கத்து ஊர்ல இருக்கற ராபர்ட் மாமா ,மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு உள்ளூர் வீல்சேர் கிரிக்கெட் டீம் ஆரம்பிச்சிருக்காராம்”.என்று அப்பா சொல்லவும்,

“மறுநாள் சிவன் கோயில் மைதானத்தைப் பார்வையிட வந்த ராபர்ட்டிடம்,

“நிஜமாவா ? அங்கிள் என்னாலயும் விளையாட முடியுமா?"

“உனக்கு அந்த இன்வால்வ்மென்ட் இருக்கு. உன்னால் முடியும்”!.

.சக்கர நாற்காலியில் பந்தை விரட்டுவது எப்படி?, சக்கர நாற்காலியில் நகர்ந்து பந்தை பிடிப்பது எப்படி ? என்று ராபர்ட் மூலம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டனர். நிறைய வீடியோக்களை வேறு காண்பித்தார்.

பக்கத்து மாவட்டத்தில் 'நகரத்து மின்னல்கள்' அணியுடன் ஒரு போட்டியில் மோதியது. '

நகரத்து மின்னல்கள்' அணியின் கேப்டன் ரமேஷ், மிகவும் திமிர்பிடித்தவன். " இவங்களை ஜெயிக்கிறது ஒரு விஷயமே இல்ல," என்று மைதானத்திலேயே கேலி பேசினான்.

அவன் எதிர்பார்த்தபடியே அந்தப் போட்டியில் 'கிராமத்துப் புயல்கள்' அணி கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தோல்வியடைந்தது.

"தோல்விதான் முதல் படி. இங்க தோத்தாலும், நம்ம இலக்கு பெருசு. மாவட்ட அளவுல நாம ஜெயிக்கணும்!" பீ சியர்புல்.” என்றார் ராபர்ட்

ஆறு மாதம் கடந்தது 'கிராமத்துப் புயல்கள்' அணி, தன்னம்பிக்கையுடன் எந்த டீமாக இருந்தாலும் அதை ஜெயிக்கக் கூடும் என்கிற பாசிடிவ் மனது தெரிந்தது.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, மாவட்ட அளவிலான வீல்சேர் கிரிக்கெட் போட்டி அறிவிக்கப்பட்டது.

கிராமத்துப் புயல்கள்' அணி 'நகரத்து மின்னல்கள்' அணியை மீண்டும் சந்தித்தது.

இந்த முறை,, 'கிராமத்துப் புயல்கள்' அணி மாவட்ட சாம்பியன்ஷிப்பை வென்றது.

.இந்த வெற்றி ஆதித்யாவிற்கு மாநில அளவிலான வீல்சேர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மாநில அணியின் தேர்வு முகாமில், ரமேஷும் இருந்தான். "இங்கயும் வந்துட்டியா? ஸ்டேட் டீம்னா சாதாரணமா நெனச்சியா? உன்னை உள்ள விடமாட்டேன் பாரு."பல இடையூறுகளைச் செய்தான் ரமேஷ்.

ஆனால், ஆதித்யாவின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம், அவனை மாநில வீல்சேர் கிரிக்கெட் அணியில் ஒரு முக்கிய வீரனாக இடம் பெறச் செய்தது.

அணியில் பிளவு வரக்கூடாது என்று எண்ணி ஆதித்யா தனது கேப்டனிடம் கூட இதைச் சொல்லவில்லை.

அவனது செயல்பாடு, அவனை இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் தேர்வு முகாமுக்கு இட்டுச் சென்றது.

இந்த முறை, தேர்வு முகாமில் உள்ள சிறந்த பயிற்சியாளர்கள், ஆதித்யாவின் அசாதாரணமான திறமையைக் கண்டனர்.

“பட்டியில் இருந்து பட்டணம் வரைக்கும் கிரிக்கெட் இன்றைக்கு மிகப் பிரபலம்.கோடி கோடியாய் விளையாட்டு வீரர்களுக்குச் சம்பளம்கொடுக்கப்படுகிறது.”

“என் ஆதங்கம் இதே கிரிக்கெட் பார்வை இல்லாதவர்கள் விளையாடி வரும் போது யாரும் சப்போர்ட் செய்வதில்லை. அதே மாதிரி மாற்றுத் திறனாளிகள் வீல் சேர் மூலம் விளையாடும் போது பிரபலமாக வில்லையே என்றார் ஆதித்யாவின் அப்பா.

“ஆமாம் சார் அதற்குப் பல காரணிகள் இருக்கு.”

“இதற்கு ஸ்பான்சர் கிடைப்பது கிடையாது. பிசிசிஐ சப்போர்டும் அவ்வளவா இல்லை.

வீல்சேர் கிரிக்கெட்டுக்கு என்று அதிகாரபூர்வமான, ஐ.சி.சி. (ICC) நடத்தும் உலகக் கோப்பைத் தொடர் இன்னும் நடத்தப்படவில்லை. மீடியா வெளிச்சம் இல்லை

ஆனால், சர்வதேச அளவில் சில நாடுகள் பங்கேற்கும் கோப்பைத் தொடர்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.

ஆனால் ஒரு நாள் இதுவும் பேசப்படும் என்கிற நிலை வரும் என்றார் ராபர்ட்

மாற்றம் ஒன்றே மாறாதது.

துபாய் கிரிக்கெட் மைதானம அன்று துபையில் temperature: 42°C

நான்கு நாடுகள் பங்கேற்ற சாம்பியன்ஷிப் 2(Four Nation Wheelchair Cricket Championship): பங்கேற்ற ஒரு போட்டித் தொடர் இதில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இதோ பைனலில் இலங்கை.

டாஸ் ஜெயித்துப் பவுலிங் ஆதித்யாவின் ஆல்ரவுண்ட் திறமை,,சக்திவேலின்லெக் ஸ்பின்.பவுலிங் பீல்டிங் ரமேஷின் வேகமான பவுலிங் என ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை முழுமையாகக் கொடுத்ததால் இலங்கை 186 ரன்கள் ஆல் அவுட்.

T 20 கடைசி ஓவரில் இந்தியாவுக்கு வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டன. 9 விக்கெட் போயிருந்தது.

அஞ்சு பால்கள் மட்டுமே இருந்தது.

ஆதித்யா ஸ்ட்ரைக்கில் இருந்தான். இரண்டாவது பால் ஆப் ஸ்டம்ப் ஒட்டி போனது. தொட்டால் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகும் என்று தொடாமல் விட்டான். மூன்றாவது ஷார்ட் பால் குனிந்து கொண்டான். .நாலாவது பாலில் ஒரு பவுண்டரி,

கடைசிப் பால். என்ன ஆகப் போகுதோ? .பரபரப்பு மைதானம் முழுவதும் .கடைசிப் பாலும் ஷார்ட் பாலாக வந்ததைத் தான் சக்தி முழுவதும் திரட்டி

ஒரு அற்புதமான சிக்ஸர் அடித்து, இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தான்! ஆதித்யா.

மைதானம் முழுவதும் இந்தியக் கொடிகளுடன் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

மன உறுதியும், திறமையும் இருந்தால் எந்தத் தடைகளையும் தகர்த்து எறியலாம் என்பதைக் கோப்பையை உயர்த்திக் காண்பித்தான்.

அந்த விளையாட்டின் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது.

பிரஸ் மீட்டில் ஆதித்யா சொன்னான் .

“We may not stand on the field.

But we rise in people’s hearts.”.

அவனது அடுத்த லட்சியகனவு உலகக் கோப்பை.