திருமலை எம்பெருமான் புரட்டாசி மாத ஆர்ஜித பிரமோற்சவம் கோலகலமாக தொடங்கி நிறைவடைந்தது.
பூலோக வைகுண்டம் என்று ஏழுமலைகள் சூழ்ந்த திருமலையை பக்தர்கள் நின்ற கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சீனிவாசனை தரிசனம் செய்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலை எம்பெருமானுக்கு பட்டு அங்க வஸ்திரம் காணிக்கையாக தந்து சிறப்பித்தார்.
2026 ஆண்டுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டர்கள் , பஞ்சாங்கம் மற்றும் டைரிகளை ஆந்திரமுதல்வர் தன் குடும்பத்துடன் வந்து வெளியிட்டார்.
கருட சேவையன்று திருமலையில் அதிக பக்தர்கள் கூட்டம் கூடுவதை காவல்துறையினர் கண்காணித்து குறைத்தனர்.
இஸ்ரோ செயற்கை கோள் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து அசத்தியது.
இந்த வருட பிரமோற்சவத்தில் நான்கு மாட வீதிகளில் எம்பெருமான வாகன சேவையை பக்தர்கள் கண்டு ஆனந்தமடைந்தனர்.
திருமலை பிரமோற்சவத்தில் கொடியேற்றம் அன்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் உடுத்திய வஸ்திரம், மாலை ,கிளிகள் பிரமோற்சவ நாயகன் எம்பெருமானுக்கு சமர்பணம் செய்யப்பட்டது.
சென்னை கேசவ பெருமாள் கோயிலிருந்து வந்த திருப்பதி குடைகள் பிரமோற்சவத்தில் எம்பெருமான் மாடவீதிகளில் வரும் போது ஜொலிப்புடன் காணப்பட்டது.
திருமலையில் எம்பெருமான் பிரசாதம் என்னும் அன்னதான கூடத்தில் பக்தர்கள் எவ்வளவு பேர் வந்தாலும் வாழை இலை போடப்பட்டு அன்னதானம் பக்தர்களுக்கு பரிமாறபட்டது தான் ஹைலைட் .
விகடகவி வாசகர்களுக்கு திருமலை பிரமோற்சவத்தின் முக்கிய சேவைகளை புகைப்படங்கள் பதிவிட்டுள்ளோம்.
த்வஜரோஹனம்
பெரிய ஷேச வாகனம்
சின்ன ஷேச வாகனம்
ஹம்ச வாகனம்
சிம்ம வாகனம்
முத்து பந்தல் வாகனம்
கற்பக விருட்ச வாகனம்
சர்வ பூபால வாகனம்
மோகினி அவதாரம்
கருட வாகனம்
ஹனுமந்த வாகனம்
தங்க ரத ஊர்வலம்
கஜ வாகனம்
சூர்ய பிரபை வாகனம்
சந்திர பிரபை வாகனம்
ரதோற்சவம்
குதிரை வாகனம்
சக்ர ஸ்நானம்
த்வஜ ஆவரோஹனம்
.
.
Leave a comment
Upload