தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250827091318650.jpg

Heading : வருமான வரி கணக்குகள் தாக்கலும் குமுறலும் - பால்கி

Comment : பட்டயக் கணக்காளர் களின் பகல் இரவு அவர்கள் கையில் இல்லை• நாட்டின் முன்னேற்றம் கருதி உழைப்பவர்கள்• சபாஷ் திரு• பால்கி அவர்களே

கண்மணி, சென்னை

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : அருமையான பதிவு

Ujjivanam, Chennai

Heading : ஆத்தங்கரை அமுதம் - கி.ரமணி

Comment : my memories gone back. wonderful days... very beautifully written. Rao

Heading : அதிசய அமிதாப் - பால்கி

Comment : அமிதாப் பற்றி தெரியாத பல தகவல்களை அளித்த திரு• பால்கி அவர்கள் திறமை சாலி தான்• வயது மூப்பு அன்றாட வாழ்க்கைக்கு தடையில்லை• இரத்த தானம் பற்றிய தகவல் விழிப்புணர்வை தூண்டுகிறது

Ujjivanam, Chennai

Heading : இசை இமயம் மக்களின் மேஸ்ட்ரோ.. என்றென்றும் ராஜா !! - திருப்பூர் சேகர்

Comment : இளைய ராஜா என்றென்றும் இளமையான ராஜா தான்• தன் பாடல்களால் அனைவரையும் இளமையான ராஜா க்களாக உணரச்செய்பவர்

கண்மணி , சென்னை

Heading : ஆத்தங்கரை அமுதம் - கி.ரமணி

Comment : பாட்டியின் புறப்பாடு தத்ரூபமான விவரிப்பு..கண்களில் அந்தி சூரியன் தெரிகிறது...காதுகளில் தாமிரபரணியின் சலசலப்பு கேட்கிறது... பிரமாதம்

K Sreenivasan , Chennai

Heading : புரட்டாசி படையல்... - பா.அய்யாசாமி

Comment : Very nice

Seethalakshmi , Thiruverumbur

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : மோடி ஜியின் 75வது பிறந்தநாள் உலகின் ஒவ்வொரு கோடியிலும் கொண்டாடியது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் 👏👏 லோக் அதாலத் அமைப்பு இவ்வளவு திறம்பட செயல்பட்டதை பாராட்டியே ஆக வேண்டும்.... நம் நாட்டுக்கு இதை போல பல லோக் அதாலத் அமைப்புகள் தேவை...

Sriram Srinivasan, Chennai

Heading : வருமான வரி கணக்குகள் தாக்கலும் குமுறலும் - பால்கி

Comment : இந்த கெடுபுடி அதனால் வரும் கண்விழிப்பு, கடைசி நேர தொடர்ந்து சேவை எல்லாவற்றிற்கும் CA ஆடிட்டர் களை பாராட்டியே ஆக வேண்டும்.... அரசாங்கம் தங்கள் எதிர்பார்ப்பை முன்னாடியே இணைய தள பராமரிப்பு கம்பெனிக்கு தெரிவித்தால் இதை முற்றிலும் தவிர்க்கலாம்..... அதுவும் அதே தவறுகளை (காலங்கடந்து அறிவிப்பது) வருடாவருடம் செய்வதுதான் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது

Sriram Srinivasan, Chennai

Heading : அண்ணாமலை நல்லவரா கெட்டவரா - விகடகவியார்

Comment : ஒரு நல்ல மனிதரை, ஐபிஎஸ் அதிகாரியை, வருங்கால தலைவராக வருவதற்கு முற்றிலும் தகுதியான, நல்ல படிப்பாளியை, நாம் படிப்படியாக இழந்து வருகிறோம்.... இழப்பு தமிழ் நாட்டுக்கு தான்......

Sriram Srinivasan, Chennai

Heading : தவறான பாதையில் ...

Comment : அரசியல் தலையீடுகள் தான் இந்த நிலைமைக்கு காரணம்.... அதோடு மட்டுமல்லாமல் சீபிஐ ஒழுங்காக விசாரணை செய்து தப்பு செய்தவர்களை கைது செய்தாலும் (2ஜி வழக்கு உள்பட) அரசியல் செல்வாக்கு அல்லது நீதிபதிகள் கொடுக்கும் இடைக்கால தடையை பயன்படுத்தி வெளியே வந்து விடுகிறார்கள்....

Sriram Srinivasan, Chennai

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : உப்புமா ஆரோக்கியமான உணவு என்றால இல்லத்தரசி களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி

கண்மணி, சென்னை

Heading : உண்டென்றால் அது உண்டு - கே பி யெஸ்

Comment : மனிதனுக்கு கஷ்டம் வரும் போது தான் உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை ன்ற உணர்வு வருகிறது• இறைவன் அப்படி இல்லை • எப்போதும் நடுநிலை தன்மை வாய்ந்தவர்

கண்மணி, சென்னை

Heading : மும்பை கண்பதி 2025 - பால்கி

Comment : சூப்பர்• கணபதியை அடுத்த வருடம் சீக்கிரமே வா என்ற பாடலை நினைவு கூறிய திரு• பால்கி க்கு மிக்க நன்றி•

Ujjivanam, Chennai

Heading : யாருக்கும் வெட்கமில்லை !!

Comment : அருமையான பதிவு... என்னப் போன்ற எத்தனையோ பேரின் மனதின் குரலாக ஒலிக்கிறது உங்கள் குரல்/பதிவு.எல்லா கட்சித் தலைவர்களும் பாரபட்சம் இல்லாமல் எப்படி பொய் சொல்கிறார்கள். நாங்கள் தான் உத்தமர்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள். உண்மையில் நம்மை ஏமாற்றி இல்லை நாம் ஏமாற்றப்பட்டு அவர்கள் தொடர்ந்து தம் குலத்தொழிலாக நம்மை சுரண்டுவதை செய்கிறார்கள். இதை எல்லாம் நான் என் ஓட்டு உரிமை வயது முதல் பார்த்து வருவதால் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது உத்தமர் வேட்பாளராக இருக்கிறாரா என்று தேடி, போடாமல் இருந்து விடுவேன்.என் நண்பர்கள் எனக்கு அறிவுரை சொல்வார்கள், நான் என் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று... சிரிப்புதான் வரும்...

கொலு போட்டிக்கு வாசகர்கள் தொடர்ந்து படங்கள் அனுப்பி வருகிறார்கள். அடுத்த வாரம் அனைத்தும் பிரசுரிக்கப்படும்.